கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க கோரிக்கை
மிகவும் பின் தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பாதுகாப்பு பேரவை முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அப்பேரவை நிறுவனத் தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அண்டை மாவட்டமான விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி முயற்சியால் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.அது போல அனைத்து வகையிலும் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் கடலூரிலோ, வடலூரிலோ அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே விரைவில் கடலூர் மாவடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை,
மருத்துவக்கல்லூரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக