கடலூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து 10 பேர் கொண்ட குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் ஊழியர்கள் மனிதநேயமின்றி நடந்து கொண் டதை கண்கூடாக பார்க்க முடிந் தது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் கூறினார்.
கடலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேடு, சிகிச் சைக்கு லஞ்சம், நோயாளிகளிடம் பரிவு காட்டாதது போன்ற பல புகார்கள் சுகாதாரத்துறைக்கு வந் துள்ளன. அமைச்சர் பன்னீர் செல் வம் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் தலைமையில் கண்காணிப்பாளர் ரங்கராஜன், ஈஸ்வரன், புள்ளிவிவர உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிரடி படையினர் மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நோயாளிகள் போல் மாறுவேடத்தில் ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று (நேற்று) எங்கள் குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளது தெரிய வந் துள்ளது. ஊழியர்கள் நோயாளிகளிடம் மனிதநேயம் இல்லாமல் நடத்து கொண்டுள்ளனர். வயிற்று வலியால் துடித்த நோயாளி ஒருவருக்கு 2 மணி நேரமாக ஸ்கேன் எடுக்காமல் காக்க வைத்ததும் கண்கூடாக காண நேர்ந்தது. சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற் றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள ஸ்டோர், ஆபீஸ், மகப் பேறு, சமையல் கூடத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டு மாற்றியமைக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. எக்ஸ்ரே பிலிம் போதுமான அள விற்கு தட்டுபாடின்றி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் ஏழை மக்களுக்கு மருத் துவம் சென்றடையவேண்டும் என்பதேயாகும். ஆய்வின் போது தவறு செய்தவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். சிலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நடவடிக்கை குறித்து ஆய்வு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். இது போன்ற அதிரடி ஆய்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இவ் வாறு கூடுதல் இயக்குனர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக