நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, சுயநிதிப் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டண அறிக்கைகளை, கடலூர் மாவட்டத்தில் இதுவரை 82 பள்ளிகள் பெற்றுச் சென்றுள்ளன.தனியார் சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களிடம் அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்றி இருக்கிறது. இந்தச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு பள்ளிகளும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கைகள் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 112 சுயநிதிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 90 பள்ளிகளுக்கு கட்டணப் பரிந்துரைப் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு
வநதுள்ளது. இவற்றில் 82 பள்ளி நிர்வாகங்கள் வியாழக்கிழமை வரை,
கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ÷கட் டணப் பட்டியலை இதுவரை வாங்காமல் இருக்கும் பள்ளிகள், நகர்ப் புறங்களில் உள்ள மிகப் பிரபலமான பள்ளிகள்தான் என்று
கூறப்படுகிறது.÷பிரபலமான பள்ளிகள் பல, தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தியும் தகவல்களை அளித்து உள்ளன. இந்தக் கட்டணத்தில் பள்ளி சிறப்பாக நடப்பதால், அதேக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்கலாம் என்று நீதிபதி கோவிந்தராஜ் குழு பரிந்துரைத்து உள்ளது. இவ்வாறு 25 சதவீத பள்ளி நிர்வாகங்கள், தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்துக் காண்பித்ததால், அதேக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற நர்சரி பள்ளிகள் பலவற்றுக்கு அவர்கள் தற்போது வசூலிக்கும் கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிபதி குழு பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 20 சதவீத பள்ளிகளுக்கு அவர்கள் தற்போது
வசூலிக்கும் கட்டணத்தையே நீதிபதி குழு பரிந்துரைத்து உள்ளது.மொத்தத்தில் 50 சதத்துக்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகங்கள், நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைக் கட்டண விகிதத்தை, முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு இருப்பதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக