சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர் கள் இருவரை காணவில்லை என்ற தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் நேற்றிரவு பாலமான் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன் ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதம்குமார் (20) நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் அவர் அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சகமாணவர்கள் பல்கலை தேர்வுத்துறை அலுவலகம், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, அங்கு நின்றிருந்த வாகனங்களை உடைத்தனர். அவர்களை போலீசார் விரட்டினர்.அதில் மாணவர்கள் பலர் அருகில் உள்ள பாலமான் ஆற்றில் குதித்து தப்பினர். அவர்களில் இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் சுமித்குமார் (22) இறந்தார். இந்த சம்பவங்களினால் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டியதில் ஆற்றில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என்ற தகவல் நேற்று மாலை பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு தீயணைப்பு படையினர் பாலமான் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பல்கலை பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக