கோரிக்கை பதிவு

அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாறுவேடத்தில் அதிகாரிகள் குழு அதிரடி ஆய்வு : கடலூர் அரசு மருத்துவமனை சீர்கேடு அம்பலம்

கடலூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து  10 பேர் கொண்ட குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் ஊழியர்கள் மனிதநேயமின்றி நடந்து கொண் டதை கண்கூடாக பார்க்க முடிந் தது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் கூறினார்.
கடலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேடு, சிகிச் சைக்கு லஞ்சம், நோயாளிகளிடம் பரிவு காட்டாதது போன்ற பல புகார்கள் சுகாதாரத்துறைக்கு வந் துள்ளன. அமைச்சர் பன்னீர் செல் வம் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் தலைமையில் கண்காணிப்பாளர் ரங்கராஜன், ஈஸ்வரன், புள்ளிவிவர உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிரடி படையினர் மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நோயாளிகள் போல் மாறுவேடத்தில் ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  இன்று (நேற்று) எங்கள் குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளது தெரிய வந் துள்ளது. ஊழியர்கள் நோயாளிகளிடம் மனிதநேயம் இல்லாமல் நடத்து கொண்டுள்ளனர். வயிற்று வலியால் துடித்த நோயாளி ஒருவருக்கு 2 மணி நேரமாக ஸ்கேன் எடுக்காமல் காக்க வைத்ததும் கண்கூடாக காண நேர்ந்தது.  சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற் றது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள ஸ்டோர், ஆபீஸ், மகப் பேறு, சமையல் கூடத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டு மாற்றியமைக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. எக்ஸ்ரே பிலிம் போதுமான அள விற்கு தட்டுபாடின்றி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் ஏழை மக்களுக்கு மருத் துவம் சென்றடையவேண்டும் என்பதேயாகும். ஆய்வின் போது தவறு செய்தவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். சிலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நடவடிக்கை குறித்து ஆய்வு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். இது போன்ற அதிரடி ஆய்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இவ் வாறு கூடுதல் இயக்குனர் கூறினார்.

அரசு மருத்துவக் கல்லூரி துவக்க முதல்வருக்கு கவுன்சிலர் கோரிக்கை

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத் துவ கல்லூரி துவக்கக் கோரி முதல்வருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன் றிய கவுன்சிலர் மாரியப்பன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியும்,  இன்ஜினியரிங் கல்லூரிகளும் உள்ளன. இந்த மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி துவக் கப்பட்டது. அதேபோல் இந்த பகுதிமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4ம் தேதி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.
கடலூர் நகர மா.கம்யூ., குழுக் கூட்டம் நடந்தது. ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், நகர செயலாளர் சுப்புராயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமில்லாமல் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கிறது. நகர மெங்கும் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் கொசு, பன்றிகளால் சிக்குன்-குனியா, டெங்கு, மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்து வருவது வேதனையளிக்கிறது. மக்களை நோய் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது.
மாவட்ட சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் கொசு, பன்றிகளை அழித்திட நடவடிக்கை எடுத்திடக் கோரியும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைத்திடவும், இதயம், நரம்பியல் போன்ற  முக்கியத் துறைக்கு உடன் சிறப்பு மருத்துவர்களை பணியில் நியமிக்கவும், கொடிய நோயிலிருந்து மக் களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடலூரில் தொடரும் காய்ச்சல்

கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்ச்சல் நோய் தொடர்ந்து பரவி வருகிறது. காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மருந்துக் கடைகளில் மருந்து வாங்குவோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. கடலூரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் பெருமளவுக்குப் பரவி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். கொசுக்களின் இனப்பெருக்கம், பன்றிகள் எண்ணிக்கை அதிகரிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கூறுகையில், பல்வேறு வகையான காய்ச்சல்கள் தீவிரமாகப் பரவி வருவதை அரசு நிர்வாகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மூளைக்காய்ச்சல் காரணமாக கடலூரில் பள்ளி மணவர் ஒருவரும், டெங்குக் காயச்சல் காரணமாக அஸ்வத்தாமன் என்பவரும் புதுவை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு கடந்த வாரம் இறந்துள்ளனர். இந்த இருவரும் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறக்காததால் மாவட்ட நிர்வாகமும் பொது சுகாதாரத் துறையும் அலட்சியமாக இருக்க முடியாது. கடலூர் மற்றும் கோண்டூர் உள்ளிட்ட 7 ஊராட்சிப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு, மூளைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதுகுறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் கூறியது: கடலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நாளொன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகிறார்கள். இவர்களில் 60 சதவீதம் பேருக்கு காய்ச்சல் உள்ளது. தற்போது பெய்து வரும் அதிகப்படியான பனியாலும், கொசுக்களாலும், பாக்டீரியாக்களாலும் பரவும் காய்ச்சலாக அதிகம் காணப்படுகிறது. சிக்குன் குனியா போன்ற காய்ச்சல், டைஃபாய்டு காய்ச்சலும் உள்ளது.  காய்ச்சலுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ளன.  கடலூரில் கொசுத் தொல்லையால்தான் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆங்காங்கே தண்ணீரும் சாக்கடையும் தேங்கி விடுவதால் பல நோய்கள் பரவக் காரணம் ஆகிவிடுகிறது என்றார்.

வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா : அரசு மருத்துவமனைகளில் கூட்டம்


பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் சிக்குன் குனியா நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

                                                             
கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பருவநிலை திடீர், திடீரென மாறுவதால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு வாரம் பெய்த கனமழைக்கு பின்னர் சிக்குன் குனியா நோய் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவதால் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது.
சிக்குன்குனியா நோய் தாக்குதலால் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் போடப்படும் ஊசி மற்றும் மருந்துகளுக்கே கட்டுப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு நோயாளிகளின் வருகை பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக மூவாயிரம் புறநோயாளிகள் வருவார்கள். ஆனால் கடந்த 10 நாளாக தினசரி 4,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதேபோன்று சிதம்பரத்தில் 2,500 பேரும், விருத்தாசலத்தில் 1,500 பேரும், குறிஞ்சிப் பாடியில் 650 ருலிருந்து 1000 பேர் வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் அதிகளவு காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட அரசுபொது மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் கூறியதாவது:

வழக்கம்போல் வைரஸ், சளி, இருமல், டைபாய்டு காய்ச்சலுடன் சிக்குன் குனியா நோய் தாக்குதல் உள்ளது. மழை விட்டு தேங்கும் சுத்தமான தண்ணீரில் உருவாகும்"ஏஜிடி' வகை கொசுக்கள் மூலம் சிக்குன் குனியா நோய் பரவுகிறது. இதனால் மூட்டுகளில் சவ்வுகள் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படும். பாதங்களில் வீக்கம் காணப்படும்.
இந்த வகை கொசுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகை கொசுக்கள் பகலிலும் கடிக்கும் என்பதால் அலட்சியம் செய்யாமல் உடல் முழுவதும் கவர் செய்யும் விதமான உடைகளை அணிய வேண்டும். வீடுகளில் கொசுவலையை பயன்படுத்த வேண்டும்.
குளிப்பதற்கு மற்றும் துணி துவைப்பதற்காக உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தும் தண்ணீரீல் 30 எம்.எல்., அளவிற்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் இந்த வகை கொசு உருவாகாது.
   குடிப்பதற்கும் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் உள்ள தொட்டிகளில் இதை கண்டிப்பாக கலக்கக்கூடாது. இதற்கென தனியாக மருந்து மாத்திரைகள் கிடையாது. காய்ச்சல் மற்றும் வலிக்கு டாக்டர் பரிந்துரை செய்யும் மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டால் போதுமானது. நோய் குணமாகி 10 அல்லது 15 நாட்களுக்கு உடன் வலி மற்றும் மூட்டுகளில் வலி இருக்கும். இதனால் அச்சம் அடையத் தேவையில்லை.அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வழக்கத்தை விட 10 சதவீதம் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தீவிர சிகிச்சையால் மாவட்டத்தில் பல இடங்களில் நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடலூர் அரசு மருத்துவமனைக்கு மூன்று மாதத்திற்கு தேவையான நாய்க்கடி ஊசி 10 லட்சம் மதிப்பிலும், 25 லட்சம் மதிப்பில் மற்ற நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது. மற்ற தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவையான அளவிற்கு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது என தெரிவித்தார்.