கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.
கடலூர் நகர மா.கம்யூ., குழுக் கூட்டம் நடந்தது. ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், நகர செயலாளர் சுப்புராயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமில்லாமல் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கிறது. நகர மெங்கும் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் கொசு, பன்றிகளால் சிக்குன்-குனியா, டெங்கு, மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்து வருவது வேதனையளிக்கிறது. மக்களை நோய் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது.
மாவட்ட சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் கொசு, பன்றிகளை அழித்திட நடவடிக்கை எடுத்திடக் கோரியும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைத்திடவும், இதயம், நரம்பியல் போன்ற முக்கியத் துறைக்கு உடன் சிறப்பு மருத்துவர்களை பணியில் நியமிக்கவும், கொடிய நோயிலிருந்து மக் களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக