கோரிக்கை பதிவு

நாகை, கடலூரில் 3 மீன்பிடி துறைமுகங்கள்

நாகப்பட்டிணம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உலக வங்கி உதவியுடன் சுமார் 77 கோடி செலவில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன.உலக வங்கியின் இ.டி.ஆர்.பி. என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் நாகப்பட்டிணம் மீன்பிடிதுறைமுகம் ரூ.35 கோடியே 65 லட்சம் செலவிலும், அந்த மாவட்டத்தில் உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகம் ரூ.27 கோடியே 56 லட்சம் செலவிலும் புதிய மீன்பிடி துறைமுகங்களாக புதுப்பிக்கப்பட உள்ளன.

இதேபோல் கடலூர் மாவட்டம் போர்ட்டனோவா அன்னக்கோவில் என்ற இடத்தில் ரூ.131/2 கோடி செலவில் மீன்பிடி தளம் அமைக்கப்படுகிறது.

இந்த மீன்பிடி துறைமுகங்களில் மீனவர்கள் படகுகளை நிறுத்திக்கொள்ளவும், மீன்களை விற்பனை செய்வதற்கும், சுனாமி போன்ற அவசர காலங்களில் படகுகளை நிறுத்தவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.
உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த புதிய மீன்பிடி துறைமுகங்கள் திட்டத்திற்கு முதலமைச்சர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலாளர் கி.தனவேல் தெரிவித்தார்.

கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்க அமைச்சர்கள் ஆய்வு

கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்குவது தெôடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கேôவில் சாமிநாதன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.கண்ணைக் கவரும் இயற்கைச் சூழலும், தேவநாதசுவாமி கேôயில், ஹயகிரீவர் கோயில் , திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கேôயில், விலங்கல்பட்டு முருகன்கேôயில் உள்ளிட்ட பல்வேறு கேôயில்களும் அமையப் பெற்றது, திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியôகும். கெடிலம் ஆறு தேவநாதசுவாமி கேôயில் அருகே வடக்கில் இருந்து தெற்கு நேôக்கி ஓடுவது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.இத்தகைய சிறப்புமிக்க திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியைச் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கேôரிக்கை. இக்கேôரிக்கையை வலியுறுத்தி, கடலூர் அனைத்து நகர் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பு மனிதச்சங்கிலிப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது.இந்த நிலையில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கேôயிலில் ஞôயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட திருமணங்களும், அதே நாளில் திருவந்திபுரம் திருமண மண்டபங்களில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடந்தன.இதனால் திருவந்திபுரம் பகுதியில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. தேவநாதசுவாமி கேôயிலுக்கு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் வந்து போகிறார்கள்.எனவே திருவந்திபுரத்தை சுற்றுலாத்தலமாக்குவது குறித்தும், அங்கு விழாக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்தும், திருவந்திபுரம் சென்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக்கேôவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.முதல் கட்டமாக திருவந்திபுரத்திலும், கேôயிலைச் சுற்றியும் ஆக்கிரமித்து கடை வைத்து இருப்பவர்களை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு வணிக வளôகம் ஒன்று கட்டிக் கெôடுக்கலாம் என்றும் அமைச்சர்கள் ஆலேôசனை தெரிவித்தனர்.சாலைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்தும் சுற்றுலாத் தலமாக்குவது குறித்தும், தெôடர் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.இதில் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, நெடுஞ்சாலைத்துறை செயலர் சந்தானம் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.நெடுஞ்சாலைப் பணிகள்:அமைச்சர்கள் ஆய்வுகடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பணிகளை செவ்வாய்க்கிழமை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக்கேôவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.கடலூர் மாவட்டத்தில் 2010-11-ம் ஆண்டில் 731.49 கி.மீ. நீளச் சாலைகள்  580 கேôடியிலும், 34 பாலங்கள்  244.47 கேôடியிலும் நடைபெற்று வருவதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் சேவை வளôகத்தில் நடந்த இந்த ஆய்வில் தலைமைப் பொறியôளர் பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் கேô.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ரவிக்குமார், நகராட்சித் தலைவர்கள் து.தங்கராசு (கடலூர்), பச்சையப்பன் (பண்ருட்டி) உள்ளிட்டேôர் கலந்து கொண்டனர்.

சட்ட மன்ற உறுப்பினரை காணவில்லை ?

  கோ.ஐயப்பன்  கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை! யாரவது எங்கிருக்கிறார் என்று தெரிந்தால்  கண்டு பிடித்து கொண்டுவாருங்கள். தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
மாவட்ட மந்திரி பன்னீர் செல்வம் பம்பரமாக மாவட்டம் முழுதும் சுற்றுகிறார், மக்களை சந்திக்கிறார் (தேர்தல் வருகிறதல்லவா ) அனால் நம் தொகுதி ஐயப்பன் என்ன பண்றார் என்றே தெரியவில்லை. அவரால் கடலூருக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
- பாதாள சாக்கடை பிரச்சனை 
- ரயில்வே சுரங்கப்பாதைப் பிரச்சனை
- புதிய பேருந்துநிலையம்  அமைக்கும் பிரச்சனை 
- சிப்காட் மாசுபடுத்தும் பிரச்சனை
- ரயில் நிறுத்தும் பிரச்சனை (ரயில் கடலூரில் நிற்காது )
எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாமல் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவது,
கட்டபஞ்சாயத்து செய்வது, நிலா அபகரிப்பு செய்வது போன்ற தொழில் மூலம் கோடிகளில் புரல்வதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
அவர் செய்த ஒரே ஒரு சாதனை என்ன தெரியுமா ?
கலைஞர் அறிவாலயம் கட்டியிருக்கிறார்(யார் பணத்தில் ?)

மர்ம நோயால் பன்றிகள் இறப்பு கடலூரில் தொற்று நோய் அபாயம்

கடலூரில் மர்ம நோய் காரணமாக இறந்த 50க்கு மேற்பட்ட பன்றிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி கெடிலம் ஆற்றங்கரையில் வீசுவதால் தொற்று நோய் பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.கடலூர் புதுப்பாளையம் மற்றும் முதுநகர் பகுதிகளில் 500க்கு மேற்பட்ட பன்றிகளை வளர்க்கின்றனர். கடந்த சில தினங்களாக கடலூர் புதுப்பளையம் பகுதியில் மர்ம நோய் காரணமாக தினமும் ஐந்திற்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தன. அவற்றை அதன் உரிமையாளர்கள் கெடிலம் ஆற்றங்கரையில் குழிதோண்டி புதைத்தனர். ஆனால் தொடர்ந்து அதிகளவில் இறந்ததால் கடந்த சில நாட்களாக இறக்கும் பன்றிகளை சாக்கில் கட்டி  கெடிலம் ஆற்றங்கரையில் வீசி விடுகின்றனர்.இவ்வாறு 50க்கும் மேற்பட்ட பன்றிகளை கடலூர் புதுப்பாளையம் கெடிலம் ஆற்றின் கரையில் ஆங்காங்கே வீசியுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி  தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. தகவல் அறிந்த கடலூர் கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் குழு புதுப்பாளையம் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பன்றி வளர்ப்பவர்கள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்காததால் நோய் குறித்து ஆய்வு செய்ய ரத்த மாதிரி எடுக்க முடியாத நிலை உள்ளது.தொடர்ந்து பன்றிகளை மர்ம நோய் தாக்கி இறப்பதாலும், அவைகளை திறந்த வெளியில் வீசுவதாலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பரவி வரும் பேனர் கலாசாரம் : பொதுமக்கள், வியாபாரிகள் கடும் பாதிப்பு

கடலூர் மாவட் டத்தில் பரவியுள்ள டிஜிட் டல் பேனர் கலாசாரத்தினால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்."பருப்பு இல்லாமல் கல்யாணமா' என்பார்கள். ஆனால் இன்று டிஜிட்டல் பேனர் இல்லாமல் விழாவா என்கிற நிலை மக்கள் மத்தியில் வியாபித்துள்ளது. அரசு விழா, அரசியல் விழா, அமைச்சர் கள் விழா, கோவில் திருவிழா, மஞ்சள் நீராட்டு, காதணி விழா, பிறந்த நாள், காலமானார், நினைவஞ்சலி போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரதான சாலைகளில் டிஜி ட்டல் பேனர் வைக்கும் கலாசாரம் பரவியுள்ளது.தன்னுடைய உருவ படத்தை பேனர்களில் போட்டு பல நாட்கள் மக்கள் பார்வைக்கு வைப் பதற்காக ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவர் பங்கேற்கும் விழாவை பயன்படுத்திக் கொண்டு சிலர் "மெகா சைசில்' 60, 70 அடி நீளத்திற்கு மேல் பேனர் வைக்கின்றனர். குறிப்பாக மஞ்சக்குப்பம், புதுச்சேரி - கடலூர் எல்லை, நியூசினிமா போன்ற குறுகலான இடங் களில் பேனர்கள் வைப்பதால் வாகனங்கள் வருவதை கவனிக்க முடியாமல் அதிக விபத்து ஏற்படுகிறது.அத்துடன் சாலையில் உள்ள கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிப்பதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. சாலை என்பது டிஜிட்டல் பேனர் வைப்பதற்கான இடம் என ஆகிவிட்டது. இதனை வைப்பதற்கு போலீசில் முறையாக அனுமதி வாங்குவதும் கிடையாது.அனுமதியின்றி வைக் கப்படும் பேனர்களை போலீசார் கண்டு கொள்வதும் கிடையாது. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 30 நாட் களுக்கு முன்பே பேனர் வைப்பதும், நிகழ்ச்சி முடிந்து 30 நாட்கள் வரை கூட அப்புறப்படுத்தாமல் இருப்பதும் கடலூர் மாவட்டத்தில் சகஜமாகி விட்டது.இந்த பேனர் தயாரிப்பு ஷீட்டுகள் கூரை மீது போடுவதற்கு பயன்படுத்தப்படுவதால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் கிழித்துச் சென்று விடுகின்றனர். இதனால் பேனர் வைத்தவர்கள் தங்களின் எதிரணியினர் தான் வேண்டுமென்றே கிழித்து விட்டதாக கூறி ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த போலீஸ் துறை விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், கடலூர் மாவட் டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் மோசமாக பரவி வருகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்கள்  பாதிக்கப்படுகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் பாகுபாடின்றி பேனர் களை அகற்றுமாறு எஸ்.பி., யிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனைத்தொடர்ந்தும் பேனர் வைப்பதை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தலைவர்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக கட்சித் தொண்டர் களால் வைக்கப்படும் பேனர்கள் பொது மக்களின் முகம் சுளிப்பிற்குள் ளாகி சம்மந்தப்பட்ட தலைவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டு மக்கள் செல்வாக்கை இழக்கும் நிலைதான் ஏற்படும்.
கலெக்டர் கடும் எச்சரிக்கை...:இந்நிலையில் கலெக்டர், டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்க  முன் அனுமதியை 7 நாட்களுக்கு முன்பே  பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன் வைத்து முடிந்ததும் இரண்டு நாட்களில் அவர்கள் செலவிலேயே அகற்ற வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விளம்பர பலகை அமைத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வைத்து சட்டவரம்பை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனுமதியற்ற விளம்பர பேனர்கள் மற்றும் சாரங்கள் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் போலீஸ் துறையே அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான செலவினத் தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்வதோடு, வழக்கும் தொடரப்படும்.

குப்பை மேடானது சில்வர் பீச்

விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ததைத் தொடர்ந்து கடலூர் சில்வர் பீச் குப்பை மேடாக காட்சி அளித்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 472 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஸ்வரூப விநாயகர் சிலைகள் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 380 சிலைகளை மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட் டது. அவற்றில் 218 சிலைகளும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 78 சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து கடலூர் சில்வர் பீச்சில் கரைக்கப் பட்டது. கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் பெரும்பாலான சிலைகள் 50 முதல் 100 மீட்டர் தூரத்திலேயே கரைக்கப்பட்டது. இதனால் கடலில் போடப்பட்ட சிலைகள் உடைந்து அலையில் கரைக்கு அடித்து வரப்பட்டது. அதேப்போன்று சிலைகள் வைக்க பயன்படுத்திய பலகைகள், கழிகள் மரத்துண்டுகள் மற்றும் சிலைகளில் போடப்பட்டிருந்த மாலைகள், வேட்டிகள் அனைத்தும் அலையில் மீண்டும் கரைக்கு அடித்து வரப்பட்டன. இதில் மரச்சட்டங்கள், பலகைகள், கழிகளை பலர் அடுப்பெறிக்க எடுத்துச் சென்றனர். சிலைகள் மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லப் பட்டன. மாலைகள், எலுமிச்சை பழம், பிளாஸ்டிக் பைகள் கரை முழுவதும் சிதறிக் கிடந்ததால் கடற்கரை அசுத்தமாக காணப்பட்டது.

திண்டாடும் ஆளூம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புறக்கணிப்புப் புகாரில் எம்.ஆர்.கே?

டந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில், நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய முன்று தொகுதிகள் மட்டுமே தி.மு.க-வுக்குக் கிடைத்தன. பண்ருட்டி, மங்களுர், விருத்தாசலம், காட்டுமன்னார்குடி, சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் எதிர்க் கட்சிகள்தான் வெற்றி பெற்றன. தி.மு.க. சார்பில் வென்ற மூன்று பேரில் ஒருவர், தி.மு.க. மாவட்டச் செயலாளரும் சுகாதாரத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். மற்ற இருவர்... நெல்லிக்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன், கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன்.
ஏனோ அமைச்சருக்குப் பிடிக்காமல்போனதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவருக்கும் ஸீட் கிடைக்காது என்ற பேச்சு மாவட்டம் முழுக்க அடிபடுகிறது. இறங்கி விசாரித்தால், மடை திறந்த வெள்ளமாகக் கொட்டுகிறார்கள்.
''ஆரம்பத்தில் இருந்தே அமைச்சருக்கும், அந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கும் ஆகவே ஆகாது. அமைச்சரே மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், அந்த
எம்.எல்.ஏ-க்களுக்கு இந்த தடவை ஸீட் கொடுக்க மாட்டார். தவிர, தொகுதி மறு சீரமைப்பில்... சபா.ராஜேந்திரனோட நெல்லிக் குப்பம் தொகுதி காணாமல்போயிடுச்சு. அதனால், அவர் பண்ருட்டி அல்லது நெய்வேலிக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கார். ஆனா, அவர் எந்தத் தொகுதியைக் கேட்டாலும், அதை கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிவிட அமைச்சர் முடிவு பண்ணிட்டார். பண்ருட்டி ஒன்றியத்தில் சபாவுக்கு கட்சி செல்வாக்கு அதிகம். அதனால், அ.தி.மு.க. தொழிற்சங்கப் பிரமுகர் ஒருவரின் மகனை தி.மு.க-வுக்கு அமைச்சர் இழுத்துட்டார். இப்போ, பண்ருட்டி ஒன்றியமே அவருடைய கையில் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உண்டாக்கிட்டாங்க.
அதேபோல, கடலூர் தொகுதியில் அய்யப்பனுக்கு ஸீட் கொடுக்காத எம்.ஆர்.கே., அங்கே இளைஞர் அணியைச் சேர்ந்த பழக்கடை ராஜாவையும், ஏ.ஜி.ராஜேந் திரனின் மகன் சுந்தரையும் முன்னிலைப்படுத்த ஆரம்பிச்சுட்டார்!'' என்கிறார்கள் எம்.ஆர்.கே-யின் மூவ் தெரிந்த தி.மு.க-வினர்.
''கடந்த முறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மத்திய சாலை மேம்பாட்டு நிதியான 33 கோடி ரூபாயில் விஜயகாந்த்தின் விருத்தாசலம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது ஆறு கோடி ரூபாய். ஆனால், சபாவின் நெல்லிக்குப்பம் தொகுதிக்கு ஒரு ரூபாய்கூட கிடையாது. அதேபோல, அ.தி.மு.க. தொகுதிகளான சிதம்பரத்துக்கு ஆறு கோடி ரூபாயும், புவனகிரிக்கு ஐந்து கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அய்யப்பனின் கடலூர் தொகுதிக்கு வெறும் 75 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கினார்கள். இந்த ஆண்டும் இதே நிலைதான் தொடர்கிறது. மொத்த நிதியான 40 கோடி ரூபாயில், நெல்லிக்குப்பத்துக்கு ஒரு கோடியும், கடலூருக்கு 50 லட்சமும்தான் ஒதுக்கப்பட்டு உள்ளது'' என ஆதங்கத்தோடு சொல்கிறார்கள் அந்த இரு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்களும்.
கடலூர் மாவட்டப் பொறுப்பாளரான உடன்பிறப்பு ஒருவர், ''தனக்குப் பிடிக்காத ஆட் களோட பெயரைப் போட்டு பத்திரிகை அடிச்சா, அமைச்சர் அந்த நிகழ்ச்சிக்கு வர மாட்டார். சமீபத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம் தன் தங்கச்சியோட கல்யாணப் பத்திரிகையில் அமைச்சர் பொன்முடியின் படத்தைப் போட்டதால், அந்தக் கல்யாணத்தையே எம்.ஆர்.கே. புறக் கணிச்சார். கட்சி நிகழ்ச்சிகளை முன்கூட்டி சொல்லாமல் பிடிக்காத ஆட்களைத் தவிக்கவிடுவதும் எம்.ஆர்.கே-வுக்கு வழக்கம். பிடிக்காத நிர்வாகிகள் இருக்கும் ஏரியாவுக்கு, அரசு நலத் திட்ட உதவிகளும் சரிவரக் கிடைக்காது!'' என்றார் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தோடு.
சொந்தக் கட்சிக்காரர்களிடம் இந்த அளவுக்கு முரண்டு காட்டும் அமைச்சர், பா.ம.க-விடம் மட்டும் பாசமழை பொழிவாராம். நெய்வேலி தொகுதியில் முன்னாள் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளரான குணசேகரன் நடத்திய ஒரு விழாவை எம்.ஆர்.கே. புறக்கணித்ததின் பின்னணியையும் 'பா.ம.க. பாசத்'தோடு முடிச்சிடுகிறார்கள் தொகுதி உடன்பிறப்புகள்.
இது குறித்துப் பேசும் எம்.ஆர்.கே-யின் ஆதரவாளர்கள், ''சபா.ராஜேந்திர னையும் அய்யப்பனையும், அமைச்சர் மரியாதையோடுதான் நடத்துகிறார். கட்சி விழாக்களிலும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சிப் பாகுபாடு பார்க்காமல் மக்கள் நலனுக்காக நிதி ஒதுக்குவதைக்கூட அவர்கள் குற்றமாக்குவதில் கொஞ்சமும் நியாயம் இல்லை. விஜயகாந்த் தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்கினால்தானே, அடுத்த முறையாவது அங்கே தி.மு.க-வை ஜெயிக்கவைக்க முடியும். சின்னச் சின்ன கசப்புகளைப் பெரிதாக்கி, அமைச்சருக்கு சங்கடத்தை உண்டாக்க சிலர் திட்டமிடுகிறார் கள்!'' என்கிறார்கள்.
இதற்கிடையில் எம்.ஆர்.கே-யை யும் இரு எம்.எல்.ஏ-க்களையும் நேரில் அழைத்து ஸ்டாலின் சமாதானப் பஞ்சாயத்துப் பேசியதாகவும் ஒரு தகவல்!
- கரு.முத்து