கோரிக்கை பதிவு

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் விரைவில் சுரங்க பாதை பணிகள் தொடங்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல்

கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களை தொடர்ந்து ரூ.14 கோடி செலவில் சூரப்பன் சாவடியில் மேம்பாலமும் கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து ரூ.14 கோடி மதிப்பீட்டில் கடலூர் சூரப்பன் சாவடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் லாரன்ஸ் ரோட்டில் சுரங்ப்பாதை அமைக்கும் பணி நிதி ஒதுக்கீடு செய்தும் நடைபெறவில்லை. சுரங்கப்பாதை அமைக்க கோரி பல்வேறு பொதுநல இயக்கங்கள் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கத்தினரும் சுரங்கப் பாதை அமைக்க கோரி போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த நிலையில் கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மருதவாணனுக்கு கடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 5-10-2000 அன்று ரூ.14 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்த வகையில் லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதைக்கு ரூ.1 கோடி அனுமதி அளிக்கப்பட்டது. இது குறைவான மதிப்பீட்டில் இருப்பதால் சுரங்கப்பாதை திட்டம் ரூ.5.37 கோடியில் தயாரிக்கப்பட்டு மற்றும் மின் கம்பிகள் குடிநீர் குழாய்கள் விளக்கு வசதி உள்ளிட்டவற்றிற்கு ரூ.1.83 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.7.20 கோடி திட்டத்திற்கு நிதித்துறை அனுமதி அளித்துள்ளது.

லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதை வடி வமைப்பு என்பது தலைமை பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) இறுதிப்படுத்தப்படுகிறது. இறுதியில் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்ட உடன் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் லாரன்ஸ் சாலையில் உடனடியாக தொடங்கப்படும். லாரன்ஸ் சாலையில் ரயில் போக்குவரத்து ஆரம்பித்தாலும் இந்த சுரங்கப்பாதை வடி வமைப்பின்படி இப்பணிகள் தொடங்கும்.

இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக