கடலூர் பகுதியில் போலீசாரின் அலட்சியம் காரணமாக தொடர் கொள்ளை அதிகரித்து வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகமூடிக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் கொள்ளையர்கள் புதுப்புது யுத்திகளை கையாண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 5 கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த 14ம் தேதி பெரியப்பட்டில் ரோலிங் ஷட்டர் பூட்டுகளை ஜாக்கி மூலம் உடைத்து 9 கடைகளில் திருட்டு நடந் துள்ளன. மறுநாள் முட்லூரில் 6 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை போனது. இரண்டு நாள் முன்பு நல்லாத்தூரில் அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து தி.மு.க., பிரமுகர் வீட் டில் கொள்ளையர்கள் புகுந்து 5 லட்சம் பாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு கடலூர் ரட்சகர் நகரில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டை கொள்ளையடிக்க முயன்றனர். அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே தப்பி சென்றவர்கள் அரை கி.மீ., தூரத்தில் உள்ள கோண்டூர் சுப்புலட்சுமி நகரில் கணவரை தாக்கி மனைவி கழுத்தில் இருந்த தாலிசரடை பறித்துச்சென்றனர். போலீசாரின் அலட்சியம் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
அமாவாசையன்று திருட்டு அதிகமாக இருக்கும் என்பதால் வழக்கமாக போலீசார் மிகவும் உஷார் படுத்தப் பட்டு இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படுவதுடன், இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்படும். ஆனால் கடலூர் புதுநகரில் ஒன்னரை கி.மீ., ரேடியசில் பகுதியைக் கூட போலீசார் கண்காணிக்காமல் கோட்டை விட்டுள்ளனர்.சாதாரணமாக புது நகர் எஸ்.ஐ., கள் தொலைபேசிகள் எப்போதும் "பிசி' யாகவே இருக்கும். பொதுமக்கள், பத்திரிகை நிருபர்கள் ஏதாவது தகவல் சொல்ல நினைத்து போன் செய்தால் கூட உடனே "கட்' செய்து விடுவர். பொது மக்களிடமிருந்து தகவல் பெறவே விரும்பாதவர்கள், எங்கே இருந்து சேவை செய்யப்போகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக