கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
பெரியார் கலைக்கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் கலைக்கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
கல்லூரி ஆசிரியர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் (படம்) இருந்தனர்.கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர்கள் சங்கம் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரதம் நடந்தது.கடலூர், விருத்தாசலம், திண்டிவனம், விழுப்புரம் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த உண்ணாவிரதத்துக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்க கடலூர் வட்டத் தலைவர் கவாஸ்கர் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் செயலர் சாந்தி முன்னிலை வகித்தார். சங்கப் பொருளர் சம்பத் தொடங்கி வைத்தார்.உண்ணாவிரதத்தை பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் என்.பாலகிருஷ்ணன் முடித்து வைத்துப் பேசினார். பாஸ்கரன் நன்றி கூறினார்.
கட்டுகள்
கடலூர்,
பெரியார் கலைக்கல்லூரி
பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் செம்மொழி விழா
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் தமிழ்செம் மொழி விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறை தலைவர் டாக்டர் கொற்கைவேந்தன் முன்னிலை வகித் தார்.சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ., செம்மொழி விழாவை துவக்கி வைத்து பேசினார்.
செம்மொழி விழாவில் நடந்த கவிதை போட்டி, ஓவியம், பாட்டுப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.நகர மன்ற தலைவர் தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச் செல்வம், பேராசிரியர் அர்த்தநாரி, நகர் மன்ற உறுப்பினர் கோவலன்,கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
செம்மொழி விழாவில் நடந்த கவிதை போட்டி, ஓவியம், பாட்டுப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.நகர மன்ற தலைவர் தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச் செல்வம், பேராசிரியர் அர்த்தநாரி, நகர் மன்ற உறுப்பினர் கோவலன்,கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கட்டுகள்
கடலூர்,
பெரியார் கலைக்கல்லூரி
நுகர்வோர் மன்ற துவக்க விழா
கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் துவக்க விழா மற்றும் மாணவர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இளைஞர்களிடையே நுகர்வோர்களின் உரிமைகள் குறித்து கூட்டமைப்பு ஆலோசகர் பால்கி எடுத் துரைத்தார். தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு தாஸ் பேசினார். 50 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக 2ம் ஆண்டு மாணவர் உதயேந்திரன் வரவேற்றார். மாணவி மீரா நன்றி கூறினார்.
பேராசிரியர் கண்ணன், மனோகரன், பேராசிரியைகள் அபிராமிசுந்தரி, சத்தியபாமா, சாருபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங் கிணைப்பாளர் முனைவர் திலக்குமார் செய்திருந்தார்.
கட்டுகள்
கடலூர்,
நுகர்வோர்,
பெரியார் கலைக்கல்லூரி
கடலூர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கடலூர் யில் பயிலும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர். அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக இருப்பதைக் கண்டித்தும், தரமான உணவு வழங்கக் கோரியும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். பின்னர் இந்திய மாணவர் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் டி.அரசன், துணைத் தலைவர் எஸ்.சிவபாலன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: விலைவாசி உயர்வு காரணமாக ஏற்கெனவே மோசமான உணவு வழங்கப்பட்டு வந்த அரசுக் கல்லூரி விடுதிகள் தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரியார் கலைக் கல்லூரிபெரும்பாலான உணவு விடுதிகளில் உணவுப் பட்டியலின்படி உணவு வழங்கப்படுவதில்லை. விலைவாசி உயர்வு காரணமாக விடுதிகளில் வழங்கப்படும் உணவில் பருப்பு காய்கறிகள் குறைவாக உள்ளன. அரிசியின் தரமும் மோசமாக உள்ளது. இதனால் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சராசரி கலோரி உணவு கிடைப்பதில்லை. மாணவர் விடுதிகளுக்கு அரசு வழங்கும் தொகை, தரமான உணவு வழங்கப் போதுமானதாக இல்லை. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் விடுதிகளில் கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை. விடுதி சுகாதாரமாக இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது. அட்டவணைப்படி உணவு வழங்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கட்டுகள்
கடலூர்,
பெரியார் கலைக்கல்லூரி
பெரியார் கல்லூரி தமிழ் பேராசிரியர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு
கடலூர் பெரியார் கலைக்கல்லூரி தமிழ்த் துறை இணைப்பேராசிரியர் ஜனாதிபதி விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். செம்மொழித்தமிழ் மொழியில் சிறப்பாகப் பணியாற்றும் அறிஞர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப் பட்டு வருகிறது. ஐந்து நபர்களுக்கு வழங் கப்படும் "இளம் அறிஞர்' விருதிற்கு கடலூர் பெரியார் கலைக் கல்லுரி தமிழ் இணைப்பேராசிரியர் பழனிவேலு தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இவர் புதுச்சேரி, அரியாங்குப்பம் டோல்கேட்டை சேர்ந்தவர். தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், புதுச்சேரி பல் கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்திற்காக தங்கப்பதக்கம் பெற்றவர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். "தமிழர் தம் கல்வி வரலாறு' என்ற இவரின் ஆய்வேடு தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள் ளது. இந்நூல் கோவை, பாரதியார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டங்களில் இடம் பெற் றுள்ளன.
இவரின் "கல்வி வரலாறு சில பார்வைகள்' என்ற நூல் புதுச்சேரி அரசின் 2001ம் ஆண்டுக்கான சிறந்த கட்டுரை நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டு கம்பன் புகழ் பரிசு பெற் றுள்ளது. புதுச்சேரி பகுதிகளை கள ஆய்வு செய்து எழுதப்பட்ட இவரின் முதுகலை ஆய்வேடு, "தமிழர் தம் குடிப்பழக் கம்' என்ற நூலாக வெளி வந்துள்ளது. சென்னை மொழி அறக்கட்டளையின் தமிழ் மரபுத்தொடர் அகராதியில் 1993முதல் 95 வரை ஆராய்ச்சி உதவியாளராகவும், 98ம் ஆண்டு வரை புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
பின்னர் 1998ம் ஆண்டு முதல் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார நவீன திறனாய்வுக் கோட்பாடுகளைத் தமிழிலக்கியங்களில் பொருத்தி ஆய்வு செய்து வரும் இவர், கோட்பாட்டியல் திறனாய்வுகள், பனுவல் எடுத்துரைப்பு திறனாய்வு ஆகிய இரு திறனாய்வு நூல்களையும், 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுகள்
கடலூர்,
பெரியார் கலைக்கல்லூரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)