வெள்ளத்தடுப்பு மற்றும் நீராதார மராமத்து பணிகளை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செய்து முடித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் கடலூரில் நடந்தது.
கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் மற்றும் பல் வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் பேசுகையில், வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற் கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்மொழிவு அனுப்பிய ஆயிரம் கோடி ரூபாயிற்கு அரசு 540 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் துள்ளது. இதற்கான செயல் பாடுகள் எந்த நிலையில் உள்ளது என்பதை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். நீர் ஆதார பணிகள் மழை காலத்தில் செய்தால் முறைகேடு அதிகளவு நடக்கும். எனவே, நீராதார பணிகளுக்கு ஜனவரி மாதத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஏப்ரல்,மே மாதங்களில் பணிகளை முடித்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கார்மாங்குடி வெங்கடேசன் பேசுகையில், அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் 2008ம் ஆண்டு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்து தற்போது தர மறுக்கும் மானியத்தை மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும் என்றார். கொத்தட்டை ஆறுமுகம் பேசுகையில், பெண்ணாடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மந்தமாக நடக்கிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள மூன்று துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்றதற்கு, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி பிரச் னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார். மஞ்சக்கொள்ளை விஜயகுமார் பேசுகையில், தாமதமாக தண்ணீர் விட்டதால் கடைமடை பகுதியில் 7 கிராமங்களில் 600 ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கின்றன. உடன் தண்ணீர் விட வேண்டும் என்றார். இதற்கு, தற்போது மராமத்து பணி நடக்கவுள்ளதால் தண்ணீர் விட வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரி கூறினார். குறுக்கிட்ட கலெக்டர், 600 ஏக்கர் பாதிக்கப்படுவது குறித்து பொதுப்பணித்துறையினர் பரிசீலித்து உடன் எனக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார். பசமுத்தான் ஓடை விவசாய சங்க ரவீந்திரன் பேசுகையில், வேளாண் பொறியியல் துறை சார்பில் நமது மாவட்டத்திற்கு 40 பவர் டிரில்லர் வழங்கப்பட் டுள் ளது. ஆனால் விழுப்புரத்திற்கு 80ம், நாகைக்கு 70ம் வழங்கப் பட்டுள்ளது. தேவை அதிகம் உள்ள கடலூர் மாவட்டத்திற்கு மிகவும் குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டினார். உடன் கலெக்டர், கூடுதல் இயந்திரம் வழங்க வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மணல் திருடினால்... கலெக்டர் எச்சரிக்கை : வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவர்களை கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் விவசாய மின் மோட்டார் கேபிள் அடிக்கடி திருடு போகிறது. இதனை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, கார்மாங்குடி வெங்கடேசன் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த கலெக்டர், அனுமதி இல்லதா இடங்களில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதாக புகார் செய்கிறீர்கள். நடவடிக்கை எடுத்தால் குறை கூறுகிறீர்கள். விவசாயிகள் தங்களுக்கு மணல் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துணை தாசில்தாரிடம் அனுமதி பெற்று தேவைக்கு மட்டும் மணல் எடுத்துக் கொள்ளலாம். அனுமதி சீட்டு இன்றி மணல் ஏற்றி வருவேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதேபோன்று விவசாய மின் மோட்டார் கேபிள் திருடுவோர் 12 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர். விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்றார்.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
வெள்ளச் சேதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளச் சேதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரூ. 470 கோடியில் வெள்ளத்தடுப்பு, மராமத்துப் பணிகள்
கடலூர் மாவட்டத்தில் மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தடுக்கவும், ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் மராமத்துப் பணிகளுக்கும் ரூ. 470 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:இந்த நிதியில் இருந்து ரூ. 106 கோடியில் கொள்ளிடம் வடக்குக்கரை சீரமைப்புப் பணிகள், ரூ. 26 கோடியில் வீராணம் ஏரி சீரமைப்புப் பணிகள், ரூ. 7.5 கோடியில் கான்சாகிப் மராமத்துப் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கிறது.÷இது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் 15-2-2010 அன்று விவாதிக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ. 353 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.இந்தப் பணிகளை இப்பகுதி விவசாயிகளைக் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறேன். வீராணம் சீரமைப்புத் திட்டத்தில் ஏரியின் முழு கொள்ளளவுக்கு நீர் பிடிக்கும் போது, ஏரியின் மேற்குக்கரை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விடுவதைத் தடுக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.இது குறித்து அவர் பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். அந்தப் பதிவேடு வாரம்தோறும் எனது பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ரவீந்திரன்: கடலூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை முடிவுக்கு வந்துள்ளது. எனவே வெள்ளத் தடுப்பு மற்றும் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் மராமத்துப் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் உண்மையான ரேஷன் கார்டுகள் 1 லட்சம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கல் அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ரேஷன் கடைகளில் அரிசியின் தரம் மோசமாக உள்ளது. வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராமானுஜம்: வாலாஜா ஏரிக்கு ஒரு கரை மட்டுமே உள்ளது. இதனால் அதிகரித்து விட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரை அமைக்க வேண்டும்.வாலாஜா ஏரியை ஆழப்படுத்த என்.எல்.சி. 3 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த ரூ. 25 கோடி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன்: மழை காலங்களில் சிதம்பரம் நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்குக் காரணம் பாசிமுத்தான் ஓடையில் தாங்கும் அளவைவிட கூடுதலாகத் தண்ணீர் வருவதுதான். எனவே பாசிமுத்தான் ஓடை கரைகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.விவசாயிகள் நலன் கருதி களத்துக்கே வந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட முதல் அமைச்சருக்கு நன்றி.விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை சேமித்து வைக்க வசதி இல்லை. அரசு சேமிப்புக் கிடங்குகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள். இதனால் அறுவடை செய்த உடனே குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடபதி: சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 65 சதவீதம் மானியம் அறிவித்து இருக்கிறது அரசு. அரசு குறிப்பிட்டபடி சொட்டு நீர்ப் பாசன அமைப்புகளை அமைக்க, ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் ஆகிறது. ஆனால் மானியம் 37,500 தான் வழங்குகிறார்கள். 65 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.÷கரும்பு டிராக்டர்கள் சங்கத் தலைவர் வீரபாண்டியன்: விருத்தாசலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால் வாகனப் போக்குவரத்துக்கு மாற்றுப் பாதைக்கு வாய்ப்பு இருந்தும், சரியாக ஏற்படுத்த வில்லை.ஆட்சியர் குறுக்கிட்டு: இது குறித்து நான் கடிதம் கொடுத்தும் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வில்லை. மக்களைக் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும்.சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்: தரமான விதை நெல் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. ஆனால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.கூடுதல் விலை வழங்க வேண்டும். போக்கு வரத்துச் செலவை அரசே ஏற்க வேண்டும். விதைநெல்லை பதப்படுத்த கூடுதல் வசதி வேண்டும்.வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம்: பெண்ணாடம் கரும்பு விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, முத்தரப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.வெள்ளாற்றில் மணல் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை நீக்க வேண்டும். வெள்ளாற்றினால் விளைநிலங்கள் அரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுகள்
ஆட்சியர்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
வெள்ளச் சேதங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)