கோரிக்கை பதிவு

கடல்சார் மீன்பிடி மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் மீனவர் பேரவை தலைவர் அறிவிப்பு

மீனவர் களை பாதிக்கும் கடல்சார் மீன் பிடி ஒழுங்கு முறை மசோதாவை எந்த வடிவத்திலும் தமிழ்நாட்டிற் குள் அனுமதிக்க மாட் டோம் என்று தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன் பேசினார்.
கடல்சார் மீன்பிடி ஒழுங்கு முறை மசோ தாவை எதிர்த்து 17 ம் தேதி டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசுகளையும் மீனவர் அமைப்பின் பிரதிநிதி களை கலந்து பேசிய பிறகே மசோதா குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணா நிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் மசோதாவை தற்காலிகமாக கைவிடுவதாகவும் கடலோர மாநில அரசுகளையும் மீனவர் அமைப்புகளை கலந்து ஆலோசித்த பிறகே முடிவெடுப்போம் என்று மத் திய அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மீனவர் பேரவை டில்லியில் நடத்தவிருந்த கண்டன ஆர்பாட்டத்தை கைவிட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தயா ராக அனைத்து ஏற்பாடுகளையும் செய்த மீனவர் கிராம மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காக தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவனத்தலைவர் அன்பழகன் கடலூர் தேவனாம்பட்டினம் வந்தார். அங்கு கிராம மக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிராம மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது; கடலும், கடற்கரைகளும் மீனவர்களின் பிறப்புரிமை. குறிப்பிட்ட தூரத்தில்தான் மீன்பிடிக்க வேண்டும். சிறிய படகுகளைதான் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வகை மீன்களைதான் பிடிக்க வேண்டும் உள் ளிட்ட ஏராளமான கட்டுப்பாட்டுகளுனான மீன் பிடி மசோதா மீனவர்க ளின் நலன்களுக்கு முற்றி லும் எதிரானது. இதை எதிர்த்து டில்லியில் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு மசோ தாவை கைவிட்டதாக மத் திய அரசு அறிவித்துள் ளது.மீனவர்கள் ஒற்றுமை யாக இருந்தால் யாரும் மீனவர்களை அழிக்க முடியாது.
மீனவர்களின் நலன் களை பாதிக்கும் இந்த மசோதா எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை தமிழ்நாட்டில் நாம் அனுமதிக்கமாட்டோம். இந்திய கட லோர கப்பற்படை வீரர் களை இலங்கையர்கள் கடத்திச் சென்றது நம்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம். நாட்டின் பாதுகாப்பு கேடயமாக மீனவர்கள் உள்ளனர். நாடடை பாதுகாக்க எந்தவிதமான தியாகத்திற்கும் மீனவர்கள் தயாராக உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். மீனவர்களை கப்பல்படை தாக்கியது கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது மீனவர்பேரவை வழக்கு தொடர உள்ளது. மீனவர்களையும் மீனவர்களின் வாழ்வாதாராங்களையும் பாதுகாக்க நாம் ஒற்றுமையுடன் இருந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலத் துணைத் தலைவர் தாமோதரன், கடலூர் மாவட்டத் தலை வர் சுப்புராயன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் விந்தியன் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக