கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வேலை உறுதி திட்டம் பெயரளவுக்கே நடந்துள்ளது. அதிக மழை பெய்திருந்த போதிலும், நீர் நிலைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.கடலூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தில் செய்த பணிகள், பெயரளவிற்கு நடந்துள்ளது. உதாரணத்திற்கு விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட குளத்திற்கு வரத்து வாய்க் கால் சீரமைக்கப்படவில்லை. இதனால் குளம் வறண்டு கிடக்கிறது. அண்ணாகிராமம் ஒன்றியம் கோழிப்பாக்கம் ஊராட்சி குளத்திற்கு நீர் வரத்து வாய்க்கால் பெயரளவில் சீரமைக்கப்பட்டுள்ளது. சில ஊராட்சிகளில் ஒரே நீர் நிலை அடுத்தடுத்த ஆண்டுகளில் சீரமைக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டைவிட நவம்பரில் 15 சதவீதமும், டிசம்பரில் 69 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
இத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட நீர் நிலைகளில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை வறண்டும், புதர் மண்டியும் உள்ளது.விழுப்புரம் மாவட்டம்: ஊரக வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட மற் றும் சீரமைக்கப்பட்ட ஏரி, குளங்களில் ஒப்புக்காக செய்த பணிகளால் மீண்டும் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் தண் ணீர் சேமிக்க முடியாமல் வறண்டே காணப்படுகிறது.திருவெண்ணைநல்லூர் அடுத்த பேரங் கியூர் குச்சிப்பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றில் வேலை நடந்தது. ஏரியில் தண்ணீர் நின்றதால் ஆற்றில் வேலை கொடுத்து கூலி கொடுத்துள்ளனர். ஆற்றின் கரையை பலப்படுத்தி உபயோகமான வேலை செய்திருக்கலாம்; அதுவும் இல்லை. வி.அரியலூர் ஊராட் சியில் ஒரே வாய்க்காலில் 10க்கும் மேற் பட்ட முறை வேலை செய்து பணத்தை விரயமாக்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக