பொங்கல் பண்டிகைக்காக மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இன்றைய விஞ்ஞான உலகில் நகர பகுதிகளில் சம்பிரதாய பண்டிகையாக மாறியுள்ளது. காஸ் அடுப்பில் சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்களில் பொங்கல் வைத்து வருகின்றனர். ஆனால் நாட்டின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களில் இன்றைக்கும் பாரம்பரியத்தையும், கலாசாரங்களை மறக்காமல் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதில் முதல்நாள் வீட்டுவாசல் அல்லது தோட்டங்களில் புதிய அடுப்பில் பெரிய மண்பானைகள் வைத்து குடும்பத்தினருடன் கூடி பொங்கல் வைத்து இயற்கையை வழிபடுகின்றனர். மண்பானை, சட்டி மற்றும் அடுப்பு தேவை அதிகம் உள்ளதால் கிராமங்களில் மண்பானை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பானைகளின் அளவிற்கு ஏற்ப 20 முதல் 80 ரூபாய் வரை விலை இருக்கும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில் பொங்கல் பண்டிகையினால் தற்போது சூடுபிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக