தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய்துறை வளர்ச்சி பணிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். குத்தாலம் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்திலும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்கள். அதன்படி வருகிற 21-ந் தேதி மதிப்பீட்டு குழுவினர் கடலூர் வருகிறார்கள். பின்னர் மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்கள்.
கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார்கள். உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், தொடக்க பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை மற்றும் பணிகள் வளர்ச்சி குறித்து இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
பின்னர் அன்று மாலை கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக