சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக: நகர திமுக சார்பில் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணாமலை நகரில் உள்ள ராஜேந்திரன் சிலையை அடைந்தனர். அங்கு நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இந் நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் த.ஜேம்ஸ் விஜயராகவன், நகர இளைஞரணி அமைப்பாளர் அப்புசந்திரசேகரன், குமராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மாமல்லன் மறறும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக: நகர அதிமுக சார்பில் கீழவீதி மாவட்ட கட்சி அலுவலகத்திலிருந்து நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலை நகர் ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.
அங்கு ராஜேந்திரன் சிலைக்கு மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எம்.ஏ.கே.முகில், மாவட்டச் செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ, செல்விராமஜெயம் எம்எல்ஏ, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் சொ.ஜவகர், முன்னாள் நகர் மன்றத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட ஜெ. பேரவை செயலர் வி.கே.மாரிமுத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
மதிமுக: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நகர மதிமுக அலுவலத்திலிருந்து நகரச் செயலர் எல்.சீனுவாசன் ஊர்வலமாக புறப்பட்டு ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் கு.பெருமாள், குமராட்சி ஒன்றியச் செயலர் பா.ராசாராமன். சிவ.திருநாவுக்கரசு, சி.ராஜூ உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். மதிமுக மாணவரணி சார்பில் மாணவரணி செயலாளர் தி.லோகசுப்பிரமணியன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.÷மதிமுக மாநில ஆசிரியர் மன்றத் தலைவர் முனைவர் மு.பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக