கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
சொத்து வரி பாக்கி: 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்
கடலூர் நகராட்சிக்குச் சொத்துவரி (வீட்டு வரி மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான வரி) தண்ணீர் வரி செலுத்தாத, 15 ஆயிரம் பேருக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடலூர் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கி ரூ. 10 கோடியைத் தாண்டி உள்ளது. இதனால் நகராட்சிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஜனவரி 31-ம் தேதி வழங்க வேண்டிய ஊதியம் வெள்ளிக்கிழமை வரை வழங்கப்பட வில்லை.எனவே வரி பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக தண்டோரா மூலம் வீதி வீதியாக சென்று வரியைச் செலுத்துமாறு கோரப்பட்டு வருகிறது. வாகனங்களிலும் ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, கடலூர் நகராட்சிக்கு வர வேண்டிய வரிபாக்கி ரூ. 10 கோடிக்கு மேல் உள்ளது. வரிப் பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளிக்கிழமை வரை ரூ. 2 கோடி வசூல் ஆகி இருக்கிறது.மீதம் உள்ள பாக்கியையும் படிப்படியாக வசூலிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். வரிபாக்கி உள்ளவர்களுக்கு 4 முறை கால அவகாசம் அளித்து நோட்டீஸ் அளிக்கப்படுகிறது.முதல் நோட்டீஸ் 15 நாள்களுக்குள் செலுத்துமாறும், அடுத்து 7 நாள்களுக்குள் செலுத்துமாறும், பின்னர் 24 மணி நேரத்தில் செலுத்துமாறும் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.3 முறை கால அவகாசம் அளித்தும் வரியைச் செலுத்தாவிட்டால் 4-வது முறையாக, ஜப்தி நோட்டீஸ் அளிக்கிறோம். இதுவரை கடலூர் நகராட்சியில் 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கடலூர்,
கடலூர் நகராட்சி,
வீட்டு வரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக