கடந்த 20 ஆண்டுகளில் முதியோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று 45 பதக்கங்களை வென்றுள்ள 83 வயது நடேசரெட்டி.
கடலூர், பிப். 20: கடலூரைச் சேர்ந்த "வாலிபால்' பயிற்சியாளர் நடேசரெட்டி (83), கடந்த 20 ஆண்டுகளில், தடகளப் போட்டிகளில் அகில இந்திய அளவில் 45 பதக்கங்களை வென்றுள்ளார்ஜனவரியில் நடந்த சர்வதேச முதியோர் தடகளப் போட்டியில் பங்கேற்று 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.ஜனவரி 22 முதல் 24-ம் தேதி வரை புணேயில் நடந்த சர்வதேச முதியோர் தடகளப் போட்டியில் நடேசரெட்டி பங்கேற்றார். இதில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹாமர்துரோ ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.1990 முதல் அகில இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு முதியோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, குண்டு எறிதல், வட்டு ஏறிதல், ஹாமர்துரோ, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் 23 தங்கப் பதக்கங்களையம், 10 வெள்ளிப் பதக்கங்களையும் 12 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று இருக்கிறார் நடேசரெட்டி.2006-ம் ஆண்டு இலங்கையில் நடந்த சர்வதேச அழைப்பு தடகளப் போட்டிகளில் பங்கேற்று, குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று இருக்கிறார்.நடேசரெட்டி 1953-ம் ஆண்டு திருத்தணியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார்.அதைத் தொடர்ந்து 63-ம் ஆண்டு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார்.1965 முதல் 1988 வரை கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வாலிபால் பயிற்றுநராக பணிபுரிந்து, நூற்றுக்கணக்கான வாலிபால் விளையாட்டு வீரர்களை உருவாக்கி இருக்கிறார்.1988-ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், 1990 முதல் முதியோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அத்துடன் கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், ஜூனியர் வாலிபால் அணிக்கு இன்றளவும் தொடர்ந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.புனித வளனார் பாலர் பள்ளியில் அண்மையில் நடந்த ஆண்டு விழாவில், புனித வளனார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகள், நடேசரெட்டியைப் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக