கடலூர் மாவட்டத்தில் 237 புதுச்சேரி மாநில பதிவு எண் வாகனங்கள் பிடிபட்டதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
போலீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலீஸ் போல் நடித்து வாகன தணிக்கை செய்தவர் கைது
கடலூரில் போலீஸ் போல் நடித்து, வாகன தணிக்கையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.கடலூர் ஆனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(37). இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் குண்டு சாலை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீர்குப்பம் பாலசுப்ரமணியர் கோவில் எதிரே மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த வாலிபர் ஒருவர், சக்திவேலை வழி மறித்து, "உன்னிடம் வாகனம் ஓட்டுவதற்கான ஆவணங்கள் உள்ளதா? இல்லையெனில், 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்' என்றார்.சந்தேகமடைந்த சக்திவேல், அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் உதவியுடன் அவரை பிடித்து, கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், கடலூர் திருப்பாதிரிபுலியூர், தானம் நகரைச் சேர்ந்த தனுசு(31) என தெரிந்தது. அவரது மோட்டார் சைக்கிளை (பி.ஒய்-01-யு-9459) பறிமுதல் செய்தனர்.புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, தனுசுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)