கோரிக்கை பதிவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1,333 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்: கவர்னர் பர்னாலா 22-ந்தேதி வழங்குகிறார்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 77-வது பட்டமளிப்பு விழா வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் நடக்கிறது.
விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு 2008-2009-ம் கல்வி ஆண்டில் பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களையும், பல் வேறு அறக்கட்டளை பரிசு களையும் வழங்குகிறார்.
விழாவில் நேரடியாக 1, 333 மாணவர்களுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மை தேர்ச்சி பெற்ற 145 மாணவ- மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசுகளையும் கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.
இதில் 264 (எம்.பில், 62 பி.எச்டி, 201,டி.எஸ்.சி.1) மாணவர்கள் ஆராய்ச்சி பட்டங்கள் பெறுகிறார்கள்.
நேரடி சேர்க்கை மூலம் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள் 6,114 பேர், தொலைதூர கல்வி இயக்க கம் மூலம் பட்டம் பெறும் மாணவர்கள் 97,413 பேர் உள்பட மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 27 மாணவ- மாணவிகள் பட்டம் பெறுகின்றனர்.
விழாவில் புதுடெல்லி மானியக்குழு துணை தலைவர் பேராசிரியர் வேத் பிரகாஷ், கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி எம்.பி. கலந்து கொள்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் (டாக்டர் ராமநாதன்) ஆண்டறிக்கை வாசிக்கிறார். விழா ஏற்பாடுகளை பல்கலைக் கழக நிர்வாகம் செய்து வருகிறது.
இவ்வாறு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் கூறினார்.
பேட்டியின் போது துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா 21-ந் தேதி மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர் பங்களா வந்தடைகிறார். இதற்காக பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஹெலிகாப்டர் தளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக