கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டாப்-அப் கார்டுகள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 55 ரூபாய் மதிப் புள்ள 70 ஆயிரம் டாப்-அப் கார்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அப்போது பொறுப்பில் இருந்த அதிகாரி ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டு வாங்கியுள்ளார். இதன் பின் அவர் வெளியூருக்கு மாறுதலாகி சென்று, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.அலுவலக தணிக்கையின் போது 10 ஆயிரம் டாப்-அப் கார்டு களை கொண்ட ஒரு பாக்ஸ் விற் பனை செய்ததற்கான கணக்கில் வரவில்லை. இது குறித்து அலுவலகத்தில் விசாரணை செய்த தில் மாயமான டாப்-அப் கார்டுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாயமான கார்டுகளின் மதிப்பு 5.50 லட்சம் ரூபாயாகும். மாயமான 3,000 கார்டுகள் விருதுநகர் மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 7,000 கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
கார்டுகள் எப்படி காணாமல் போனது... யார் எடுத்துச் சென்றது என்ற விபரங்களை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட் டனர். மேலும் கார்டுகள் மாயமானது குறித்து கடலூர் பி.எஸ். என்.எல்., முதன்மை கணக்கு அதிகாரி ராஜா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் சம்பவம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்குள் நடந்துள்ளது. மேலும் ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதில் மாயமானது மூன் றாம் எண் பெட்டியாகும். விற்பனை செய்தவர்கள் இரண்டு பெட்டிகளை விற்பனை செய்த பின் மூன்று பெட்டி மாயமானது தெரியாமல் எப்படி நான்காவது பெட்டியை விற்பனை செய்துள் ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை செய்து குற்றவாளி அல்லது சந்தேக நபர்கள் குறிப்பிட்டு புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக