கடலூர் அடுத்த பெரியபட்டு அருகே கடந்த நவம்பர் 23ம் தேதி தனியார் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் ஒரு மாணவர் இறந் தார். 34க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். அடுத்த சில நாட்களில் நாகை மாவட் டத்தில் தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில் 10 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் இறந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். கூடுதல் மாணவர்கள் ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களுக்கு உரிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அதனை மீறும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரித்தார். அதன்படி அதிகாரிகள் சில நாட்கள் பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர். இந்த சம்பரதாயம் ஓரிரு நாளில் முடிந்தது. அதன்பிறகு பள்ளி வாகனங்கள் "மாமூலாக' அதிக மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். நேற்று நடந்த விபத்தில் சிக்கிய வேனில் 18 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆனால் அதில் 32 மாணவ, மாணவிகளும் ஐந்து ஆசிரியர்கள் சென்றுள் ளனர். அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென் றதே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக