கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டை தடுக்க, கொள்ளையர்களைக் கண்டால் சுட்டு பிடிக்க த்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.பி., கூறினார். கடலூர் கோண்டூரில் அமைக்கப்பட் டுள்ள போலீஸ் செக்போஸ்டை நேற்று மாலை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமீப காலமாக திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. மாவட் டத்தில் சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுள்ளதால், வேறு வழியில் சம்பாதிக்க இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க 6 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் இனி துப்பாக்கி, வான்செய்தி கருவிகளுடன் சப் இன்ஸ் பெக்டர்கள் செயல்படுவர்.
பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக் டர்கள் தங்கள் நிலைய பகுதியில் பெண்கள் குழுக்களை அமைப்பர். அக்குழுவினரிடம் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் போன் எண்கள் கொடுக்கப்பட்டு அன்னியர்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.முதல் கட்டமாக இன்று முதல் கடலூர், பண்ருட்டி சப் டிவிஷன்களில் இரண்டு ஜீப், நான்கு மோட்டார் சைக்கிள் களில் போலீசார் துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கி யுடன் நகரின் உட்பகுதி மற்றும் 2 கி.மீ., சுற்றளவில் உட் பகுதிக்கு ரோந்து செல்வர். 24 மணி நேரமும் செயல்படும் இவர்கள், கொள்ளையர்க ளை கண்டால் சுட்டுப் பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெய்வேலி, சிதம்பரம் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். டி.எஸ்.பி.,க்கள் அலுவலகம் எண்கள். கடலூர் 04142-284355, சிதம்பரம் 04144-222257, விருத்தாசலம் 04143-238401, நெய்வேலி 04142-242022, சேத்தியாத் தோப்பு 04144-244341, பண்ருட்டி 04142-242022, திட்டக்குடி 04143-255211, காவல் கட்டுப்பாட்டு அறை 04142-284341 மற்றும் மாவட்ட தனிப்பிரிவு 04142-284333 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக