கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வடிவத்தை மாற்ற வேண்டும்
கடலூரில் கட்டத் தொடங்கி இருக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் தோற்றம் அழகாக இல்லாததால், அதன் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று, காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணி கோரிக்கை விடுத்துள்ளது.கடலூர் மாவட்டக் காங்கிரஸ் வழக்கறிஞரணி அமைப்புக் கூட்டம் மாவட்டக் காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பல ஆண்டுகளுக்கு பின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படுவது வரவேற்கத்தகுந்தது. ஆனால் அதன் வரைபடத்தைப் பார்க்கும் போது அழகாகத் தோன்றவில்லை.பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அழகாக இருக்க வேண்டும். எனவே அதை அழகாகத் தோன்றும் வகையில் மாற்றி வடிவமைக்க வேண்டும்.அனைத்து மாநில மக்களுக்கும் விரைவில் நீதி கிடைக்கும் வகையில், அனைவரும் எளிதில் அணுகும் விதத்தில், உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் உருவாக்க வேண்டும்.வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை, ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும். கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.கடலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு, கடலூர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் வழக்கறிஞரணித் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.வழக்கறிஞர்கள் அரிஹரதாஸ், சாந்தமூர்த்தி, ஜெயக்குமார், தமிழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கடலூர்,
நீதிமன்றம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக