கோரிக்கை பதிவு

கடலூரில் பெய்த கனமழையால் பாதாள சாக்கடை பணி முடக்கம்

கடலூரில் பெய்த கனமழை காரணமாக சகதி நகரமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூரில் நேற்று காலை திடீரென பெய்த மழையால் மஞ்சக்குப்பம் மைதானம், ஜட்ஜ் பங்களா ரோடு, செம்மண்டலம் பகுதி வெள்ளக் காடானது. ஏற்கனவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு கொட்டப்பட்ட 
மண்மேடுகள் கரைந்து சாலைகள் சகதியானது. மேலும் சரியாக மூடாத பள்ளங்களில் மண் உள்வாங்கியதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கிக் கொண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது கடலூர் நகரின் பிரதான சாலைகளான பீச்ரோடு, நெல்லிக்குப்பம் சாலை, புதுப் பாளையம் மெயின்ரோடு உட்பட பல இடங்களில் பாதாள சாக்கடைத்திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. இச்சாலைகளில் பெரிய அளவிலான பைப்புகள் பதித்து வருவதால் சாலைகளில் அதிக ஆழம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களும் தூர்ந்து போய் உள்ளன. கன மழையால் முழு வீச்சில் நடந்து வந்த பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடங்கியுள்ளன.

மாவட்டத்தில் 2ம் நாளாக தொடர் மழை : கடலூரில் அதிகபட்சம் 75 மி.மீட்டர்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழைக் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூரில் அதிகபட்சமாக 75 மி.மீட்டர் மழை பெய் துள்ளது.
தென்மேற்கு பருவக் காற்றால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேகங் கள் வேகமாக தமிழக பகுதியில் செல்வதால் ஆங் காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
நேற்று காலை 11 மணி முதல் அதிக அளவில் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து சீராக மழை பெய்து வருவதால் தண் ணீர் வழிந்தோடி வீணாகாமல், நிலத்தில் நன்றாக ஊறி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் விரைவில் உயரக்கூடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:
கடலூரில் 75மி.மீ., வானமாதேவி 69.20, புவனகிரி 65, கொத்தவாச்சேரி 54, அண்ணாமலை நகர் 40.60, பண்ருட்டி 40, பரங் கிப்பேட்டை 39, மேமாத் தூர் 38, லால்பேட்டை 31, சேத்தியாதோப்பு 31, லக் கூர் 30, காட்டுமன்னார் கோவில் 28, விருத்தாசலம் 24.40, குப்பநத்தம் 22.20, பெலாந்துரை 20, ஸ்ரீமுஷ் ணம் 20, கீழ்ச்செருவாய் 16, தொழுதூர் 15மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூல்: கிருஷ்ணசுவாமி பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி இறுதியாண்டு பயலும் மாணவ மாணவியர் சுமார் 200 பேர், கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:இந்த கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரியில் இ-லேர்னிங் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 8 ஆயிரம் வசூலித்து இருக்கிறார்கள். இக்கட்டணம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்குக் கிடையாது என்று திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நிர்வாகத்தை அணுகியபோது மாணவர்களைத் துறைத் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். கல்லூரிக்குள் நுழைய விடாமல் கல்லூரி அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். போராட்டத்தில் பங்கேற்க வெளியேற முயன்ற சில மாணவிகளை, கல்லூரி விடுதியில் தனி அறையில் அடைத்தனர். அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு மாணவியை அடிக்க முயன்றனர். மாணவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றோரிடம் தவறாகப் பேசியுள்ளனர்.புகார்களுக்கு நிர்வாகத்திடம் பேசி, எங்களின் படிப்புக்கு எவ்வித இடையூறும் பின்விளைவும் இல்லாத நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் மனுவில் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இயக்குநர் சி.ஏ.தாஸ்,  கடலூர் வாசிப்போர் இயக்க அமைப்பாளர் கவிஞர் பால்கி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சிவபாலன் உள்ளிட்டோர் பேசினர்.