பருவநிலை மாற்றங்களால் புவி வெப்பமயமாதல் குறித்த கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடலூர் சி.கே பள்ளியில் நடந்தது. இதில் 1500 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கடலூர் சி.கே பிராக்டிக்கல் நாலேஜ் பள்ளியில் பருவநிலை மாற்றம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வினை உருவாக்கவும், அவர்களை இயற்கையின் தோழர்களாக மாற்றவும் ‘கிளைமேட்’ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பள்ளியின் அறிவியல் பிரிவு, வாழ்வியல் கல்வி, தொழில்முனைவோர் பிரிவு ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. இதில் அனைத்து கல்வி துறைகளின் சார்பிலும் பருவநிலை மாற் றம் குறித்த மாணவர் கள் உருவாக்கிய பொருட்கள், மற்றும் ஆய்வு அறிக்கைகள், புள்ளி விவரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சியில் சிறு குழந்தைகள் முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை அனை வரும் பங்கேற்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் தார்சி யஸ் வரவேற்றார். இயக்குநர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் டாக்டர் ஹேமாசின்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் அமுதவல்லி சிறப்புரையாற்றினார். கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே ரங்கநாதனின் துணைவியார் தேன்மொழி ரங்கநாதன் மாணவர்களை பாராட்டினார்.
பூமி தோற்றம் படிப்படி யான அதன் மாற்றம் பூமி யின் அழிவு ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் இசை மற்றும் நடனத்தின் மூலம் கண்முன் கொண்டுவந்தார்கள். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந் தது. பருவநிலை மாற்றம் குறித்து மாணவர்கள் பல் வேறு கண்காட்சி பொருட் களை பார்வைக்கு வைத்திருந்தனர். அவர்கள் பனிக்கட்டியால் பனிக்கரடி செய்து பருவநிலை மாற்றத்தால் மெல்ல மெல்ல கரைந்து அழிவதை தத்ரூபமாக செய்திருந்தனர்.
லிம்கா சாதனை: இது தவிர பள்ளியில் யோகா மற்றும் தியானம் நடந்தது. இதில் பள்ளி யோகா மாஸ் டர் காளத்தீஸ்வரர் ஆணிப்படுக்கையின் மீது 50 வித மான யோகசானங்களை செய்து புதிய லிம்கா சாதனை படைத்தார். இதை போல் பள்ளி மாணவர்கள் நவீன், விக்னேஷ், அஜய், ராஜகண்ணன், சதீஷ், அஞ்சனா, ஜனனி, மதுமிதா ஆகியோர் முட்டைகள் மீது அமர்ந்து அவை உடைந்து விடாமல் யோகாசனங்கள் செய் தனர்.
நவீன தொப்பி: பள்ளியின் தொழில்முனைவோர் பிரிவு மாணவர்கள் நவீனதொப்பியை தயாரித்து விற் பனை செய்தனர். தொப்பி யில் சிறிய மோட்டாரும் முன் பகுதியில் சிறிய சுழலும் விசிறியும் அமைக்கப்பட்டுள்ளது. சுவிட்ச் ஆன் செய் யும் போது விசிறி சுழன்று முகத்தில் ஜில்லென்ற காற்று வீசும். வெய்யில் காலத்தில் இந்த தொப்பி அனைவருக்கும் மிகவும் பயன்படும் என்று கூறி அவற்றை விற் பனை செய்தனர். கண்காட்சிக்கு வந்த அனைவரும் இந்த நவீன தொப்பியை வாங்கிச்சென்றனர்.
மேலும் மினி உழவர்சந்தையை பள்ளியில் மாணவர்கள் அமைத்திருந்தனர். பொங்கலுக்கு தேவையான பொருட் களை மாணவர்கள் விற் பனை செய்தார்கள். இதன் மூலம் மாணவர்கள் தொழில்முனைவோராக சிறந்த பயிற்சி பெற்றதாக பள்ளி முதல்வர் தெரிவித்தார். வாழ்வியல் கல்வித் துறை ஒருங்கிணைப்பாளர் காயத்ரி உமாசங்கர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக