கடலூர் மாவட்டத் தில் 25,592 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதுகின் றனர். ஆரல், ஓரல் தேர்வுகள் வரும் 4 மற்றும் 5 தேதிகளில் நடக்கிறது. செய்முறைத் தேர்வு 8ம் தேதி முதல் துவங்குகிறது.பிளஸ் 2 பொது தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. செய்முறைத் தேர்வுகள் 4ம் தேதி துவங்குகிறது. 4 மற்றும் 5ம் தேதிகளில் ஆங்கிலம், தமிழ் பாடங்களுக்கான ஆரல், ஓரல் (கேட்டல் திறன், பேசுதல் திறன்) எனப்படும் அக மதிப் பீட்டு தேர்வுகள் நடக் கிறது.
இதனைத் தொடர்ந்து 8ம் தேதி முதல் 20ம் தேதிவரை அறிவியல் பாடங் களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், தொழில் கல்வி செய்முறைத் தேர்வுகள் நடக்கிறது.
இதற்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி கடந்த வாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளா கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தொடர்ந்து மாவட்ட கல் வித் துறை சார்பில் வினாத் தாள் அச்சடிப்பது, "பேட்ச்' பிரிப்பது உள்ளிட்ட பணிகள் முடிந்து மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மாவட்டத்தில் 12208 மாணவர்கள், 13,384 மாணவிகள் என மொத்தம் 25,592 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களைவிட 1,176 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.
இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 99 பள்ளிகளைச் சேர்ந்த 8293 மாணவர்களும், 9909 மாணவிகளும், விருத்தாச்சலம் கல்வி மாவட்டத்தில் 54 பள்ளிகளைச் சேர்ந்த 3915 மாணவர்களும், 3475 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
வரும் 8ம் தேதி துவங்கவுள்ள செய்முறைத் தேர் விற்கான ஆயத்தக் கூட்டம் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள் ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரிகள் கடலூர் கணேசமூர்த்தி, விருத்தாச்சலம் குருநாதன், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழிதேவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 153 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதில் பள்ளிகளில் நடத் தப்படும் செய்முறைத் தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக் கினர். அதில் செய்முறை தேர்வுகள் கால அட்டவணையில் உள்ள தேதிகளில் தவறாது நடத்த வேண்டும்.
மருத்துவ மற்றும் விபத்து காரணங்களால் குறித்த "பேட்ச்'ல் தேர்வு எழுத இயலாத மாணவர்கள் உரிய கால அட்டவணைக்குள் வேறொரு நாளில், வேறொரு "பேட்ச்'ல் செய் முறைத் தேர்வை நடத்தி குறிப் பிட்ட இறுதி நாட்களுக் குள் முடிக்க வேண்டும்.
தேர்வு நாளன்று ஆய்வகத்தில் அகத்தேர்வர், புறத் தேர்வர் அனுமதிக்கப் பட்ட ஆய்வக உதவியாளர் கள் மட்டுமே இருத்தல் வேண்டும். செய்முறைத் தேர்வு சார்பாக அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை முன்கூட் டியே வழங்க வேண்டும். செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர் தலைமை ஆசிரியர்களிடம் செய்முறை தேர்விற்கான கால அட்டவணை, மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் மற்றும் "பேட்ச்' பட்டியல் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக