கோரிக்கை பதிவு

காற்றில் பறக்குது கலெக்டர் உத்தரவு

கடலூர் அடுத்த பெரியபட்டு அருகே கடந்த நவம்பர் 23ம் தேதி தனியார் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் ஒரு மாணவர் இறந் தார். 34க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். அடுத்த சில நாட்களில் நாகை மாவட் டத்தில் தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில் 10 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் இறந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். கூடுதல் மாணவர்கள் ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களுக்கு உரிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அதனை மீறும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரித்தார். அதன்படி அதிகாரிகள் சில நாட்கள் பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர். இந்த சம்பரதாயம் ஓரிரு நாளில் முடிந்தது. அதன்பிறகு பள்ளி வாகனங்கள் "மாமூலாக'  அதிக மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். நேற்று நடந்த விபத்தில் சிக்கிய வேனில் 18 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆனால் அதில் 32 மாணவ, மாணவிகளும் ஐந்து ஆசிரியர்கள் சென்றுள் ளனர். அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென் றதே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

யானைக்கால் நோய் ஒழிப்பு பணி: டி.இ.சி., மாத்திரை இன்று வினியோகம்

பொது மக்கள் டி.இ,சி., அல்பண்டசோல் மாத்திரைகளை உட்கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்."கியூலக்ஸ்' வகை கொசுக்கள் மூலம் பரவும் யானைக்கால் என்னும் கொடிய நோய் ஒழிப்பு பணி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாத நிலை உள்ளதால் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனைப்படி ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட ஒரே நாளில் அனைவரும் தமது வயதிற்கு ஏற்ப டி.இ.சி., அல்பண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வதால் இந்நோயினை அறவே ஒழிக்க முடியும்.இதனை கருத்தில் கொண்டு பொது சுகாதாரத்துறை அறிவுரையின்பேரில் குறிப்பிட்ட அனைவரும் உட்கொள்ளும் நிகழ்வு மாவட்டத்தில் இன்று (28ம் தேதி) நடக்கிறது.

100 மி.கி., கொண்ட டி.இ.சி., மாத்திரைகள் 2-5 வயதுள்ளோருக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு இரண்டும், 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றும், அவரவர் வயதிற்கேற்ப வழங்கப்படும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற் பட்டவர், நீண்ட காலமாக நோய்வாய் பட்டவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. இம் மாத்திரைகளை சாப்பிடுவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒருசிலருக்கு காய்ச்சல், அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படுமாயின் அது அவர்களின் உடலுக்குள் உள்ள யானைக்கால் நோய் புழுக்கள் அழிக்கப்படுவதன் விளைவேயின்றி அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கு வாய்ப்பு

சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய செவிலியர்களுக்கான நேர்முக தேர்வு வரும் 5ம் தேதி கொச்சியில் நடக்கிறது.இது குறித்து ஓவர்சிஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிட் தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பி.எஸ்.சி. பெண் செவிலியர்கள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற பெண் பிசியோதெரபிஸ்ட்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 5ம் தேதி முதல் 21ம் தேதிவரை கொச்சியில் நடக்கிறது.

பெண் செவிலியர்கள் (ஓராண்டு அனுபவம்), பிசியோதெரபிஸ்டுகள் (இரண்டாண்டு அனுபவம்) மற்றும் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்களின் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல், வெள்ளை நிற 6 புகைப்படத்துடன் எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை 20 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான வெளி நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் நடைபெறும் நேர்முகத் தேர்வு தொடர்பிலான நடைமுறைகளை வரும் 5ம் தேதிக் குள் செய்திட வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அகல பாதையில் முடிக்கப்பட்ட பணிகளில் 90 சதவீதம் திருப்தி: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு பேட்டி

அகல ரயில்பாதையில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளில் 90 சதவீதம் திருப்தியாக உள்ளது என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு கூறினார்.
மயிலாடுதுறை-விழுப்புரம் இடையிலான 122 கி.மீ., அகல ரயில்பாதைப்பணி முடியும் தருவாயில் உள்ளது. இதனை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு இரண்டு நாள் ஆய்வு பணி மேற் கொண்டார். இறுதி நாளான நேற்று காலை கிள்ளை ரயில் நிலையத்தில் ஆய்வை துவக்கினார். அவருடன் தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் டிராலியில் ஆலப்பாக்கம், கேப்பர் குவாரி வழியாக பிற்பகல் கடலூர் முதுநகர் வந்தடைந்தனர்.
அப்போது தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:இன்று காலை கிள்ளையில் துவங்கி வரும் வழியில் ஆர்.வி.என்.எல்., செய்து வரும் பணிகளான ரயில் பாதை, பிளாட்பாரங்கள், கட்டட பணிகள், கிராசிங் பாயின்ட்கள், சிக்னல்கள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டோம். முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டுமானால் நாளொன்றுக்கு 25 கி.மீ., தான் போக முடியும். அப்படிப் பார்த்தால் 5 நாட்கள் பிடிக்கும். தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் மாற்றி அமைக்க வேண்டிய பணிகளை இந்த ஆய்விலேயே கூறினால் எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு இந்த முதற்கட்ட ஆய்வு பயனுள்ளதாக இருக்கும். மார்ச் மாத இறுதிக்குள்  பணிகள் முழுவதும் முடிக்க வேண்டும். இந்த மார்க்கத்தில் 32 பெரிய பாலங்களும், 290 சிறிய பாலங்களும் உள்ளன. முக்கியமாக பாலங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
பாலங்கள் நிறைய இருந்ததால் கட்டிமுடிக்க காலதாமதாதம் ஏற்பட்டது.  இந்த மார்க்கத் தில் 30 ஆயிரம் இரும்பு பிட்டிங் குகள் திருடுபோயுள்ளன. வேறெங்கும் இதுபோல நடந்ததில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் பணிகள் தாமதமாகியுள்ளன. எப்படியும் வரும் மார்ச் இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு தான் ரயில் ஓட்டப்படும். தற்போது சரக்கு ரயில் ஓட்டுவதற்கு போதுமான வசதிகள் உள்ளன. தேவைப்படும்போது சரக்கு ரயிலை இயக்குவதற்கு எந்த தடையும் இல்லை.  இவ்வாறு ராமநாதன் கூறினார். பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்.நாயுடு கூறும் போது, இது ஒரு முதற்கட்ட ஆய்வுதான். இது வரை ஆய்வு செய்ததில் முடிக்கப்பட்ட பணிகளில் 90 சதவீதம் திருப்தியாக உள்ளது. பணிகள் முழுவதும் முடிந்த பின்னர் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றார்.

கடலூரில் இன்று மாசிமகம்: படகு சவாரிக்கு போலீஸ் தடை

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை மாசிமகம் திருவிழா கொண்டாப்படுகிறது. இதையொட்டி கடலில் படகு சவாரிக்கு போலீஸ் தடைவிதித்து இருக்கிறது.தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பல்வேறு கோயில்களில் இருந்தும் கடல் தீர்த்தவாரிக்கு உற்சவ மூர்த்திகள் அலங்கரிப்பட்ட பல்லக்குகளில் எடுத்து வரப்படுவதால் கடற்கரையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள்.இதையொட்டி கடலூர் நகரிலும் தேவனாம்பட்டினம் கடற்கரையிலும் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. மாசிமகம் திருவிழாவுக்கு வருவோர் படகு சவாரிக்கு தடைவிதிப்பது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.போலீஸôரும் கடற்கரை கிராம மக்களும் சுமார் 100 பேர், திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் யாரும் கடலில் மூழ்கிவிடாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடலூரில் காவல்துறை ஒத்திகை நிகழ்ச்சி

கடலூர் ஆயுதப்படை போலீசாருக்கு படை திரட்டு பயிற்சி முகாம் கடலூர் ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் நடந்தது.
15 நாள் பயிற்சி முகாம் கடந்த 10ம் தேதி தொடங்கியது. 400 போலீசார் பயிற்சி பெற்றனர். கவாத்து பயிற்சி, தடியடி பிரயோகம், கண்ணீர் குண்டு வீசும் முறை, துப்பாக்கி சுடுதல், முதலுதவி மற்றும் மீட்பு பணிகள், நவீன துப்பாக்கி கள் பயன்படுத்துதல் உள் ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கவாத்து பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் பார்வையிட்டார். டி.எஸ்.பி ஹரிகிருஷ்ணன் உடனிருந் தார். அணிவகுப்பு மற்றும் கலவர கும்பலை அடக்கும் செயல்முறை விளக்க நிகழ்ச்சிகள் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் நடந்தது.கலவரம் கட்டுக்கடங்காமல் போகவே எச்சரிக்கை விடப்பட்டு அவர்கள் மீது துப் பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்தவரை போலீசார் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். கல வரம் அடக்கப்பட்டது.
நிஜ நிகழ்ச்சியை போல் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 400 போலீசார் கலந்து கொண்டனர். செயல்முறை நிகழ்ச்சியை நேரில் பார்த்த எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் பாராட்டு தெரிவித்தார்.

மாசிமக திருவிழா நாளை கோலாகலம்

கடலூர் தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தாண்டு மாசிமக திருவிழா நாளை(28ம் தேதி) நடைபெறுகிறது.
திருக்கோவிலூர் உலகளந்த சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, பாடலீஸ்வரர் சுவாமி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட் டம், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 30 கோயில்களில் இருந்து சுவாமிகள் கடலில் தீர்த்தவாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவனாம்பட்டினம் மற்றும் அதனையொட்டி உள்ள சில்வர் பீச் கடற்கரை பகுதி மற் றும் சிங்காரதோப்பு உள்ளிட்ட இடங்களில் மாச மக திரு விழாவில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு சாமியை தரி சனம் செய்வார்கள்.
200 போலீசார் பாதுகாப்பு படகு சவாரிக்கு தடை
திருக்கோவிலூர் உலகளந்த சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, பாடலீஸ்வரர் சுவாமி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட் டம், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 30 கோயில்களில் இருந்து சுவாமிகள் கடலில் தீர்த்தவாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவனாம்பட்டினம் மற்றும் அதனையொட்டி உள்ள சில்வர் பீச் கடற்கரை பகுதி மற் றும் சிங்காரதோப்பு உள்ளிட்ட இடங்களில் மாச மக திரு விழாவில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு சாமியை தரி சனம் செய்வார்கள்.
கடந்த ஆண்டு நடந்த விழாவின் போது சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது. கடலில் குளித்த போது மூழ்கி உயிரிழந்தவர் கள் சம்பவங்கள் நடந்துள்ளன.இவ்விழா தொடர் பாக பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து கடலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆலோ சனை கூட்டம் நடந்தது.
டிஎஸ்பி ஸ்டாலின் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஏழுமலை, கண்ணன், சப்&இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், ஆனந்தபாபு, ப்ரியா, கவிதா மற்றும் தேவனாம்பட்டினம், ரெட்டிச்சாவடி, கடலூர் முதுநகர், துறைமுகம் ஆகிய பகுதி கடற்கரை கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவிழா காண வரும் பொதுமக்களை விசைப்படகில் ஏற்றிக்கொண்டு ஆற்றிலோ, கடலிலோ செல்லக் கூடாது. குளிப்பதற்கு தடை விதித்து கண்காணிக்க வேண்டும். போதிய மின்விளக்குகள் தேவையான இடங்களில் அமைக்க வேண்டும். அமைதியான முறையில் திருவிழா நடைபெற பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கிராம நிர்வாகிகள் உதவி புரிய வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது. போலீசாருடன் கடற்கரை கிராமப்பகுதி மக்களும் நீரில் மூழ் காத வகையில் பாதுகாப்பு கவசங்களுடன் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என போலீஸ் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
காவல்துறை சார்பில் மாசி மக திருவிழாவுக்கு எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர், 8 சப்& இன்ஸ்பெக்டர், 72 போலீசார் மற்றும் 64 ஆயுதப்படையினர் உள்ளிட்ட 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர்.

அண்ணாமலை பல்கலையில் நுழைவு தேர்வு: விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மருத் துவம், இன்ஜினியரிங் சேர்க் கைக்கான நுழைவு தேர்வு விண்ணப் பங்கள் விற்பனை துவங்கியது.சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழகத்தில் 2010-11ம் ஆண்டிற்கான பி.இ., பி.எஸ்.சி., (விவசாயம்), பி.எஸ்.சி., (தோட் டக்கலை), எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்,. பி.பி.டி., பி.எஸ்.சி., (நர்சிங்), பி.பார்மசி., போன்ற பட்ட படிப்பு நுழைவுத் தேர்வுக் கான விண்ணப்பங்கள் விற்பனையை துணை வேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.

பி.இ., பி.எஸ்.சி.,( விவசாயம்), பி.எஸ்.சி., (தோட்டக்கலை) போன்ற பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் 400 ரூபாய்க் கும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி.,(நர்சிங் மற்றும் பி.பார்ம்) ஆகியவைகளுக் கான விண்ணப்பம் 300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும், விண் ணப்பங்களை தபால் மூலமாகவோ, நேரிடையாகவோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் இக்கல்வியாண் டில் சேர்ந்து படிக்க நுழைவுத்தேர்வு அவசியம் என்றும், தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த நுழைவு தேர்வை கட்டாயம் எழுதவேண்டும் என்றும் துணைவேந்தர் ராமநாதன் கூறினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

24 மணி நேர மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட பெண்கள்

விதிகளுக்கு மாறாக 24 மணி நேரமும் இயங்கிய டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடைக்கு பூட்டுப் போட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.கடலூரில் 24 மணி நேரமும் இயங்கும் பெட்ரோல் நிலையம் கிடையாது. 24 மணி நேரமும் இயங்கும் ரத்த வங்கி கிடையாது. தனியார் மருத்துவமனைகள் ஒன்றிரண்டு, மருந்தகங்கள் ஒன்றிரண்டு மட்டுமே 24 மணி நேரமும் இயங்குகின்றன. அவற்றிலும் இரவு 1 மணிக்கு மேல் எதிர்பார்க்கும் அளவுக்குச் சேவை இல்லை. இவையெல்லாம் அத்தியாவசியத் தேவைகளாக இருந்தும் அவைகள் பெருமளவுக்கு 24 மணி நேர சேவையாக மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லாத நகரமாகக் கடலூர் உள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க வேண்டும் என்பது விதி. அவர்களுக்கு வார விடுமுறையும் இல்லை. வார விடுமுறை வேண்டும், 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் ஒருபக்கம் போராடி வருகின்றன.மறுபக்கம் பல டாஸ்மாக் கடைகள் விதிகளுக்கு மாறாக 24 மணி நேரமும் இயங்குவதாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன.  அத்தகைய 24 மணி நேர டாஸ்மாக் மதுக்கடை, கடலூர் முதுநகர் மீன் அங்காடி அருகே இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். நள்ளிரவு நேரத்திலும் கடைக்குள் தூங்கிக் கொண்டு இருப்பவர்களை எழுப்பி, மதுபாட்டில்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள்.இதனால் அப்பகுதியில் எந்த நேரமும் குடிகாரர்கள் நடமாட்டம், ஆபாசமான பேச்சுக்கள், மீன் விற்பனை உள்ளிட்ட வியாபாரத்தைப் பெரிதும் பாதிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் பலரும் அச்சம் அடைய நேரிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.இதனால் எரிச்சலடைந்த அப்பகுதிப் பெண்கள் சிலர் வியாழக்கிழமை அதிகாலை, அந்த டாஸ்மாக் மதுக்கடையை வெளிப்புறமாகப் பூட்டி விட்டனர். இதனால் பொதுமக்கள் பலரும் அங்கு திரண்டனர். காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. முதுநகர் போலீஸ் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் வந்து, டாஸ்மாக் ஊழியர்களை விடுவித்தார். இனிமேல் இவ்வாறு நடக்கக் கூடாது என்றும் எச்சரித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

விழுப்புரம்-​ மயிலாடுதுறை அகல ரயில் பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

விழுப்புரத்துக்கும், ​​ மயிலாடுதுறைக்கும் இடையே 122 கி.மீ.​ தொலைவுக்கு ரூ.400 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜி.எஸ்.​ நாயர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.இப்பணிகள் தொடங்கியதையொட்டி,​​ இப்பாதையில் 2006-ம் ஆண்டு ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.​ 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பணிகள் நிறைவடைந்து,​​ கடந்த மாதம் 5-ம் தேதி முதல் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, ​​ கடந்த 10-ம் தேதி தென்னக ரயில்வே மேலாளர் தீபக் கிரீசன் சோதனை ரயில் மூலம் இப் பாதையில் ஆய்வு மேற்கொண்டார்.​ அப்போது அவர் கூறுகையில்,​​ மார்ச் மாதம் இறுதியில் பணிகள் முழுமையாக முடிவுறும்.​ அதன் பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்தவுடன் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிலையில்,​​ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜி.எஸ்.​ நாயர் வெள்ளிக்கிழமை தனி டிராலி மூலம் மயிலாடுதுறையிலிருந்து ஆய்வு மேற்கொண்டார்.​ மயிலாடுதுறை,​​ சீர்காழி,​​ கொள்ளிடம்,​​ சிதம்பரம் வரையிலான பாதையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.​ ரயில்பாதை,​​ பாலங்கள்,​​ கட்டடங்கள்,​​ சிக்னல்கள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் உறுதித்தன்மை குறித்து 30 நிமிடங்கள் ஆய்வு நடத்தினார்.ஆய்வின்போது ஆணையருடன் திருச்சி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன்,​​ மேலாளர் ​(இயக்குதல்)​ முருகுதாஸ்,​​ உதவிகோட்ட மேலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

மருந்தாளுனர் பட்டயப் படிப்பு பதிவுகளை சரிபார்க்க கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அழைப்பு

கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மருத்தாளுனர் பட்டயப்படிப்பு  பதிவு செய்துள்ளவர்கள் நேரில் வந்து பதிவு மூப்பை சரிபார்த்துக் கொள்ள  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகரசு மருத்துவ கல்லூரி இயக்குனரகத் தால் மருந்தாளுனர் பணி இடங்களை நிரப்புவதற்கு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பட்டியல் கேட்கப் பட்டுள்ளது. இந்த பணி இடத்திற்கு எஸ்.எஸ். எல்.சி., தேர்ச்சி பொது தகுதியும், மருந்தாளுனர் பட்டயப்படிப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும்  தாழ்த்தப் பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள், அருந்ததி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், முஸ்லீம்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு குறைந்தபட்ச வயது 1-7-2009  அன்று 18 வயதும், அதிபட்ச வயது வரம்பு இல்லை.
ஆனால் அனைத்து முற்பட்ட வகுப்பினருக்கு 18 வயது முதல் 35 வயது மிகாமல் இருக்கவேண்டும். எனவே மேற்கண்ட தகுதியுடன் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 16-2-2010 ம் தேதி வரை பதிவு செய்துள்ள மனு தாரர்கள், தங்கள் பதிவு அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வரும் 25ம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நேரில் வந்து  தங்கள் பதிவுகளை சரி பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

சுய உதவிக் குழு நிதி ரூ.6.5 லட்சம் கையாடல்

ஆடவர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகை ரூ.​ 6.5 லட்சத்தைக் கையாடல் செய்ததாக,​​ தொண்டு நிறுவன நிர்வாகி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் அருகேயுள்ள நடுவீரப்பட்டு பகுதியில் சிற்பி,​​ முத்தமிழ்,​​ பாரதி என்ற பெயரில் ஆடவர்களுக்கான 3 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன.​ இக் குழுக்களை கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள தொண்டு நிறுவனம் வழிநடத்தி வந்தது.​ ரூ.​ 15 லட்சத்தில் விசைத்தறி அமைக்கும் பொருட்டு,​​ இந்த 3 குழுக்களையும் இணைத்து நியூ டாண் பேப்ரிக் பெடரேஷன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.​ இதில் ரூ.​ 7.5 லட்சம் அரசு மானியமாகவும் ரூ.​ 7.5 லட்சம் வங்கிக் கடனாகவும் வழங்கப்பட்டது.÷இவைத் தவிர விசைத்தறிக் கூடம் அமைக்க 20 சென்ட் நிலத்துக்கு ரூ.​ 1.​ 45 லட்சமும்,​​ கட்டடத்துக்கு தலா ரூ.​ 2 ஆயிரம் வீதம் உறுப்பினர்கள் 36 பேர் வழங்கினர்.இந்நிறுவனத்தின் பொதுக் குழு,​​ செயற்குழு தீர்மானம் மற்றும் அனுமதி இன்றி வங்கியில் எந்த தொகையும் எடுக்க முடியாது என்று இருந்தபோதும்,​​ சுய உதவிக் குழுக்களின் நியூ டாண் பேப்ரிக் பெடரேஷனுக்காக வழங்கப்பட்ட அரசு மானியத்தில்,​​ ரூ.​ 6.5 லட்சத்தை பொதுக் குழு,​​ செயற்குழு அனுமதியின்றி தொண்டு நிறுவன நிர்வாகியே வங்கி மேலாளரின் உதவியுடன் கையாடல் செய்து விட்டாராம்.இதையடுத்து, ​​ அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,​​ சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நடுவீரப்பட்டு எம்.​ ராஜன்,​​ சி.​ குப்புசாமி,​​ வி.​ ஆறுமும் உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸிடம் புகார் அளித்துள்ளனர்.​ மேலும்,​​ இத் தொண்டு நிறுவன நிர்வாகி மேலும்,​​ பல்வேறு சுய உதவிக் குழுக்களிடமும் மோசடி செய்து இருப்பதாக அப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளில் 45 பதக்கங்கள் கடலூர் நடேசரெட்டி சாதனை


கடந்த 20 ஆண்டுகளில் முதியோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று 45 பதக்கங்களை வென்றுள்ள 83 வயது நடேசரெட்டி.
கடலூர்,  பிப். 20:  கடலூரைச் சேர்ந்த "வாலிபால்' பயிற்சியாளர் நடேசரெட்டி (83), கடந்த 20 ஆண்டுகளில், தடகளப் போட்டிகளில் அகில இந்திய அளவில் 45 பதக்கங்களை வென்றுள்ளார்ஜனவரியில் நடந்த சர்வதேச முதியோர் தடகளப் போட்டியில் பங்கேற்று 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.ஜனவரி 22 முதல் 24-ம் தேதி வரை புணேயில் நடந்த சர்வதேச முதியோர் தடகளப் போட்டியில் நடேசரெட்டி பங்கேற்றார். இதில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹாமர்துரோ ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.1990 முதல் அகில இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு முதியோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, குண்டு எறிதல், வட்டு ஏறிதல், ஹாமர்துரோ, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் 23 தங்கப் பதக்கங்களையம், 10 வெள்ளிப் பதக்கங்களையும் 12 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று இருக்கிறார் நடேசரெட்டி.2006-ம் ஆண்டு இலங்கையில் நடந்த சர்வதேச அழைப்பு தடகளப் போட்டிகளில் பங்கேற்று, குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று இருக்கிறார்.நடேசரெட்டி 1953-ம் ஆண்டு திருத்தணியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார்.அதைத் தொடர்ந்து 63-ம் ஆண்டு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார்.1965 முதல் 1988 வரை கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வாலிபால் பயிற்றுநராக பணிபுரிந்து, நூற்றுக்கணக்கான வாலிபால் விளையாட்டு வீரர்களை உருவாக்கி இருக்கிறார்.1988-ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், 1990 முதல் முதியோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அத்துடன் கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், ஜூனியர் வாலிபால் அணிக்கு இன்றளவும் தொடர்ந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.புனித வளனார் பாலர் பள்ளியில் அண்மையில் நடந்த ஆண்டு விழாவில், புனித வளனார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகள், நடேசரெட்டியைப் பாராட்டிர்.

நிகழ்ச்சிகள் முடிந்த 2 நாள்களில் பேனர்களை அகற்றிவிட கடலூர் போலீஸ் உத்தரவு

கடலூர், பிப். 21: கடலூர் போலீஸ் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், அரசியல் கட்சிகள் தங்களது நிகழ்ச்சிகள் முடிவடைந்த 2 நாள்களில், டிஜிட்டல் பேனர்களை அகற்றிவிட வேண்டும் என்று, போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.அனைத்துக் கட்சிகள் கூட்டம் கடலூரில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நகரில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. போலீஸ் அனுமதி பெற்றுத்தான் பேனர்கள் வைக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 தினங்களுக்கு முன்தான் பேனர்களை வைக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்து 2 நாள்களில் பேனர்களை அகற்றிவிட வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் காவல்துறை மூலம் அகற்றப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சியினரும் சம்மதம் தெரிவித்தனர். கூட்டத்தில் தி.மு.க. சார்பில் தனஞ்செயன், அதிமுக நகரச் செயலாளர் குமரன், ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, மதிமுக  நகரச் செயலாளர் சேகர், நகராட்சி  உறுப்பினர் ராஜா, பாமக நகரச் செயலாளர் தாண்டவராயன், தேமுதிக நகரச் செயலாளர் தட்சிணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ. 470 கோடியில் வெள்ளத்தடுப்பு, மராமத்துப் பணிகள்

கடலூர் மாவட்டத்தில் மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தடுக்கவும், ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் மராமத்துப் பணிகளுக்கும் ரூ. 470 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:இந்த நிதியில் இருந்து ரூ. 106 கோடியில் கொள்ளிடம் வடக்குக்கரை சீரமைப்புப் பணிகள், ரூ. 26 கோடியில் வீராணம் ஏரி சீரமைப்புப் பணிகள், ரூ. 7.5 கோடியில் கான்சாகிப் மராமத்துப் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கிறது.÷இது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் 15-2-2010 அன்று விவாதிக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ. 353 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.இந்தப் பணிகளை இப்பகுதி விவசாயிகளைக் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறேன். வீராணம் சீரமைப்புத் திட்டத்தில் ஏரியின் முழு கொள்ளளவுக்கு நீர் பிடிக்கும் போது, ஏரியின் மேற்குக்கரை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விடுவதைத் தடுக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.இது குறித்து அவர் பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். அந்தப் பதிவேடு வாரம்தோறும் எனது பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ரவீந்திரன்: கடலூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை முடிவுக்கு வந்துள்ளது. எனவே வெள்ளத் தடுப்பு மற்றும் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் மராமத்துப் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் உண்மையான ரேஷன் கார்டுகள் 1 லட்சம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கல் அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ரேஷன் கடைகளில் அரிசியின் தரம் மோசமாக உள்ளது. வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராமானுஜம்: வாலாஜா ஏரிக்கு ஒரு கரை மட்டுமே உள்ளது. இதனால் அதிகரித்து விட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரை அமைக்க வேண்டும்.வாலாஜா ஏரியை ஆழப்படுத்த என்.எல்.சி. 3 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த ரூ. 25 கோடி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன்: மழை காலங்களில் சிதம்பரம் நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்குக் காரணம் பாசிமுத்தான் ஓடையில் தாங்கும் அளவைவிட கூடுதலாகத் தண்ணீர் வருவதுதான். எனவே பாசிமுத்தான் ஓடை கரைகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.விவசாயிகள் நலன் கருதி களத்துக்கே வந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட முதல் அமைச்சருக்கு நன்றி.விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை சேமித்து வைக்க வசதி இல்லை. அரசு சேமிப்புக் கிடங்குகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள். இதனால் அறுவடை செய்த உடனே குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடபதி: சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 65 சதவீதம் மானியம் அறிவித்து இருக்கிறது அரசு. அரசு குறிப்பிட்டபடி சொட்டு நீர்ப் பாசன அமைப்புகளை அமைக்க, ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் ஆகிறது. ஆனால் மானியம் 37,500 தான் வழங்குகிறார்கள். 65 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.÷கரும்பு டிராக்டர்கள் சங்கத் தலைவர் வீரபாண்டியன்: விருத்தாசலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால் வாகனப் போக்குவரத்துக்கு மாற்றுப் பாதைக்கு வாய்ப்பு இருந்தும், சரியாக ஏற்படுத்த வில்லை.ஆட்சியர் குறுக்கிட்டு: இது குறித்து நான் கடிதம் கொடுத்தும் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வில்லை. மக்களைக் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும்.சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்: தரமான விதை நெல் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. ஆனால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.கூடுதல் விலை வழங்க வேண்டும். போக்கு வரத்துச் செலவை அரசே ஏற்க வேண்டும். விதைநெல்லை பதப்படுத்த கூடுதல் வசதி வேண்டும்.வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம்: பெண்ணாடம் கரும்பு விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, முத்தரப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.வெள்ளாற்றில் மணல் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை நீக்க வேண்டும். வெள்ளாற்றினால் விளைநிலங்கள் அரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் ஜெயகாந்தன் 25

காலக் குடுவையில் தமிழ்ச் சமூகத்தைக் குலுக்கிப் போட்ட எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தனின் பெர்சனல் பக்கங்கள் இதோ...

ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர், உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்!
சிறுகதைகள் 200-க்கு மேல், குறுநாவல்கள் 40, நாவல்கள் 15, கட்டுரைகள் 500, வாழ்க்கைச் சரிதத்தை ஆன்மிக, அரசியல், கலையுலக அனுபவங்களாகப் பிரித்து மூன்று புத்தகங்கள் என எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன்!
சுருதிசுத்தமாக வீணை வாசிக்கத் தெரியும். இசை படித்தவர். நல்ல சினிமா பாடல்களாக இருந்தால் சுருதி கூட்டி குரல் இசைய, லேசாக விரல்கள் தாளமிட, இது இந்த ராகம் என நண்பர்களிடம் சொல்வார்!
'இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், ஆச்சர்யம் மட்டுமல்ல; வருத்தமும் அடைவேன்' என்று ஜே.கே-விடம் சொன்னாராம் எஸ்.எஸ்.வாசன். நண்பர்களிடம் இதைச் சொல்லி, தனக்கு உத்வேகம் கிடைத்த விதத்தைச் சொல்லிப் பெருமைப்படுவார்!
காமராசரின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும்கொண்டவர். முதல்வராக இருந்தும், தனது தாய்க்கு வசதிகள் செய்து தராத அவரது நேர்மையைச் சொல்லும்போதெல்லாம் தழுதழுப்பார். காமராஜரை காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்ட் எனக் குறிப்பிடுவார்!
ஜெயகாந்தனின் சபையில் பெரும்பாலும் அவரே பேசுவார். மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். கேள்வியும் அவரிடம் இருந்தே வரும். சிறிது நேரம் மௌனம் காப்பார். பிறகு பதிலும் அவரிடம் இருந்தே வரும்!
ஜெயகாந்தனின் சபையில் அடிக்கடி ஆஜரானவர்கள், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, சந்திரபாபு, பீம்சிங், எம்.பி.சீனிவாசன், கண்ணதாசன். இப்போது ஜே.கே-யை அடிக்கடி பார்ப்பவர்களில் இளையராஜா, பார்த்திபன், லெனின் ஆகியோர் அடக்கம்!
ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாடமி, ஞானபீடம், நேரு விருது (சோவியத் நாடு கொடுத்தது) பத்மபூஷண் இவை அனைத்தும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே.கே-தான்!
1977 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் சிங்கம் சின்னத்தில் ஜெயகாந்தன் போட்டியிட்டார். 481 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 'சிங்கத்துக்குப் பிடித்த உணவு நம்ம டெபாசிட் போலும்' என நகைச்சுவையாக அதை எடுத்துக்கொண்டார்!
கவிஞர் பாரதிதாசன் ஜெயகாந்தனின் மேல் பிரியம்கொண்டவர். திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டுடியோவில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இப்போதும் ஜே.கே-யின் வீட்டில் இருக்கிறது!
'என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்' எனச் சொல்வார். எழுதாமல் இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை. கேட்டால், 'நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க' என்பார். இன்னும் கேட்டால், 'உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா. அதுக்காக, இன்னும் பெத்துக் குடுன்னு கேட்டுட்டே இருப்பியா?' என்பார் கோபமாக!
பயணங்கள் என்றாலே நண்பர்களோடுதான். கிண்டலும் நகைச்சுவையும் கரை புரண்டோடும். யாரையும் புண்படுத்துவதாக அந்த நகைச்சுவை அமையாது!
கமல் தன் ஒவ்வொரு திரைப்படத்தையும் ஜெயகாந்தனுக்கு தனியாகப் போட்டுக் காண்பித்து, அபிப்பிராயத்தைக் கேட்டு அறிந்துகொள்வார்!
பாரதியார் பாடல்கள், திருக்குறள், சித்தர் பாடல்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெறுமனே சொல்ல மாட்டார் ஜே.கே. ஒரு சந்தமும், சுதியும் சேர்ந்து வர அர்த்தங்கள் இயல்பாக வெளிப்படும்!
மிகுந்த ஞாபகசக்திகொண்டவர். தான் படித்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும், தனது பொருட் களைக் கவனமாக வைத்திருப்பதிலாகட்டும் மறதியைப் பார்க்கவே முடியாது!
ஜெயகாந்தனின் சிறு வயதுத் தோழர் கி.வீரமணி. இப்பவும் இருவரும் பழைய வாஞ்சையோடு பேசிக்கொள்கிற காட்சியைப் பார்க்கலாம்!
ஜெயகாந்தனின் படைப்புக்களான 'புதுச் செருப்பு கடிக்கும்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'காவல் தெய்வம்', 'உன்னைப்போல் ஒருவன்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்' ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன!
காலையில் சிறிது நேரம் யோகாசனம். அதற்குப் பிறகுதான் உணவு. எந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் இப்பவும் பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார் ஜே.கே!
ஜே.கே-யின் பிறந்த நாள் ஏப்ரல் 24 - 1934. ஒவ்வொரு வருடமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முதல் நாளில் இருந்தே நண்பர்கள் குவிய ஆரம்பித்துவிடுவார்கள். சபை களை கட்டி பாட்டும், சிரிப்பும், பேச்சுமாகக் கலகலக்கும். அன்றைக்கு எல்லோருக்கும் உணவு அவர் வீட்டில்தான்!
ஆசையுடன் நாய் வளர்த்தார். 'திப்பு' எனச் செல்லமாக அழைப் பார். 'திப்பு' இறந்த துயரத்துக்குப் பிறகு பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டார்!
'எங்களுக்குள் இருப்பது முரண்பாடு இல்லை; வேறுபாடு. முரண்பாடு என்பது தண்ணீரும் எண்ணெய்யும் மாதிரி... சேராது. வேறுபாடு தண்ணீரும் பாலும் போல... சேர்ந்துவிடும்' என்று கலைஞர் தன்னைப்பற்றி சொன்னதை, ரசித்து ரசித்துக் குறிப்பிடுவார் ஜெயகாந்தன்!
'நாளை சந்திப்போம்...' என்பது மாதிரியான வாக்குறுதிகள் கொடுத்தால், கூடவே 'இன்ஷா அல்லா' என்று சொல்லிதான் முடிப்பார்!
ஒரு கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது "இன்றைக்கு நீங்கள் விஸ்வரூபம் காட்டவில்லையே, ஏன்?" என்றார் ஒரு வாசகர். உடனே "விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல; காண்பது" என்றார் ஜெயகாந்தன்.
'குப் குப்' என்று புகைவிட்டு... 'கூ கூ' என்று கூச்சலிட்டு... 'வருகுது வருகுது ரயில் வண்டி... வேகமாக வருகுது... புகை வண்டி.'-அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாட்டுக் களில் இதுவும் ஒன்று!
எந்தப் பிரச்னை என்றாலும் அது சரியாகும் என்று நம்புபவர். எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு என்பதில் உறுதிகொண்டவர். ஒருபோதும் 'இது முடியாது' என்றோ, 'அவ்வளவுதான்' என்றோ அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வராது!

காணாமல் போகும் கடலூர் கலெக்டர்!

கடலூர் மாவட்ட கலெக்டர் சீதா ராமன் கீழ்நிலையில் இருந்து பதவி உயர்வு மூலம் கலெக்டரானவர். ஆகவே, எல்லாத் துறைகளிலும் தேர்ந்தஅனுபவம் உள்ளவர். அந்த அனுபவத்தைப் பயன் படுத்தி, ஊழியர்களைத் தட்டிக் கொடுத்து அவர் வேலை வாங்கினால், மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக ஆக்கிவிட முடியும். ஆனால், அவர் அப்படி எந்தக் காரியமும் செய்யவில்லை என்பதுதான் வேதனையானவிஷயம்!

கலெக்டர் வளாகத்தில் உள்ள அலுவலகஊழியர்கள், "அலுவலர்களிடம் பணி சம்பந்தமாக கலெக்டர் பேசும் போது, எல்லாம் தனக்குத் தெரியும் என்றே பேசுகிறார். லாஜிக்குடன் ஊழியர்கள் மறுத்துப் பேசினால்... ஏக வசனத்தில் இறங்கி விடுகிறார். சமீபத்தில், மாவட்ட வழங்கல் அலுவலக ஊழியர்களிடம் இவர் ஏகவசனத்தில் பேச... அவர்கள் கொதித்துப்போய் ஒட்டுமொத்தமாக விடுப்புக் கேட்க, அதன் பின்னரே பதறிப்போய் சமாதானம் பேசினார் கலெக்டர். அது மட்டுமில்லை... ராத்திரி பத்து மணிக்கு மேல் காலை எட்டு மணி வரை யாரையும் பார்க்கவும் மாட்டார்; செல்போனையும் அட்டெண்ட் பண்ண மாட்டார். அதே போல, கேம்ப் ஆபீசுக்கு போய் விட்டாலும் யாரையும் சந்திக்க மாட்டார்!" என்று சலித்துக் கொண்டார்கள்.
பொதுமக்களும், "இதுக்கு முன்னாடி இருந்த கலெக்டரெல்லாம் சாதாரண மக்களிடம் நெருக்கமாப் பழகி மனசுல இடம் பிடிச்சாங்க. ஆனா, சீதாராமன் எங்கேயாவது ஏதாவது அசம்பாவிதம் நடந்தா மட்டும்... வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போறாரு. மத்தபடி வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது, பள்ளிகள், மருத்துவமனைகளை ஆய்வு செய்றது போன்ற எந்த வேலையையும் செய்றதில்லை. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துக்குற விழாக்கள்ல மட்டும்தான் அவர் தலையைப் பார்க்க முடியுது. அங்கெல்லாம், 'மக்கள் நன்றியோட இருக்கணும்'னு கிட்டத்தட்ட ஆளுங்கட்சியோட மாவட்டச் செயலாளர் ரேஞ்சுக்கு மேடையில பேசுறாரு!" என்று சீறினார்கள்.

கலெக்டர் புராணம் போதும்... மற்றத் துறைகள் பக்கமும் பார்வையைத் திருப்புவோமா?

முதலில் மக்கள் தொடர்பு அலுவலகம்... "அரசின் செய்திகளை எந்தப் பத்திரிகைக்கும் தகவல்களாக அனுப்புவதில்லை; எந்த விழாக்களுக்கும் யாரையும் அழைப்பதில்லை. உதவி அதிகாரி ஒருவர்தான் உச்சகட்ட வசூல் மன்னன். எந்த விழாவுக்குப் போனா லும் 40 பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி, மற்ற மாவட்டங்களைப் போலவே கவர் வாங்கி விடுகிறார். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினரான அந்த உதவி அதிகாரி அடிக்கும் கொட்டத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!" என்று புலம்புகிறார்கள் கடலூர் பத்திரிகையாளர்கள்.

மீன்வளத் துறை பக்கம் வலம் வந்தபோது, "இப்படி ஒரு துறை இருப்பதே பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியாது. விவரம் தெரிந்த ஒரு சில மீனவர்கள்தான் அலுவலக ஊழியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு கடன்வசதி, மானிய உதவி என்பதையெல்லாம் பெற்று வருகிறார்கள். மீனவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கக்கூட அலுவலகம் முன்வரவில்லை. கடந்த மாதம் சிங்களக் கடற்படை தொடர்ந்து கடலூர் மீனவர்களைத் தாக்கிய பிறகுதான், அடையாள அட்டை கொடுக்க முடிவெடுத்து வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள்!" என்றார்கள்.

தமிழ்வளர்ச்சித் துறையைப் பற்றி விசாரித்தால் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக, "கலெக்டர் ஆபீஸில் இருப்பவர்களுக்கே இப்படி ஓர் அலுவலகம் இருப்பது தெரியாது. மாதத்தில் ஒரு சில நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எல்லாம் இந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் கடிதங்களை வாங்கக்கூட இங்கு ஆட்கள் கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை செய்ய வந்த குழு, பூட்டியிருந்த அலுவலகத்தைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றது. பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களை வரச்சொல்லி இருக்கிறார்கள். விளக்கம் கேட்டால், 'எங்களுக்கு நீங்கள் வரும் தகவல் தெரியாது' என்று பதில் சொன்னார்களாம் ஊழியர்கள்!" என்கிறார்கள்.

வேளாண்மைத் துறையைப் பற்றி அறிந்தவர்களிடம் பேசியபோது, "சிறு குறு விவசாயிகளைக் கண்டு கொள்ளாதவர்கள்தான் இந்தத் துறையில் இருப்பவர்கள். வரும் மானியம், இலவசம் எல்லாவற்றையும் தங்களுக்கு வேண்டியவர்களாகப் பார்த்துத் தள்ளிவிடும் தாராள குணம் படைத்தவர்கள். சமீபத்தில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பவர்டில்லர் வாங்க அரசாங்கம் 45 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுத்தது. அது முழுவதும் பெரு விவசாயிகள் சிலருக்கும், ஊழியர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட்டது. தங்களுக்கு எதிர்ப்பு இருக்கக் கூடாது என்பதற்காக விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முழங்கும் சில விவசாயி களுக்கு மட்டும் அவர்கள் எது கேட்டாலும் செய்து கொடுத்து விடுகிறார்கள் இங்குள்ளவர்கள்!" என்று புட்டுப் புட்டு வைத்தார்கள்.

சுகாதாரத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. "ஆனால், மருத்துவம் அப்படி இல்லை. மழைக்கால முன் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. பல இடங்களில் பரவி வரும் காய்ச்சலைக்கூடக் கண்டுகொள்வதில்லை. மாவட்ட தலைமை மருத்துவ மனையில் அவசர சிகிச்சைக்கு வரும் கேஸ்களில் பாதிக்கு மேல் புதுச்சேரிக்கோ, சென்னைக்கோ திருப்பி அனுப்பப்படுகின்றன!" என்கிறார்கள் சுகாதாரத் துறையில் இருக்கும் சிலர்.

கனிமவளத் துறை பற்றி விசாரித்தால், "மணல் விஷயத்தில் எந்த விதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. சரியாக கவனித்து விட்டால் போதும்... சம்பந்தமே இல்லாமல் எந்த ஆய்வும் செய்யாமல் எங்கு வேண்டு மானாலும் மணல் அள்ள அனுமதி கொடுப்பார்கள் அதிகாரிகள். குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளிக்கொள்ள ஒரு ரேட் வைத்திருக்கிறார்கள். அதே போல, இங்குள்ள லாரிகள் திருவண்ணாமலை போன்ற வெளியூர்களுக்கு லோடு போய்விட்டுத் திரும்பும்போது பில் இல்லாமல் ஜல்லி ஏற்றி வருவதைக் கண்டுகொள்ளாமல் இருக்க மாதாந்திர மாமூல் கட்டவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்படி மாமூல் கட்டாத லாரிகள் பிடிபட்டால், 25 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும். அதிலும் விதிவிலக்கு வைத்திருக்கிறார்கள். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டால், அபராதம் கிடையாது!" என்று கொந்தளிப்போடு சொன்னார்கள்.

"மாவட்டத் தலைநகரான கடலூரில் பாதாள சாக்கடைப் பணிகளால் நகரமே சிதைந்து போய்க் கிடக்கிறது. லட்சக்கணக்கில் மக்கள் சென்று திரும்பும் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட அரசு சார்பில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை, பேருந்து நிலையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணவில்லை!" என்று ஏகப்பட்ட புகார்களை வாசிக்கிறார்கள் கடலுர் நகர மக்கள்.

இவை எதையும் காதில் வாங்காமல் கனஜோராக நடக்குது கடலூர் மாவட்ட நிர்வாகம்!
- கரு.முத்து

மீனவன் அநாதை..? கடல் புறம்போக்கு?


டல்புற மீனவன் மறுபடியும் கதிகலங்கிக் கிடக்கிறான்... இந்த தடவை அவன் பயம் உயிர் மட்டுமல்ல... ஒட்டுமொத்த வாழ்வாதாரமும்தான்!
'தாய்மடி', 'கடலம்மா' என்றெல்லாம் கொண்டாடும் கடலைத் தங்களிடமிருந்து மொத்தமாகப் பிரித்துவிடுவார் களோ என்று அஞ்சிக் கிடக்கிறான் அவன். மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் 'மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மைச் சட்டம்' என்ற புதிய சட்ட முன்வரைவு, நாட்டின் மொத்த மீனவர்களையும் அப்படிப் பதறவைத்து விட்டது.
''இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மீனவர்களுக்கு இரண்டே வழிதான்... கடலோரத்தை விட்டு வேறு தொழில் பார்க்கப் போக வேண்டும். இல்லையென்றால், பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களிடம் கூலியாட் களாக சேரவேண்டும்...'' என்று அதிர்ச்சி தெறிக்கும் பார்வையோடு நம்மிடம் ஆரம்பித்தார், பேராசிரியர் வறீதய்யா கான்ஸ்டன்டின். நாகர்கோவில்காரரான இவர் 'நெய்தல் சுவடுகள்,' 'ஆழிப் பேரிடருக்குப் பின்,' 'அணியம்' போன்ற கடலோர வாழ்வடங்கிய நூல்களை எழுதியவர். இந்த சட்ட முன்வரைவு பற்றி விளக்கமாகப் பேசினார்.
''சர்வதேச சட்டப்படி, ஒவ்வொரு நாட்டின் கடற்கரை யில் இருந்து 12 நாட்டிக்கல்
மைல் தூரம்தான் அந்த நாட்டின் கடல் எல்லை... அதாவது, மீன்பிடி எல்லை. இதற்குள்தான் மீன்பிடிக்கலாம். அதுபோக, 200 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு உள்ள கனிமவளம், மீன்வளம் எண்ணெய் வளம் அனைத்தும் அந்தந்த நாட்டுக்குத்தான். இந்தியாவில், மாநில அரசுகள்தான் மீன்பிடி நிர்வாகத்தைக் கவனிக்கின்றன. கடலுக்குள் மீன்பிடிக்கும் படகுகள் லைசென்ஸ் வாங்குவதையும், புதுப்பிப்பதையும் மாநில அரசிடமே செய்துகொள்ளலாம். இந்த புதிய சட்டம், மாநில அரசின் முழு அதிகாரத்தையும் மத்திய அரசிடம் மாற்றிவிடுகிறது. இது அமலானால், கட்டுமரம் வைத்திருப்பவன்கூட லைசென்ஸ் வாங்க டெல்லிக்குத்தான் போகவேண்டும். 'எந்த இடத்தில், எத்தனை நாட்கள் மீன் பிடிக்கப் போகிறேன்' என்று முன்கூட்டியே குறிப்பிடவேண்டுமாம்! சர்வே நம்பர், சதுர அடி கணக்கெல்லாம் போட்ட பிறகு மீன் பிடிக்க, கடல் என்ன புறம்போக்கு நிலமா? அதோடு, 'என்ன வகையான மீனை, என்ன முறையில் பிடிக்கப் போகிறோம்?' என்று குறிப்பிட்டால்தான் லைசென்ஸாம்! பல வகையான வலைகளும் தேவைதான். ஒவ்வொரு வகை வலைக்கும் சில மீன்கள் சிக்கும். எந்த மீன், என்ன வலை என்பதையெல்லாம் முன்கூட்டியே சொல்வது எப்படி சாத்தியம்? இன்னொரு நிபந்தனை, 'என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கிறீர்கள்?' என்பது! இந்த நிபந்தனை, வயிற்றுப்பாட்டுக்கு மீன் பிடிப் பவன், தொழில்ரீதியாக பிடிப்பவன் என்று இரண்டு வகையாக மீனவர்களைப் பிரிக்கிறது. இந்த சட்டப்படி, எந்த வகை படகும் 12 நாட்டிக்கல் மைல் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது. அதை மீறி மீன்பிடித்தால், 9 லட்ச ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை! எந்த வகைப் படகானாலும் ஒரு நேரத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு அதிகமான மீன் பிடிக்கக்கூடாது. மீறினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், கோஸ்ட் கார்டுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சகல அதிகாரங்களும் கொண்ட அவர்கள், மீனவர்களை இந்திய பிரஜைகளாகவே மதிப்பதில்லை! அவர்கள் படகை மறித்து, பிடிக்கப்பட்ட மீனின் வகை, மதிப்பு, என்ன வகை வலை என அனைத்தையும் பரிசோதிக்கலாம். பறிமுதல் செய்யவும் அதிகாரம் உண்டு. இதுபற்றி குறிப்பிடும்போது, 'உங்களை கைது செய்து கோஸ்ட் கார்டு ஆபீஸர் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவே கருதப்படும். தவறு இழைக்கலாம் என்ற அனுமானத்தின் பேரில் முன்கூட்டியே கைது செய்யும் அதிகாரமும் அவர் களுக்கு உண்டு. ஒருவேளை, கைதுக்கான காரணங்கள் தவறானவை என பின்னர் தெரியவந்தால், கோஸ்ட் கார்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது!' என்று அரசின் சட்ட முன்வரைவில் தெளிவாக உள்ளது. உலகின் வேறெந்த நாட்டிலும்கூட இத்தனை மோசமான சட்டம் வரவில்லை. விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளவே தகுதியற்ற இந்த சட்டத்தை, மீனவர்களின் கருத்தைக்கூட கேட்காமல் நிறைவேற்றத் துடிப்பதில் துளியும் நியாயமில்லை!'' என்று பொங்கிய வறீதய்யா, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு கோடி இந்திய மீனவர்களில், 10 லட்சம் பேர் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பவர்கள். இப்படி இந்த மரபுவழி மீனவர்களை கடல் புறத்தில் இருந்து அப்புறப் படுத்தி, ஒட்டுமொத்தமாக பன்னாட்டு நிறுவனங்களிடம் கடலை பட்டா போட்டு ஒப்படைப்பதுதான் இந்திய அரசின் திட்டம். 'நீங்கள் என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கிறீர்கள்?' என்ற கேள்வியிலேயே அது தெரிகிறது.
ஏற்கெனவே 'கடற்கரையோர மேலாண்மைத் திட்டம்' என்று மீனவர்களை வெளியேற்றும் திட்டம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு செயல்படுத்த முனைந்தது. ஆனால் அது, கருத்துக் கேட்புக்கு விடப்பட்டபோது, நாடு முழுவதும் மக்களிடம் எதிர்ப்பு... அதில் தோற்ற அரசு, இப்போது புதிய வடிவத்துடன் மீனவர்களை வெளியேற்ற வந்திருக்கிறது.இது மீனவர்களின் பிரச்னை மட்டுமில்லை... இந்திய மக்களில் சரிபாதி, மீன் சாப்பிடுபவர்கள். 'ஒமேகா கொழுப்பு அமிலம்' என்ற கடல் மீனில் இருக்கும் புரதச் சத்து, மனித மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. இன்னும் சில ரத்த நோய்களுக்கும் மருந்து! ஐரோப்பியர்கள் ஆண்டுக்கு 15 கிலோ மீன் சாப்பிடுகின்றனர். இந்தியர்கள் 7 முதல் 8 கிலோ மீன்களே சாப்பிடுகின்றனர். அதுவும் புரதச் சத்துள்ள மீன்கள் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால், இந்திய கடல் எல்லையில் இறால், சிங் இறால், மஞ்சள் துடுப்பு சூறை, பாறை, கணவாய் போன்ற புரதச் சத்துள்ள ஏராள மீன்கள் உள்ளன. இவை பிடிக்கப் பட்டதும், கரைக்கே வராமல் நடுக்கடலில் வைத்தே வெளிநாட்டுக் கப்பல்களுக்கு கைமாற்றப்படுகின்றன! அந்நியச் செலாவணி என்று இதை நியாயப்படுத்தும் அரசு, இத்தகைய வெளிநாட்டு முதலீடுள்ள கப்பல்களுக்கு வெறும் 16 ரூபாய் என்ற உற்பத்தி விலைக்கே டீசல் வழங்குகிறது. கஷ்டப்பட்டு மீன்பிடித்து, அதை உள்ளூர் சந்தைக்குக் கொண்டுவரும் இந்திய மீனவனுக்கோ, ஒரு லிட்டருக்கு வெறும் ஒரு ரூபாய்தான் மானியம்! ஏற்றுமதியாகும் மீன்களுக்கு அந்த நிறுவனங்கள்தான் விலை நிர்ணயிக்கின்றன. சராசரியாக ஒரு கிலோ 186 ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், அதே மீன்களுக்கு நம் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோவுக்கு 250 ரூபாய் வரை கிடைக்கிறது. இப்படி, சகல வகையிலும் மீனவர்களை வஞ்சிக்கிறது அரசு. 1981-ல் வெளிநாட்டுக் கப்பல்களை ஒழுங்குபடுத்த ஒரு சட்டம் உருவானது. கண்காணிப்பது, சோதனையிடுவது போன்ற அந்தச் சட்ட அம்சங்களை அப்படியே இந்த புதிய சட்டத்தில் புகுத்தியுள்ளனர். அதாவது, இந்திய மீனவர்களை வெளிநாட்டு ஆட்கள் போல நடத்துகின்றனர்! கடல் தொழிலின் மேன்மையும், மீனவர்களின் வாழ்க்கையும் புரியாதவர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த சட்டத்தால் பயனடையப்போவது, பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள்தான்... யாருமே ஆதரவுக்கு வராத அநாதை மீனவர்கள் அல்ல!'' என்று கொதிப்புடன் முடித்தார் பேராசிரியர். - பாரதி தம்பி 


கடலோர கிராமங்களில் நாளை 2ம் கட்டமாக கைரேகை பதிவு

கடற்கரை பாதுகாப்பையொட்டி கடலோர கிராமங்களில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு சேகரிக்கும் பணி 2ம் கட்டமாக நாளை துவங்கிறது.கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு கடலூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிப்பது தொடர்பாக முதல் கட்டமாக ஏற்கனவே ஒவ்வொரு தனிநபர் பற்றி விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2ம் கட்டமாக 15 வயதும் அதற்கு மேற்பட்டவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவை சேகரிக்கும் பணி நடந்தது. இந்த பணி 2ம் கட்டமாக நாளை (22ம் தேதி) முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.

இப்பணியின்போது கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகைப்படம் எடுக்கும் கீழ்கண்ட நாளில் அந்தந்த கிராமங்களில் உள்ள மையங்களில் புகைப்படம் எடுக்கும் பணி மேற்கொள்வர். காயல்பட்டில் 22, 23 தேதிகளிலும், ஆண்டார்முள்ளிப்பள்ளம்,குடிகாடு கிராமங்களில் 22, 23 தேதிகளிலும், பச்சாங்குப்பம் கிராமத்தில் 22 முதல் 24 வரையிலும், சிங்கிரிகுடியில் 23ம் தேதியும், குண்டுஉப்பலவாடியில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், தியாகவல்லி, திருச்சோபுரத்தில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையும் நடைபெறும்.ஏற்கனவே புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள் அந்தந்த மையங்களில் வந்து புகைப்படம் மற்றும் கைரேகையினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு மாவட்டத்தில் 157 மையங்களில் நடக்கிறது

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ். எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வு 157 மையங்களில் நடக்கிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு 23ம் தேதி துவங்குகிறது. பிளஸ்2வில் 29 ஆயிரத்து 528 பேர் 61 மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 36 ஆயிரத்து 592 பேர் 96 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள்கள் சென்னை அரசு தேர்வுகள் இக்குனரகத்திலிருந்து நேற்று மாலை கடலூர் வந்தது.
இக்கேள்வித்தாள்கள் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 2 மையங்கள், நெய்வேலி என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், திட் டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது. தேர்வின் போது முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க 1 குழுவிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 10 "டீம்'கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சி.இ.ஓ., 2 டி.இ.ஓ.,க்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ஆகியோர் தலைமையிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொள்வர்.சோதனையின் போது பிடிபட்டால் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாமல் தண்டிக்கப்படுவார்கள். பிரச்னைக்குரிய இடங் களாக கருதப்படும் பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.தேர்வையொட்டி கலெக்டர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட் டம் நடந்தது. இதில் முறைகேடுகள் நடைபெறாதவாறு தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ., செல்வராஜ், சி.இ.ஓ., அமுதவல்லி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள்மொழிதேவி, டி.இ.ஓ.,க்கள் குருநாதன், கணேசமூர்த்தி, தொடக்க கல்வி அலுவலர் விஜயா, டி.எஸ்.பி., ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

50 கிலோ மயில் மீன் கடலூரில் பிடிபட்டது

கடலூர் மீன்பிடி துறை முகத்தில் நேற்று 50 கிலோ மயில் மீன் பிடிபட்டது. ஆழ்கடல் பகுதிகளில் 10 முதல் 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சுறா, சுங்கம், யா மீன், மயில் உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைக்கும்.

இவ்வகை மீன்கள் தூண்டில்கள் மூலமே பிடிக்கப்படும். ரத்த வாடை அதிகமுள்ள டால்பின் மீன் துண்டுகள், சூறை மீன்களை தூண்டிலில் கோர்த்து கடலில் வீசினால் இவ்வகை மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும்.

இதில் மயில் மீன்கள் 50 முதல் 500 கிலோ வரை இருக்கும். இம்மீன்களுக்கு மயில் தோகை போன்று இறக்கை இருக்கும் என்பதால், இதை மயில் மீன் என அழைக்கப்படுகிறது. தற்போது, ஆழ்கடல் பகுதியில் மயில் மீன் சீசன் துவங்கி யுள்ளது. கடலூர் பகுதி மீன வர்களிடம் நேற்று 50 கிலோ எடையுள்ள மயில் மீன் சிக்கியது. இதை வியாபாரிகள் வெட்டி பதப்படுத்தி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய் கின்றனர். எஞ்சிய மீன்கள் கரு வாட்டிற்கு பதப்படுத்தப் படுகிறது

வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்றாவிட்டால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்

கடலூர் மாவட்டத்தில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீரை உரிமையாளர்கள் அகற்றாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் கொசு தொல்லை ஒழிப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமை தாங்கி னார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா முன்னிலை வகித்தார். கொசுக்களை நிரந்தரமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து கொசு ஒழிப்பு குழு கூட்ட நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். நகர விரிவாக்கங்களால் பெருகி வரும் குடியிருப்புகள் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்டு வருவதால் நக ராட்சி நிர்வாகங்கள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவதில் பிரச்சனை ஏற்படுகிறது என எடுத் துரைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட் சியர் சீத்தாராமன் பேசுகை யில், “நகர விரிவாக்கம் காரணமாக பஞ்சாயத்துக்களில் அதிக எண்ணிக்கை யில் குடியிருப்புகள் பெருகி வருகிறது. இங்கு முறைப்படி கழிவு நீர் வெளியேற்ற நடவடிக்கை என்பது குறை பாடாக உள்ளது.
எனவே பஞ்சாயத்து எல்லையில் வீடுகள் பெருகி வந்தாலும் அதனை பஞ்சாயத்து தலைவர்கள் கொசு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ரசாயனம் பொருட்கள் காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் கொசுக் கள் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது என ஆய்வில் தெரிய வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வீட்டு வாயில்களில் சாக்கடை உள்ளிட்ட நிரந்தர நீர் தேக்கங்களை தவிர்ப்பதற்கு பொது சுகாதார சட்டம் 1939ம் ஆண்டு 84(1), 86 மற்றும் 87(1) பிரிவுகளின் படி சட்ட ரீதியாக நகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்பது சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது“ என்றார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தகவல் உரிமை சட்டத்தில் தகவல் தராத வேலை வாய்ப்பு அலுவலருக்கு அபராதம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் தராத மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.சிதம்பரம் முருகன் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்தவர்களின் விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரிடம் கேட்டிருந்தார். ஆனால், தகவல் ஆணைய விதிகளின் படி குறித்த காலத்தில் பதில் தரவில்லை.

இதுகுறித்து பாலசுப்ரமணின், மாநில தகவல் ஆணையத்திடம் 2008 ஜனவரி 1ம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் தகவல் ஆணையம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கு அவகாசம் கொடுத்தும் பதில் தரவில்லை.தகவல் உரிமைச் சட்ட விதிமுறையின்படி தகவல் தராததால் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தகவல் உரிமை ஆணைய உதவி பதிவாளர் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா விடுத்துள்ள அறிக்கை:
விழுப்புரம்&மயிலாடுதுறை இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கி 4 வருடங்களாகிறது. இன்னும் முடிந்தபாடில்லை. ரயில்வே அதிகாரிகள் மாதந்தோறும் ஒவ் வொரு தகவலை கூறி வருகின்றனர். இதனால் ஏழை, எளிய மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல அவதிப்படுகின்றனர். தனியார் ஆம்னி பேரூந்துகளின் அதிக கட்டணத்தால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் திருச்சி முதல் சென்னை வரை 336 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அகல பாதையாக மாற்றும் பணி 13 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கிலோ மீட்டர் அகல பாதையை 4 வருடம் வரை கால தாமதமானதற்கு காரணம் என்ன.
பிப்ரவரி 10ம் தேதி ரயில்வே பொதுமேலாளர் தீபக்கிர்ஷன், பணிகளை ஆய்வு செய்து விட்டு, மார்ச் இறுதியில் பயணிகள் ரயில் ஓடும் என கூறியுள்ளார். சிதம்பரம் ரயில் நிலைய கட் டிடப் பணி 2004ம் ஆண்டு துவங்கி இன்று வரை நிறைவு பெறாமல் உள்ளது.
எனவே, ரயில்வே அதிகாரிகள் அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடித்து மார்ச் இறுதிக்குள் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மா.கம்யூ., கோரிக்கை

சாலையோரங்களில் உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும்

கடலூரின் முக்கிய சாலைகளின் ஓரங்களில் அதிக அளவில் மண் படிந்துள்ளதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூரில் லாரன்ஸ் சாலை, அண்ணா பாலம், பாரதி சாலை, நேதாஜி சாலை, கடற்கரைச் சாலை, நெல்லிக்குப்பம் சாலை, புதுப்பாளையம் மெயின் ரோடு, முதுநகர் சாலை ஆகிய சாலைகள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளாகும். நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை களின் வழியாக சென்று வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். போக்குவரத்து அதி கம் காரணமாக சாலை களின் ஓரங்களில் மண் அதிகளவில் படிந்து வருகி றது. சாலைகளின் ஓரம் படியும் மண் அப்புறப் படுத்தப்படாமல் உள்ள தால், மண் மலை போல் குவிந்துள்ளது.
கடலூர் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் டேங்கர் லாரி கள், லாரிகள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஏராளமானவை சாலை களில் செல்லும் போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் வாகனங்களை செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்போது சாலை ஓரத் தில் குவிந்திருக்கிற மண் வாகனங் களை சறுக்கி விழச் செய் கிறது.
இத னால் கட லூரின் முக் கிய சாலை களில் அடிக் கடி விபத்து கள் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மண்ணில் வாகனங்கள் சிக்கும்போது, பின்னால் வரும் வாகனம் மோதி உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடு கிறது.
குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் பெற்றோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
சாலையோரத்தில் மண் அதிக அளவில் படிந்திருப்பதால் சாலையோரத்திலும் செல்லமுடியாமல் பின்னால் மோதுவதை போல் வரும் வாகனங்களிடமிருந்தும் தப்பிக்க வழி தெரியாமல் ஒரு வித பயத் தோடு செல்லவேண்டிய நிலை உள்ளது.

சொத்து வரி பாக்கி:​ ​ ​ 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்

கடலூர் நகராட்சிக்குச் சொத்துவரி ​(வீட்டு வரி மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான வரி)​ தண்ணீர் வரி செலுத்தாத,​​ 15 ஆயிரம் பேருக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடலூர் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கி ரூ.​ 10 கோடியைத் தாண்டி உள்ளது.​ இதனால் நகராட்சிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு,​​ ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஜனவரி 31-ம் தேதி வழங்க வேண்டிய ஊதியம் வெள்ளிக்கிழமை வரை வழங்கப்பட வில்லை.எனவே வரி பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.​ கடந்த ஒரு மாதமாக தண்டோரா மூலம் வீதி வீதியாக சென்று வரியைச் செலுத்துமாறு கோரப்பட்டு வருகிறது.​ வாகனங்களிலும் ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு,​​ கடலூர் நகராட்சிக்கு வர வேண்டிய வரிபாக்கி ரூ.​ 10 கோடிக்கு மேல் உள்ளது.​ வரிப் பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.​ வெள்ளிக்கிழமை வரை ரூ.​ 2 கோடி வசூல் ஆகி இருக்கிறது.மீதம் உள்ள பாக்கியையும் படிப்படியாக வசூலிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்.​ வரிபாக்கி உள்ளவர்களுக்கு 4 முறை கால அவகாசம் அளித்து நோட்டீஸ் அளிக்கப்படுகிறது.முதல் நோட்டீஸ் 15 நாள்களுக்குள் செலுத்துமாறும்,​​ அடுத்து 7 நாள்களுக்குள் செலுத்துமாறும்,​​ பின்னர் 24 மணி நேரத்தில் செலுத்துமாறும் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.3 முறை கால அவகாசம் அளித்தும் வரியைச் செலுத்தாவிட்டால் 4-வது முறையாக,​​ ஜப்தி நோட்டீஸ் அளிக்கிறோம்.​ இதுவரை கடலூர் நகராட்சியில் 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வடிவத்தை மாற்ற வேண்டும்

கடலூரில் கட்டத் தொடங்கி இருக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் தோற்றம் அழகாக இல்லாததால்,​​ அதன் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று,​​ காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணி கோரிக்கை விடுத்துள்ளது.கடலூர் மாவட்டக் காங்கிரஸ் வழக்கறிஞரணி அமைப்புக் கூட்டம் மாவட்டக் காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.​ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பல ஆண்டுகளுக்கு பின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படுவது வரவேற்கத்தகுந்தது.​ ஆனால் அதன் வரைபடத்தைப் பார்க்கும் போது அழகாகத் தோன்றவில்லை.பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அழகாக இருக்க வேண்டும்.​ எனவே அதை அழகாகத் தோன்றும் வகையில் மாற்றி வடிவமைக்க வேண்டும்.அனைத்து மாநில மக்களுக்கும் விரைவில் நீதி கிடைக்கும் வகையில்,​​ அனைவரும் எளிதில் அணுகும் விதத்தில்,​​ உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை சென்னை,​​ மும்பை,​​ கொல்கத்தா நகரங்களில் உருவாக்க வேண்டும்.வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை,​​ ரூ.​ 2 லட்சத்தில் இருந்து ரூ.​ 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.​ கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.கடலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு,​​ கடலூர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.​ மாநில காங்கிரஸ் வழக்கறிஞரணித் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.வழக்கறிஞர்கள் அரிஹரதாஸ்,​​ சாந்தமூர்த்தி,​​ ஜெயக்குமார்,​​ தமிழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.​ கடலூர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.

உலகத் தமிழ் இணைய மாநாடு: கம்ப்யூட்டர் வரைகலை போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலை போட்டி கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று நடந்தது.கோவை செம்மொழி மாநாட்டில் நடைபெறும்  உலகத் தமிழ் இணைய மாநாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக் கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலைப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தேர்வுப் போட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நேற்று நடந்தது. இப்போட்டியில் உயர்நிலைப் பள்ளி மற் றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக தமிழில் வெவ் வேறு தலைப்புகள் வழங்க ப்பட்டது.கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த போட்டித் தேர்வுக்கு மாவட்டம் முழுவதுமிருந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 205 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி நிறுவனர் சேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., கதிர்வேல், டி. இ.ஓ., விஜயா, ராஜேந்திரன், எல்காட் நிறுவன மேலாளர் காமேஸ்வரன் கலந்து கொண்டனர்

நகராட்சியில் வரி நிலுவைத் தொகை வீடு, கடைகள் முன் 'தண்டோரா'

கடலூர் நகரில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள வரி நிலுவைத் தொகைக்காக அதிகாரிகள் முன்னிலையில் தண்டோரா போடப்பட்டது.கடலூர் நகராட்சியில் 10 கோடி ரூபாயிற்கு மேல் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இதனை வசூலித்திட நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வசூலை மேலும் தீவிரப்படுத்த கமிஷனர் குமார் மற்றும் வருவாய் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் நேற்று மஞ்சக்குப்பம் பகுதியில் வரி பாக்கி வைத்துள்ள வீடுகள் மற் றும் வணிக நிறுவனங்கள் முன் தண் டோரா போடப்பட்டது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.உடன் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், பில் கலெக்டர்கள் முத்துக்குமார் லட்சுமணன், சின்னப்பராஜ், மாகன் ஆகியோர் இருந்தனர். இதுகுறித்து வருவாய் அதிகாரிகள் தெரிவிக்கையில் "வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு முன்னறிவிப்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்டோரா மூலமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காலதாமதம் ஆகும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தனர்.

தனியார் அனல் மின் நிலையம்: மீனவர் பேரவை எதிர்ப்பு

கடலூர் அருகே அமைய இருக்கும் தனியார் அனல் மின் நிலையத்துக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், செயலாளர்  கே.முருகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அமைந்து இருக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதால், மீனவர்களின் தொழில் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதுக்குப்பம் அருகே தனியார் அனல் மின் நிலையம் அமைக்க  ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் அருகே துறைமுகம் ஒன்றும் கட்டப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் அங்கு அமைக்கப் பட்டால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் வெகுவாகப் பாதிக்கப்படும்.  எனவே இந்த தனியார் அனல் மின் நிலையத்தை மீனவர் பேரவை கடுமையாக  எதிர்க்கிறது. தனியார் அனல் மின் நிலையம் அமைய இருப்பதைக் கண்டித்து, அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து, இம்மாதம் 25-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

நன்கொடை இல்லை என கடைகளில் அறிவிப்பு பலகை

நன்கொடை வழங்க மாட்டோம் என்று கடைகளில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று வியாபாரிகளை, வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். கடலூரில் மாமூல் கேட்டு ரவுடிகள் இனிப்புக் கடைமீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, விசாரிப்பதற்காக வெள்ளையன் வெள்ளிக்கிழமை கடலூர் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் வெள்ளையன் கூறியது:  ரவுடிகள் மாமூல் வசூல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதில் வணிகர்கள் ஒற்றுமையுடன் இருந்து இப்பிரச்னையை அணுக வேண்டும். கடலூரில் இத்தகைய பிரச்னைகளுக்கு போலீஸôர் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்கு உரியது.வன்முறைகள் தொடரா வண்ணம் இருக்க வியாபாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நன்கொடை இல்லை, மாமூல் வழங்க மாட்டோம் என்று கடைகளில் அறிவிப்புப் பலகை எழுதி வைக்க வேண்டும் என்று வணிகர்களை வற்புறுத்தி இருக்கிறேன்.அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால்தான் பணம் கேட்டு மிரட்டல், வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. எனவே வணிகர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். போலீஸ் கண்காணிப்பும் அதிகரிக்க வேண்டும் என்றார் வெள்ளையன்.மாமூல் கேட்டு சேதப்படுத்தப்பட்ட இனிப்புக் கடை மற்றும்  மஞ்சக்குப்பத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை, வெள்ளையன் பார்வையிட்டார்.  வணிகர் சங்க மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் மதிசேகர் மற்றும் நிர்வாகிகள் எம்.கே.ராஜன், நூர்முகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நுகர்வோர் உரிமைப் பயிற்சி தொடக்கம்

விவசாயிகளுக்கான நுகர்வோர் உரிமைகள் குறித்த பயிற்சி முகாம், தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் வியாழக்கிழமை தொடங்கியது. கடலூரில் இந்தப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தொடங்கி வைத்தார்.வீரிய விதைகள், சான்றிதழ் பெற்ற விதைகள் என்று அறிவித்து தரமற்ற விதைகளை விற்பனை செய்பவர்கள், தரமான பூச்சிக் கொல்லி மருந்துகள் என்ற பெயரில் தரமற்ற பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனை செய்வோர், தரமற்ற வேளாண் பொறியியல் கருவிகளை விற்பனை செய்வோர் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் தங்களுக்கு ஏற்பாடும் பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறுவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன.÷இது தொடர்பாக விவசாயிகளுக்கான நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமுக்கு, தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்துள்ளது.÷அனைத்து மாவட்டங்களிலும் தலா 3 பயிற்சி முகாம்களை, பிப்ரவரி 11, 18, 25 தேதிகளில் நடத்த நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டு இருக்கிறது.ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் வேளாண் அலுவலர்கள் 10 பேர், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், விவசாயத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் 30 பேர் மற்றும் நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள் 10 பேர் ஆகிய, 50 பேருக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழக அரசின் இந்த முயற்சியால், அனைத்து மாவட்டங்களிலும் தலா 3 நாள்கள் அளிக்கப்படும் பயிற்சி மூலம், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள் 4,500 பேர் வேளாண் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி பயிற்சி பெறுவார்கள்.கடலூரில் வியாழக்கிழமை நடந்த முதல் பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தொடங்கி வைத்தார்.இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ், ஆலோசகர் பால்கி, மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ், வேளாண் உதவி இயக்குநர்கள் பாபு, இளவரசன், வேளாண் அலுவலர் பிரேமலதா (உணவு பாதுகாப்பு) அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் பட்டாம்பாக்கம் வெங்கடபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கடலூர் மாவட்டத்தில் 18-ம் தேதி விருத்தாசலத்திலும், 25-ம் தேதி சிதம்பரத்திலும் இந்த பயிற்சி முகாம் நடக்கிறது.

நகராட்சி நிர்வாகம் அலட்சியம் : கடலூரில் தொற்று நோய் அபாயம்

கடலூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நகரின் மையப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் நகராட்சி நிர்வாகம் கொட்டி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் துப் புரவு பணியை தனியார் நிறுவனம் மேற்கொண் டது. இதில் சேகரிக்கப்படும் குப்பைகள் பச்சையாங்குப்பம் எருக்கிடங்கில் கொட்டப்படும். இதன் எடையை கணக் கிட்டு பணம் வழங்கப் பட்டு வந்தது. தற்போது துப்புரவு பணிக்கு தனியார் எவரும் வராததால் நகராட்சி நிர் வாகமே மேற்கொண் டுள்ளது.திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை லாரியில் ஏற்றி பச்சையாங்குப் பம் எருக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல், நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணா பாலத் தின் அருகில் கெடிலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதில் மார்க் கெட் மற்றும் ஓட்டல் கழிவுகளையும் இங்கேயே கொட்டுவதால் காய்கறி, இலைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளின் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் அண்ணாபாலம் அருகே ஜவான்ஸ் பவன் அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து பரவும் கொசு உள்ளிட்ட கிருமிகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து நீடித்து வருகிறது.

நகரின் சுகாதாரத்தை காத்திட வேண்டிய நகராட்சி நிர்வாகமே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அதுவும் ஆற்றில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்தி வருவது வேதனையளிக்கிறது. இனியேனும் கெடிலம் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்து வசதி: கிராம மக்கள் கோரிக்கை

பேருந்து வசதி கோரி கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

கடலூர் அருகே உள்ள தியாகவல்லி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து,​​ மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:​ தியாகவல்லி ஊராட்சியில் 12 கிராமங்கள் உள்ளன.​

லெனின் நகர்,​​ பெரியார் நகர்,​​ ஸ்டாலின் நகர்,​​ அம்பேத்கர் நகர்,​​ நந்தன் நகர்,​​ வள்ளலார் நகர் கிராமங்களில் தலித்துகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். பெரும்பாலானோர் கட்டடத் தொழில்,​​ மற்றும் கூலித் தொழில் செய்கிறார்கள்.​ ஏராளமான மாணவர்கள் அருகில் உள்ள ஊர்களிலும் கடலூரிலும் படிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெளியிடங்களுக்குச் செல்ல பஸ் வசதி போதுமானதாக இல்லை.​ நொச்சிக்காடு கிராமத்துக்கு வரும் ஒரே ஒரு பேருந்தை விட்டால் வேறு வழியில்லை.​ பேருந்தை தவறவிட்ட பலர் உப்பனாற்றைப் படகில் கடந்துச் சென்று பஸ்களைப் பிடிக்க வேண்டியது இருக்கிறது.​ மாணவர்கள் உரிய நேரத்துக்குப் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை.​ கூலி வேலைகளுக்குச் செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.​ கடந்த ஜனவரி 27-ம் தேதி படகு கவிழ்ந்து மாணவர்கள் உப்பனாற்றில் விழவேண்டிய நிலை ஏற்பட்டது.​ எனவே கூடுதலாகப் பேருந்துகள் விட வேண்டும்.​ உப்பனாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.

பேருந்துளே வராத பேருந்து நிலையம்


நெல்லிக்குப்பம் நகராட்சி பேருந்துநிலையத்தை அண்மைக்காலமாக பேருந்துகள் புறக்கணித்து வருகின்றன.  
 நெல்லிக்குப்பம் பேருந்துநிலையம் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு, 2008-ம் ஆண்டு துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்தது முதல் ஓராண்டாக பேருந்துநிலையத்துக்குள் எந்த பேருந்துகளும் செல்வது இல்லை.   
 இதுகுறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் முயற்சியால், 2009 அக்டோபர் 1-ம் தேதி முதல் பேருந்துநிலையத்துக்குள் பேருந்துகள் சென்று வந்தன. ஆனால் 3 மாதங்கள்தான் இந்த நிலை நீடித்தது. மீண்டும் எந்த பேருந்துகளும் பேருந்துநிலையத்துக்குள் செல்வது இல்லை. கடலூர்-நெல்லிக்குப்பம் வழித்தடத்தில் 6 நகரப் பேருந்துகள் உள்ளன. இவைகள் நெல்லிக்குப்பத்தின் மேற்கு எல்லையான வைடிப்பாக்கத்தில் இருந்து முன்பு புறப்பட்டு வந்தன.
 பேருந்துநிலையம் திறக்கப்பட்ட பின், வைடிப்பாக்கம் வரை நகரப் பேருந்துகள் செல்வதில்லை. போலீஸ் நிலையம் வரை மட்டும் சென்று திரும்பி விடுகின்றன. பேருந்துநிலையத்துக்கு உள்ளேயும் செல்வதில்லை. நெல்லிக்குப்பம் பிரதானச் சாலையில் நின்றே பயணிகளை ஏற்றி இறக்குகின்றன.
 நெல்லிக்குப்பம் வழியாகச் செல்லும் நீண்ட தூரப் பேருந்துகளும், பேருந்துநிலையத்துக்குள் சென்று வருவது சிரமமாக உள்ளது, காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, பேருந்துநிலையத்துக்குள் செல்ல மறுத்து வருகின்றன.
 போலீஸ் காவலர்கள் அங்கு இருந்தால் மட்டுமே பேருந்துகள் பேருந்துநிலையத்துக்குள் செல்கின்றன. பேருந்துநிலையத்துக்குள் பேருந்துகள் வந்தால், குறைந்தபட்சம் இங்கிருந்து புறப்படும் பேருந்துகளில் ஏறுவதற்காவது பயணிகள் உள்ளே வருவார்கள் என்கிறார்கள் பொதுமக்கள்.
 பேருந்துநிலையத்துக்குள் 9 கடைகள், ஒரு ஹோட்டல், சைக்கிள் ஸ்டாண்டு, புறக் காவல் நிலையம், பஸ்களுக்கான நேரக் காப்பகம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. பேருந்துநிலையத்துக்கு பேருந்துகள் வராததால், கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வியாபாரம் செய்யமுடியாத நிலை உள்ளது.   
இந்நிலையில் பேருந்துநிலையத்துக்குள் பேருந்துகள் வராதது குறித்து, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட்பாபு வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து உள்ளார்.
அனைத்து பேருந்துகளும் பேருந்துநிலையத்துக்குள் வந்துபோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டார்.