திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காததால் பயணிகள் கவலையடைந்துள்ளனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் இயக்கப்பட்ட சோழன் விரைவு ரயில் தற்போது மீண்டும் இயக் கப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூரில் ரயில் நிலையம் வழியாக பகல் 12.30 மணிக்கு கடக்கும் இந்த ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகளுக்கு ஏமாற் றத்தை அளித்துள்ளது. ஆனால் முதுநகர் ஜங்ஷனில் மட்டும் நின்று செல்கின்றன.கடலூர் புதுநகரில் இருந்து தான் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்வது வழக்கம். இங்கிருந்து முதுநகருக்கு 40 ரூபாய் கொடுத்து ஆட்டோ பிடித்து செல்வதால் கூடுதல் கட்டணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் ரயில் பயணம் செய்ய விரும்புவதில்லை.
அதேப்போல ராமேஸ் வரம் - புவனேஸ்வர் (எண் 8495), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 4260), ராமேஸ்வரம் - புவனேஸ் வர்(எண் 4259), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 8496) ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத் தும் விழுப்புரம் ஜங்ஷனுக்கு பிறகு மயிலாடுதுறையில் மட்டுமே நின்று செல்கின்றன.
திருப்பாதிரிப்புலியூரை கடந்து செல்லும் ரயில்கள் மாவட்ட தலைநகரில் நிற்காமல் செல்வதால் கடலூர் பயணிகள் செல்ல முடியாமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் ரயில்வே துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாயை இழந்து வருகிறது. எனவே கடலூரை கடந்து செல்லும் ரயில்கள் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே இலாகா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக