அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வசதியாக பாசஞ்சர் ரயில்களின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று, ரயில்வே இலாகாவுக்குத் தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ரயில்வே பொது மேலாளருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்,
கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
நிற்காமல் செல்வது பயணிகளை பெரிதும் பாதிக்கிறது. துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் சென்று எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பிடிப்பது மக்களுக்குச்
சாத்தியமாக இல்லை. இதனால் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின்
வருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.÷50 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து எக்ஸ்பிஸ் ரயில்களும் நிற்கும் ரயில் நிலையமாக இருந்து
வந்துள்ளது திருப்பாப்புலியூர். திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில்,
திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றுவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும், தினமும் சென்னை செல்லும் பயணிகளுக்கும், திருப்பாப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காதது பெருத்த ஏமாற்றமாக உள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு வசதியாக, விழுப்புரம் மயிலாடுதுறை இடையே முன்பு காலையில் 2 ரயில்களும் மாலையில் 2 ரயில்களும்
இயக்கப்பட்டன. தற்போது காலை, மாலை தலா ஒரு ரயில் மட்டுமே
இயக்கப்படுவது மாணவர்களுக்கும் அலவலகம் செல்வோருக்கும்
போதுமானதாக இல்லை. ரயில்களின் இயக்க நேரங்களும் ஏற்றதாக இல்லை. எனவே கூடுதலாக இரு பாசஞ்சர் ரயில்களை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்றும் சிவகுமார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக