மாவட்டத்தில் இன்று 2.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.போலியோ நோயை அறவே அகற்ற தமிழகம் முழுவதும் இன்று 2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சத்துணவு கூடங்கள் என மொத்தம் 1512 மையங்கள் மற்றும் 101 சிறப்பு மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை போலியோ சொந்து மருந்து வழங்கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து105 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய ஒவ்வொரு மையத்திலும் 4 பணியா ளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.
மேலும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், என்.சி.சி., மாணவர்கள், சுயஉதவிக்குழுவினர் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.குழந்தைகளுக்கு போடப்படவுள்ள சொட்டு மருந்து குறித்தோ, பின் விளைவுகள் குறித்தோ பொது மக்கள் எவரும் அச்சப்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக