கோரிக்கை பதிவு

மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாவட்டத்தில் 2ம் நாளாக தொடர் மழை : கடலூரில் அதிகபட்சம் 75 மி.மீட்டர்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழைக் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூரில் அதிகபட்சமாக 75 மி.மீட்டர் மழை பெய் துள்ளது.
தென்மேற்கு பருவக் காற்றால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேகங் கள் வேகமாக தமிழக பகுதியில் செல்வதால் ஆங் காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
நேற்று காலை 11 மணி முதல் அதிக அளவில் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து சீராக மழை பெய்து வருவதால் தண் ணீர் வழிந்தோடி வீணாகாமல், நிலத்தில் நன்றாக ஊறி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் விரைவில் உயரக்கூடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:
கடலூரில் 75மி.மீ., வானமாதேவி 69.20, புவனகிரி 65, கொத்தவாச்சேரி 54, அண்ணாமலை நகர் 40.60, பண்ருட்டி 40, பரங் கிப்பேட்டை 39, மேமாத் தூர் 38, லால்பேட்டை 31, சேத்தியாதோப்பு 31, லக் கூர் 30, காட்டுமன்னார் கோவில் 28, விருத்தாசலம் 24.40, குப்பநத்தம் 22.20, பெலாந்துரை 20, ஸ்ரீமுஷ் ணம் 20, கீழ்ச்செருவாய் 16, தொழுதூர் 15மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கட​லூ​ரில் தொடர்​மழை கார​ண​மாக ​ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் இடிந்து விழுந்​தது

கட​லூ​ரில் தொடர்ந்து பெய்து வரும் கன​மழை கார​ண​மாக,​​ பழைமை வாய்ந்த கட​லூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் வியா​ழக்​கி​ழமை இரவு இடிந்து விழுந்​தது.​ ​

க​ட​லூர் நெல்​லிக்​குப்​பம் சாலை​யில் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் உள்​ளது.​ இது 200 ஆண்​டு​க​ளுக்கு முன் ஆங்​கி​லே​யர் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​டது.​ ​ கட​லூர் நக​ரில் பழை​மை​யும் பெரு​மை​யும் வாய்ந்த கட்​ட​டங்​க​ளில் இது​வும் ஒன்று.​

கட​லூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கம் இக்​கட்​ட​டத்​தில் கடந்த 40 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இயங்கி வந்​தது.​ தற்​போது இந்த அலு​வ​ல​கத்​தில் 60 ஊழி​யர்​கள் பணி​பு​ரி​கி​றார்​கள்.​ ​

வி​யா​ழக்​கி​ழமை மாலை 6-30 மணி வரை ஊழி​யர்​கள் இங்கு பணி​பு​ரிந்​த​னர்.​ அதற்​கு​மேல் வீடு​க​ளுக்​குச் சென்​று​விட்​ட​னர்.​ இரவு 7 மணிக்கு அலு​வ​ல​கத்​தின் இர​வுக் காவ​லர் அமா​வாசை ​(55) மட்​டும் முதல் மாடி​யில் பணி​யில் இருந்​தார்.​ இரவு 7-30 மணி அள​வில் கட்​ட​டத்​தின் முன் பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்​தது.​ பயங்​கர சத்​தம் கேட்டு அக்​கம்​பக்​கத்​தில் உள்​ள​வர்​கள் ஓடி​வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்​த​னர்.​ ​

இ​ரவு நேரத்​தில் இச்​சம்​ப​வம் நடந்​த​தால் உயிர்ச்​சே​தம் இன்​றித் தப்​பி​யது.​ கட்​ட​டத்​தின் ஏனைய பகு​தி​க​ளும் இடிந்து விழும் நிலை​யில்​தான் உள்​ளன.​ எனவே ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கம் தாற்​கா​லி​க​மாக அரு​கில் உள்ள பூமாலை வணிக வளா​கத்​துக்கு வெள்​ளிக்​கி​ழமை மாற்​றப்​பட்​டது.​

அ​லு​வ​ல​கக் கட்​ட​டம் இடிந்து சேதம் அடைந்​தது குறித்து ஊராட்சி ஒன்​றி​யக் குழுத் தலை​வர் சாந்தி பஞ்​ச​மூர்த்தி மற்​றும் வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்​கள் மாவட்ட ஆட்​சி​ய​ரைச் சந்​தித்து விவ​ரம் தெரி​வித்​த​னர்.​

ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கத்​துக்கு புதிய கட்​ட​டம் கட்​டித் தரு​மாறு கோரிக்கை விடுத்​த​னர்.

ஒருநாள் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காத கடலூர் நகரச் சாலைகள்

கடலூரில் ஒருநாள் (புதன்கிழமை இரவு) பெய்த மழையைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் படுமோசமாகக் காட்சி அளிக்கின்றன. கடலூரில் பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் தணியும் வகையில், புதன்கிழமை இரவு 57 மி.மீ. மழை பெய்தது. ஆனால், இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் குண்டும், குழியுமாக உள்ள ஏனைய சாலைகள் அனைத்தும் திடீர் மழையால் உழுதுபோட்ட வயல்போல சகதிக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பலர் சாலைகளில் விழுந்து, சகதியில் புரளும் நிலை ஏற்பட்டது. இரு சக்கரவாகன ஓட்டிகளும் சகதியில் வழுக்கி விழுந்து சாக்கடையை உடலில் பூசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மழைக்கு முன்னரே முடிக்குமாறு, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், குறிப்பிடத்தகுந்த அளவில் பணிகள் எதுவும் முடிக்கப்படாதாதால் இத்தகைய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஒரு நாள் மழையிலேயே இந்நிலை என்றால், பலத்த மழை பெய்யும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போதே கடலூர் நகர மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, மழைக் காலம் தொடங்கிவிட்டதால், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தற்போது தொடர வாய்ப்பு இல்லை என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காகத் தோண்டப்பட்ட மண் முழுவதும் சாலைகளில் கொட்டப்பட்டு, சாலைகளின் மட்டம் உயர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன் கூறுகையில், சாலைகள் மோசமானதால், சாலைகளின் தடுப்புக் கட்டை மேலும் மதிற்சுவர்களுக்கு மேலும் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றாததால் 50 செ.மீ. வரை சாலைகளின் மட்டம் உயர்ந்து விட்டது. புதிய சாலைகள் அமைக்கும் போது மேலும் 30 செ.மீ. உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சாலைகளில் குவிக்கப்பட்ட மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.