கோரிக்கை பதிவு

அதிக பயணிகளை ஏற்றிசென்ற 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

கடலூரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாக 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.​ கடலூரில் 500-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.​ இவற்றில் அனுமதிக்கப்பட்டதைவிட,​​ கூடுதலாகப் பயணிகளை ஏற்றிச் செல்வதாக நிறையப் புகார்கள் காவல் துறைக்கு வந்தன.​ எனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் ஷேர் ஆட்டோக்களை போலீஸôர் திங்கள்கிழமை தீவிர தணிக்கை செய்தனர்.​ ​ கடலூர்,​​ லாரன்ஸ் சாலை,​​ அண்ணா மேம்பாலம்,​​ மஞ்சக்குப்பம்,​​ ஆல்பேட்டை,​​ செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸôர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர்.​ ஷேர் ஆட்டோக்களில் மிகச் சாதாரணமாக 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.​ ​2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில்,​​ விதிகளை மீறிய 30 ஷேர் ஆட்டோக்கள் பிடிபட்டன.​ அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.​ ​பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஷேர் ஆட்டோக்களும் காவல் நிலையத்துக்குக் கொண்டு போகப்பட்டன.​ இதனால் போலீஸôருக்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.​ ஷேர் ஆட்டோக்களில் 5 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது,​​ மீறினால் பறிமுதல் செய்வோம் என்று போலீஸôர் மீண்டும் எச்சரித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக