கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
ரேஷன் கடையை முற்றுகையிட்ட மக்கள்
தொடர்ந்து தாமதமாகத் திறக்கப்பட்டுவரும் ரேஷன் கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர் .விலைவாசி விஷம்போல் உயர்ந்து வரும் நிலையில், ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீதான புகார்களும் அதிகரித்து வருகிறது.கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன்கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடை தொடர்ந்து, தாமதமாகத் திறக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். மேலும் இக்கடையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் முறையாக நடைபெறுவது இல்லை என்றும், பல நாள்கள் மூடியே கிட்டப்பதாகவும் பொதுக்கள் தெரிவிக்கிறார்கள். துவரம்பருப்பு, கோதுமைமாவு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.செவ்வாய்க்கிழமை காலை 10-30 மணி ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படாதது குறித்து மக்கள் பெரிதும் ஆத்திரம் அடைந்தனர். ரேஷன் கடை விற்பனையாளருக்கு எதிராக சிறிது நேரம் குரல் எழுப்பினர். பின்னர் விற்பனையாளர் வந்து கடையைத் திறந்தபோது, அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கடலூர்,
கடலூர் நகராட்சி,
நுகர்வோர்,
பொதுமக்கள்,
ரேஷன் கடை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக