கோரிக்கை பதிவு

கூடுதல் கட்டணம் வசூல்: கிருஷ்ணசுவாமி பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி இறுதியாண்டு பயலும் மாணவ மாணவியர் சுமார் 200 பேர், கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:இந்த கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரியில் இ-லேர்னிங் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 8 ஆயிரம் வசூலித்து இருக்கிறார்கள். இக்கட்டணம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்குக் கிடையாது என்று திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நிர்வாகத்தை அணுகியபோது மாணவர்களைத் துறைத் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். கல்லூரிக்குள் நுழைய விடாமல் கல்லூரி அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். போராட்டத்தில் பங்கேற்க வெளியேற முயன்ற சில மாணவிகளை, கல்லூரி விடுதியில் தனி அறையில் அடைத்தனர். அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு மாணவியை அடிக்க முயன்றனர். மாணவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றோரிடம் தவறாகப் பேசியுள்ளனர்.புகார்களுக்கு நிர்வாகத்திடம் பேசி, எங்களின் படிப்புக்கு எவ்வித இடையூறும் பின்விளைவும் இல்லாத நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் மனுவில் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இயக்குநர் சி.ஏ.தாஸ்,  கடலூர் வாசிப்போர் இயக்க அமைப்பாளர் கவிஞர் பால்கி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சிவபாலன் உள்ளிட்டோர் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக