கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
விவசாயிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு விலை குறையும் வாய்ப்பு
பண்ருட்டியில் பலா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு பலாப்பழ விளைச்சல் அதிகரிப்பு மற்றும் பலாப்பழம் கூடுதல் விலை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பண்ருட்டியில் தற்போது தினந்தோறும் நான்கு லாரிகள் அளவில் பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. பண்ருட்டி பலாப்பழம் சுவையும், இனிப்பும் அதிகமாக இருப்பதால் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் கடைசி வரை பலாப்பழம் விற்பனைக்கு வரும் என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது ஒருகிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. 20 நாட்களுக்கு பின் தினந்தோறும் 10 லோடுகள் பலாப்பழம் வரத்துவங்கினால் பலாப்பழ விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
பண்ருட்டி,
விவசாயிகள்
பி.டி. கத்தரிக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.டி. கத்தரிக்காயைத் தடைசெய்ய வலியுறுத்தியும், உர மானியத்தை குறைத்ததற்கு மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப் பாப்புலியூர் உழவர் சந்தை அருகில நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் எம்.நாராயணன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் கே.முகமது அலி கண்டன உரை நிகழ்த்தினார்.விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் எஸ்.காமராஜ், என்.ஆர்.ராமசாமி, எஸ்.தட்சிணாமூர்த்தி, ஏ.சந்திரசேகரன், ஆர்.லோகநாதன், எம்.மணி, கே.தனபால், ஆர்.இளம்பாரதி, பி.பாலமுருகன் உள்ளிட்ட பலர் பேசினர். கடலூர் ஒன்றியத் தலைவர் சி.குமார் நன்றி கூறினார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
விவசாயிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)