கோரிக்கை பதிவு

மாயமான மீனவர்களில் மூவர் கரை திரும்பினர் : மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரம்

மீன் பிடிக்க சென்று, காணாமல் போன மூன்று மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்து வருகிறது.
லைலா புயல் காரணமாக, பலத்த காற்று வீசும் என்பதால், தூத்துக்குடியில், 2,300 நாட்டுப் படகுகள், நேற்று கடலுக்கு செல்லவில்லை. கடலூர் தேவனாம்பட் டினத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (60), அவரது மகன் ஆனந்தன் (26), பூபாலன் (23) ஆகிய மூவரும், கடந்த 18ம் தேதி, பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இதேபோல், சகாய ராஜ் என்பவர் மீன்பிடிக்க தனியாக சென்றார். இவர்கள், நேற்று முன்தினம் மதியம் 3 மணி வரை, கரை திரும்பவில்லை. அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததால், உறவினர்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த கடலோர பாதுகாப்பு படை யினர், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, ஆழ்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெட்ஜரில் அவர் கள் தஞ்சமடைந்தனர். கரைக்கு திரும்பிய மீன வர்கள் கூறுகையில், "புயல் எச்சரிக்கை விடுவதற்கு முன்பாகவே கடலுக்கு சென்றுவிட்டோம். இன்ஜின் பழுதானதால் கரைக்கு திரும்ப முடியவில்லை. மூன்று பேரும் மொபைல் போன் எடுத்து செல்லாததால், நாங்கள் கடலில் தத்தளித்ததை, தெரிவிக்க முடியவில்லை. நாங்களே இன்ஜினை பழுதுபார்த்து கரைக்கு திரும் பும் முயற்சியில் ஈடுபட் டோம். ஆனால் முடியவில்லை. வேறுவழியின்றி டிரெட்ஜரில் தஞ்சமடைந் தோம்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக