கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூர் மாவட்டத்தில் ரூ.420 கோடியில் வெள்ளத்தடுப்புப் பணிகள்: மத்திய நீர்வள ஆணைய குழுவினர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் ரூ.420 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்குவதற்காக மத்திய நீர்வள ஆணைய குழுவினர் மே15,16 தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.தமிழ கத்தில் திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ரூ.620 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதில் 75 சதவீத தொகை மத்திய அரசும், 25 சதவீத தொகை மாநில அரசும் வழங்குகிறது.இத்திட் டங்களுக்கு மத்திய அரசு நிர்வாக அனுமதி மற்றும் ஒப்புதல் வழங்க தமிழகத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் மத்திய அரசு நீர்வள ஆணைய இயக்குநர் எஸ். லால், தலைமைப் பொறியாளர் சௌத்திரி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் வெள்ளாற்று கரையை பலப்படுத்துவது, கொள்ளிடம் வடக்கு கரையை பலப்படுத்துதல், கான்சாகிப் வாய்க்கால் இருகரையை உயர்த்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மத்திய அரசு நீர்வள ஆணையக் குழுவினர் அணைக்கரை, வல்லம்படுகை (கொள்ளிடம் ஆற்றங்கரை), அம்மாப்பேட்டை (கான்சாகிப் வாய்க்கால்), பாசிமுத்தான்ஓடை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.அவர்களுடன் கடலூர் மாவட்ட பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.அப் போது அக் குழுவினரிடம் விவசாயிகள் சார்பில் உழவர் கூட்டமைப்புத் தலைவர் பி.ரவீந்திரன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை பாலம் குறுகியதாக உள்ளதால் வெள்ளநீர் வடியை வழி செல்லாமல் ஆண்டுதோறும் சேதத்தை ஏற்படுத்துகிறது.எனவே அங்கு அகலமாக புதிய பாலம் அமைக்க வேண்டும். நீர்நிலை நிறைந்த வாய்க்கால்கள் குறுக்கே எதிர்காலத்தில் பாலம் அமைக்கும் முன் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை அனுமதி பெற்று அவர்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை பாலத்தை அமைக்க வேண்டும்.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச்சேதத்தை தவிர்க்கவும், விவசாயத்தை காப்பாற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடங்கு முன்பு அப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா என கண்காணிக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என பி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
வெள் ளத்தடுப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக