கோரிக்கை பதிவு

ரோட்டரி சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரோட்டரி சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

போலியோ சொட்டு மருந்து முகாம்: ரோட்டரி சங்கம் ஏற்பாடு

ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கடலூரில் நடந் தது.
ரோட்டரி சங்க போலியோ ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் தாயுமானவன், சங்க தலைவர் டாக் டர் கோவிந்தராஜ், மிட்டவுன் ரோட்டரிசங்க தலைவர் சத்தியநாராயணன், செயலாளர் ஜனார்த் தனன், பயிற்சியாளர் அருளப்பன், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, புனிதா பரத் முருகன், ஜெயபிரகாஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.பின்னர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
போலியோ வைரஸ் முதுகு தண்டுவடத்தை முதலில் தாக்குகிறது. இதனால் கால்கள் பாதிக்கும். போலியோவை ஒழிக்க ரோட்டரி சங்கங்கள் நிதி உதவி வழங்கி வருகிறது. ரோட்டரி சங்கங்கள் முதன் முதலில் போலியோவை ஒழிக்க 120 மில்லியன் டாலர் பணம் கொடுத்தது. இந்தியாவில் 2009 அக்., 30 வரை 528 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் 2004 ம் ஆண்டு ஒருவர் பாதிக்கப் பட்டார்.  வரும் 7ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் நடக்கிறது. போலியோ மருந்தால் பக்கவிளைவுகள் இல்லை.  வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளுக்கு சிங்க் கலந்து உப்புக்கரைசலுடன் சேர்த்து கொடுக்கலாம். இந்த நோய் நரிக்குறவர்கள், ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்கிறவர்கள் மூலம் தான் பரவுகிறது.  போலியோ விழிப்புணர்வு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது என்றார்.