கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூர் அரசு மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் கருவி
கடலூர் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் கருவியை இணை இயக்குனர் துவக்கி வைத்தார்.கடலூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங் கத்தின் மூலம் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தின் மூலம் எச்.ஐ.வி., பாதித்தவர்கள் சென்னை தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு சக் தியை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.தற்போது 17 லட்சம் ரூபாய் மதிப்பில் எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை (வெள்ளையணுக்களின் எண்ணிக்கை) கண்டறியும் கருவி கடலூர் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக அமைக் கப்பட்டுள்ளது. இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கண்காணிப்பாளர் பரஞ் ஜோதி முன்னிலை வகித் தார். முதுநிலை மருத்துவ அலுவலர் தேவ்ஆனந்த் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊழியர் கள் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், உமா, சுதர்சனா, சிவராஜ் மற்றும் சுஜாதா, பாண்டியன், சந்தோஷ்குமார், செந்தில் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக