கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூடுதல் கட்டணம் வசூல்: கிருஷ்ணசுவாமி பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி இறுதியாண்டு பயலும் மாணவ மாணவியர் சுமார் 200 பேர், கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:இந்த கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரியில் இ-லேர்னிங் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 8 ஆயிரம் வசூலித்து இருக்கிறார்கள். இக்கட்டணம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்குக் கிடையாது என்று திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நிர்வாகத்தை அணுகியபோது மாணவர்களைத் துறைத் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். கல்லூரிக்குள் நுழைய விடாமல் கல்லூரி அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். போராட்டத்தில் பங்கேற்க வெளியேற முயன்ற சில மாணவிகளை, கல்லூரி விடுதியில் தனி அறையில் அடைத்தனர். அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு மாணவியை அடிக்க முயன்றனர். மாணவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றோரிடம் தவறாகப் பேசியுள்ளனர்.புகார்களுக்கு நிர்வாகத்திடம் பேசி, எங்களின் படிப்புக்கு எவ்வித இடையூறும் பின்விளைவும் இல்லாத நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் மனுவில் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இயக்குநர் சி.ஏ.தாஸ், கடலூர் வாசிப்போர் இயக்க அமைப்பாளர் கவிஞர் பால்கி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சிவபாலன் உள்ளிட்டோர் பேசினர்.
கட்டுகள்
கடலூர்,
கல்வி,
கிருஷ்ணசுவாமி கல்லூரி
சொத்து ஜாமீனின்றி கல்விக் கடன் தர வங்கி மறுப்பு
பல்வேறு கனவுகளோடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஏழை விவசாயி மகளுக்கு, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், கல்லூரியில் சேர்ந்தும் படிப்பை தொடர முடியாமல், கூலி வேலை செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமம் அருகே உள்ள நடுக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - மல்லிகா ஏழை விவசாய தம்பதியினரின் மகள் பிரவினா. இவர், 2007ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 867 மதிப்பெண் பெற்றார். 72 சதவீத மதிப்பெண் பெற்ற இவர், வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது சிலர் உயர் கல்வி படிக்க வங்கிகள் கடன் தருவதாக கூறினர்.அதை நம்பிய பன்னீர்செல்வம், தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பி, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தார். கவுன்சிலிங்கில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சின்ன கோளம்பாக்கத்தில் உள்ள கற்பக வினாயகா பல் மருத்துவக் கல்லூரியில் "பி.டி.எஸ்.,' சீட் கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், பிரவினாவை கல்லூரியில் சேர்த்தார்.
அப்போது, கல்லூரி நிர்வாகம் கல்லூரி விடுதியில் ஐந்தாண்டுகள் (2007-12) தங்கி படிக்க, மொத்தம் நான்கு லட்சத்து 73 ஆயிரத்து 500 கட்ட வேண்டும். அதில், முதலாண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500ம், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தலா ஒரு லட்சத்து 10 ஆயிரமும், இறுதியாண்டு விடுதி கட்டணம் மட்டும் 25 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறியது. பன்னீர்செல்வம் தனது மகளின் உயர் கல்விக்காக கடன் கோரி, பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு விண்ணப்பித்தார். அவர்கள், காடாம்புலியூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு பரிந்துரை செய்தனர். மனுவை பரிசீலித்த லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள், 10 லட்சம் ரூபாயிற்கு சொத்து ஜாமீன் அல்லது அரசு ஊழியர்கள் இருவர் ஜாமீன் அளித்தால் கடன் தருவதாக கூறினர். பன்னீர்செல்வத்தால் சொத்து ஜாமீன் கொடுக்க முடியாததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கட்டணம் செலுத்தாததால், மாணவி பிரவினாவை இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
இதுகுறித்து, பன்னீர்செல்வம் பிரதமர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். அனைவருமே மனு மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்திருப்பதாக பதில் அனுப்பினர். இதனால், அடுத்த ஆண்டாவது வங்கியில் "லோன்' கிடைத்துவிடும் எனக் கருதிய பன்னீர்செல்வம் 2008ம் ஆண்டு, மீண்டும் தனது மகளை அதே கல்லூரியில் சேர்த்துவிட்டு மீண்டும் கடன் கோரி வங்கிக்கு விண்ணப்பித்தார். அப்போதும் ஜாமீன் தராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கல்லூரிக்கு பணம் கட்டாததால், மாணவி பிரவினாவை மீண்டும் அதேபோன்று இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
பல்வேறு கனவுகளுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி பிரவினாவிற்கு, வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்க மறுத்து விட்டதால் தற்போது, பெற்றோருடன் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.கல்விக் கடனுக்கு எந்த ஜாமீனும் தேவையில்லை. கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் கல்லூரி கட்டண பட்டியல் இருந்தால் போதும் என, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மேடைதோறும் பேசி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் வேறு விதமாக உள்ளதால், ஏழை மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

கடலூர் மாவட்டம்,
கல்வி
கடலூர் மாவட்டத்தில் 82 சுயநிதிப் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண விவரம் வெளியீடு
நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, சுயநிதிப் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டண அறிக்கைகளை, கடலூர் மாவட்டத்தில் இதுவரை 82 பள்ளிகள் பெற்றுச் சென்றுள்ளன.தனியார் சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களிடம் அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்றி இருக்கிறது. இந்தச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு பள்ளிகளும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கைகள் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 112 சுயநிதிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 90 பள்ளிகளுக்கு கட்டணப் பரிந்துரைப் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு
வநதுள்ளது. இவற்றில் 82 பள்ளி நிர்வாகங்கள் வியாழக்கிழமை வரை,
கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ÷கட் டணப் பட்டியலை இதுவரை வாங்காமல் இருக்கும் பள்ளிகள், நகர்ப் புறங்களில் உள்ள மிகப் பிரபலமான பள்ளிகள்தான் என்று
கூறப்படுகிறது.÷பிரபலமான பள்ளிகள் பல, தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தியும் தகவல்களை அளித்து உள்ளன. இந்தக் கட்டணத்தில் பள்ளி சிறப்பாக நடப்பதால், அதேக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்கலாம் என்று நீதிபதி கோவிந்தராஜ் குழு பரிந்துரைத்து உள்ளது. இவ்வாறு 25 சதவீத பள்ளி நிர்வாகங்கள், தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்துக் காண்பித்ததால், அதேக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற நர்சரி பள்ளிகள் பலவற்றுக்கு அவர்கள் தற்போது வசூலிக்கும் கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிபதி குழு பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 20 சதவீத பள்ளிகளுக்கு அவர்கள் தற்போது
வசூலிக்கும் கட்டணத்தையே நீதிபதி குழு பரிந்துரைத்து உள்ளது.மொத்தத்தில் 50 சதத்துக்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகங்கள், நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைக் கட்டண விகிதத்தை, முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு இருப்பதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளி
கல்விக் கட்டண அரசாணை நகல் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த அரசாணை நகல் சி.இ.ஓ., அலுவலகத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை கட்டுப்படுத்தப் படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி அரசு சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயிப்புக்குழு அமைத் தது. இந்த குழு தனியார் பள்ளிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கட்டணத்தை நிர்ணயித்துள் ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 398 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது 328 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள் ளது. அதில் 101 பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்த பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி தனியார் பள்ளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள பள்ளிகளுக்கு விரைவில் வழங் கப்படும்.

தமிழக அரசு
கல்வியில் புறக்கணிக்கப்படும் நெல்லிக்குப்பம்: படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள்
நெல்லிக்குப்பத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் ஏழை, எளிய மாணவர்கள் வெளியூர் சென்று மேல் படிப்பை தொடர முடியாத அவலம் உள்ளது.நெல்லிக்குப்பம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல்லிக்குப்பத்தில் அரசு பெண்கள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. பார்டர் அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பெரும்பாலான கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய விவசாய கூலி குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இலவச பஸ் பாஸ், புத்தகம் என அனைத்தும் அரசு கொடுத்தாலும் படித்தவரை போதும் வெளியூர் சென்று படித்தால் கூடா நட்பு ஏற்பட்டு கெட்டு போய் விடுவாய் என கூறி தங்களுடன் விவசாய கூலி அல்லது கொத்தனார் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ஏழை மாணவர்கள், எஸ்.எஸ். எல்.சி.,யில் குறைந்த மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர் கள் மேல் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகம் உள்ளனர். இதனால் அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மத்திய அரசு கல்வியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளது. மாநில அரசும் இலவச கல்வி, பஸ் பாஸ், சைக்கிள் என கல்வியை வளர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டுள் ளது. ஆண்டுதோறும் மாவட்டத் தில் பல இடங்களில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் மாணவர்கள் கல்வி தடைபடுவதை தடுக்க முடியும். கல்வியைப் பொறுத்தவரை நெல்லிக்குப்பம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. இத்தொகுதியில் அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகள் என எதுவும் இல்லை. அருகில் உள்ள பண்ருட்டி தொகுதியில் பொறியியல் கல் லூரியும், கடலூரில் ஐ.டி.ஐ., கலைக்கல்லூரியும் உள்ளது. நெல்லிக்குப்பம் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு பட்ஜெட்டில் புதியதாக 6 பாலி டெக்னிக் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றை நெல்லிக்குப்பம் தொகுதியில் அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பில் நெல்லிக்குப்பம் தொகுதி தற் போது எடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லிக்குப்பம்
எப்போது தெரியும்?
பள்ளிக் கல்விக் கட்டண வசூல் ஒழுங்குமுறைச் சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பத்து நாள்களுக்கு மேலாகிறது. ஆனால், பள்ளிகளுக்கு எத்தகைய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி, தமிழக அரசு இதுவரை வெளிப்படையாக எதையும் பேசவில்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு என்பது தெரியாமல் அவதிப்படுவது வழக்கம்போல பெற்றோர்கள் மட்டுமே!பள்ளிக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன என்று மக்கள் தாங்கமாட்டாமல் புலம்பியதால்தான் அரசு இந்தப் பிரச்னையில் ஆர்வம் காட்டியது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் ஒழுங்குமுறை) சட்டம் 2009 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தனியார் பள்ளிகள் சங்கம் தொடுத்த வழக்கில், இந்தச் சட்டம் செல்லும் என்று தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, நீதிபதி கே.கே. சசிதரன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தமிழக அரசுக்கு இதைவிட சாதகமான தீர்ப்பு வேறு ஏதும் கிடையாது. ஆனாலும், இதுவரை அரசு எந்த அறிவிப்பையும் செய்யவில்லை.அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்பதற்காக, தனியார் பள்ளிகள் சும்மா இருந்துவிடவில்லை. அவர்கள் தங்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர் சேர்க்கை சின்ன நோட்டுப் புத்தகத்திலும், வெறும் துண்டுச் சீட்டிலுமாக நடந்து கொண்டிருக்கிறது. சில பள்ளிகள் கட்டணங்களையும் வசூலித்துவிட்டன. சில பள்ளிகள் மாணவர் சேர்க்கை மட்டும் நடத்துகின்றன. கட்டணங்களைப் பிறகு சொல்கிறோம் என்று கூறுகின்றன. இத்தனை நடைமுறை ஊழல்களுக்கும் காரணம்- இன்னமும் அரசு தான் நிர்ணயித்துள்ள கட்டண விகிதத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதுதான்.இந்தச் சட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் தங்கள் விண்ணப்பங்களை விற்பனை செய்யவில்லையே தவிர, மாணவர் சேர்க்கையை நடத்திக் கொண்டே இருக்கின்றன. பெற்றோர்களும், முந்திக்கொண்டு குழந்தைகளைச் சேர்க்காமல் அரசு அறிவிப்புக்காகக் காத்திருந்தால், நம் குழந்தைக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக இந்தப் பள்ளிகள் சொல்லும் அனைத்துக்கும் கட்டுப்பட்டு, எந்த ஆதாரமும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் பணத்தைக் கொடுத்து அனுமதியை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.சென்ற ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. 2008-09-ம் ஆண்டுகளில் வசூலித்த கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் வரவு செலவுக் கணக்குகள் ஆகியவற்றை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சங்கம் வழக்குத் தொடுத்ததுடன், வழக்கு முடியும்வரை நமது வரவு செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவையும் எடுத்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கில் அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வருவதற்கு ஓராண்டு காலம் ஆன நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் என்ன செய்து கொண்டிருந்தது? அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் தாங்கள் செலுத்திய கட்டண விவரங்களின் நகலை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தாலே போதுமே, கொட்டித் தீர்த்திருப்பார்களே! கல் வித் துறை ஏற்கெனவே இத்தகவல்கள் அனைத்தையும் பெற்று, ஒவ்வொரு பள்ளியையும் அதன் வசதிகளுக்கு ஏற்ப தரம் பிரித்து முடித்திருந்திருந்தால், இப்போது வெளிப்படையாக கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக அறிவிக்க வேண்டியதுதானே. தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக எத்தனை தனியார் பள்ளிகள் உள்ளன, இவை எந்த அடிப்படையில் ஏ, பி, சி, என தரம் பிரிக்கப்பட்டன, இவற்றுக்கான கல்விக் கட்டணம் எவ்வளவு? சிறப்புக் கட்டணம் எவ்வளவு? என்பதை ஒட்டுமொத்தமாக இணையதளத்தில் வெளியிட்டால், பெற்றோர்கள் அனைவருமே பார்த்து அறிந்துகொள்ள முடியுமே! அரசு ஏன் இதில் இன்னமும் மெüனம் காக்க வேண்டும்.மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை மற்றும் புத்தகம் ரூ. 445, யு.கே.ஜி. ரூ. 500, முதல் வகுப்பு ரூ. 655 என ஐந்தாம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயித்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறினாலும் இதை ஏன் மக்கள் அறிந்துகொள்ளும்படி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.1973-ல் இயற்றப்பட்ட தனியார் பள்ளி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 32-ன் படி, எந்த ஒரு தனியார் பள்ளியும் தகுதிவாய்ந்த அதிகாரி குறிப்பிட்டுள்ள கட்டணம் தவிர, வேறு எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால், இத்தனை ஆண்டுகளாக கல்வித் துறை அதிகாரிகள் ஏன் மெüனமாக இந்த கல்விக் கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்?கல்லூரிகள் விவகாரத்திலும் இதே மெüனம்தான் நீடிக்கிறது. அதிகக் கட்டணம், நன்கொடை போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக, கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து ஓராண்டு ஆகப் போகிறது. ஆனால் அந்தக் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது யாருக்குமே தெரியாது.சென்ற ஆண்டு பல பொறியியல் கல்லூரிகளில் அரசு அறிவித்த குழு நேரில் சென்று பல்வேறு புகார்களை விசாரித்தது. சில கல்லூரிகள் அலுவலகங்களைப் பூட்டிக்கொண்டு அலட்சியப்படுத்தின. ஆனால் எந்தப் பொறியியல் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் கல்லூரிகள் தற்போது நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கு தகுதியானவையா இல்லையா? இன்னும் அறிவிப்பு இல்லை.ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு? முறைகேடு செய்த பொறியியல் கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை? கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இப்போது சொல்லாவிட்டால், வேறு எப்போது சொல்வார்கள்!
கட்டுகள்
கல்வி,
தினமணி தலையங்கம்,
பள்ளி
பள்ளி செல்லா குழந்தைகள் கடலூரில் 63 பேர் கண்டுபிடிப்பு
கடலூர் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதில் 2 நாட்களில் 63 மாணவ& மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளனர். வரும் 15 தேதி வரை மாவட்டம் முழுவதும் 13 வட்டார வள மையபகுதியிலும் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.
நாட்டில் அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கட்டாய ஆரம்ப கல்வி சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்விதிட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மாநில அரசுகளின் உதவியுடன் மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது. அதற்கான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இதையடுத்து 6 வயது முதல் 14 வயது வரையுள்ள பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி கடலூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 24 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து பள்ளியில் இடை நின்ற மாணவர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிந்து கல்வியின் முக்கியதுவத்தை கூறி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி பணியின் துவக்க விழா நடந்தது. நேற்று முன்தினம் (7ம் தேதி) மற்றும் நேற்று (8ம் தேதி) இரண்டு நாட்களில் 91 கிராம பகுதி குடியிருப்புகள் மற்றும் 8 நகராட்சி வார்டு பகுதியில் கடலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆஷா கிரிஸ்டி எமரால்ட், ஒருங்கிணைப்பாளர் அனந்தநாராயணன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதில் நகராட்சி பகுதியில் 8, கிராமபுறங்களில் 55 மாணவ& மாணவி கள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட் டது.
மாவட்டம் முழுவதும் 13 ஒன்றியங்களில் இந்த கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பள்ளி செல்லா குழந்தைகளின் மொத்த பட்டியலும் கணக்கிடப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. மாணவ& மாணவிகள் பள்ளி செல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக அவர்களது குடும்ப சூழ்நிலையை இருப்பதாக ஆய்வு செய்யும் அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மாணவ& மாணவிகளையும் மீண்டும் அவர்களது குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
15ம் தேதி வரை கணக்கெடுப்பு
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
கல்வி,
பள்ளி
திறமையான மாணவர்களே எங்களது நோக்கம் : பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் பேட்டி
திறமையான மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியின் புதிய நிர்வாக இயக்குனரான கெவின்கேர் நிறுவனர் ரங்கநாதன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியை தற்போது சி.கே.கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளது. இக்கல்லூரியை மாநில அளவில் சிறந்த கல்லூரியாக உருவாக்கி, ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுப்பொலிவுடன் நடத்தப்படும். இங்கு படித்து பட்டம் பெற்று வெளியே செல்லும் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் நிர்வாக திறன்படைத்தவர்களாக இருக்க வேண்டும். இதற்காக திறமைமிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் அளவிற்கு மாணவர்களை உருவாக்குவதே குறிக்கோளாகும்.
அடுத்தாண்டு புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்படும். இந்தியாவின் தலை சிறந்த கல்வியாளர்களை கொண்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வழிவகை செய்யப்படும். இந்நிறுவனத்திலிருந்து வெளியே செல்லும் மாணவர்கள் உடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் அளவிற்கு திறமையான மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார். உடன் நிர்வாக இயக்குனர் அசோக்குமார், சி.கே.கல்வி குழும இயக்குனர் சந்திரசேகரன், முன்னாள் நிர்வாக இயக்குநர் சேகர் உடனிருந்தனர்.

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு மாவட்டத்தில் 157 மையங்களில் நடக்கிறது
கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ். எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வு 157 மையங்களில் நடக்கிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு 23ம் தேதி துவங்குகிறது. பிளஸ்2வில் 29 ஆயிரத்து 528 பேர் 61 மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 36 ஆயிரத்து 592 பேர் 96 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள்கள் சென்னை அரசு தேர்வுகள் இக்குனரகத்திலிருந்து நேற்று மாலை கடலூர் வந்தது.
இக்கேள்வித்தாள்கள் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 2 மையங்கள், நெய்வேலி என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், திட் டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது. தேர்வின் போது முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க 1 குழுவிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 10 "டீம்'கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சி.இ.ஓ., 2 டி.இ.ஓ.,க்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ஆகியோர் தலைமையிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொள்வர்.சோதனையின் போது பிடிபட்டால் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாமல் தண்டிக்கப்படுவார்கள். பிரச்னைக்குரிய இடங் களாக கருதப்படும் பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.தேர்வையொட்டி கலெக்டர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட் டம் நடந்தது. இதில் முறைகேடுகள் நடைபெறாதவாறு தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ., செல்வராஜ், சி.இ.ஓ., அமுதவல்லி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள்மொழிதேவி, டி.இ.ஓ.,க்கள் குருநாதன், கணேசமூர்த்தி, தொடக்க கல்வி அலுவலர் விஜயா, டி.எஸ்.பி., ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழ் இணைய மாநாடு: கம்ப்யூட்டர் வரைகலை போட்டி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலை போட்டி கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று நடந்தது.கோவை செம்மொழி மாநாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக் கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலைப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தேர்வுப் போட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நேற்று நடந்தது. இப்போட்டியில் உயர்நிலைப் பள்ளி மற் றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக தமிழில் வெவ் வேறு தலைப்புகள் வழங்க ப்பட்டது.கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த போட்டித் தேர்வுக்கு மாவட்டம் முழுவதுமிருந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 205 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி நிறுவனர் சேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., கதிர்வேல், டி. இ.ஓ., விஜயா, ராஜேந்திரன், எல்காட் நிறுவன மேலாளர் காமேஸ்வரன் கலந்து கொண்டனர்

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வினா-விடை கையேடு வழங்கவில்லை! தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் என தலைமை ஆசிரியர்கள் கருத்து
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய வினா - விடை கையேடு பொதுத் தேர்வு நெருங்கி விட்ட நிலையில் இன்னும் வழங்காததால், இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் பாதிக்குமோ என்ற அச்சம் தலைமை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை தமிழத்தில் உள்ள 30 வருவாய் கல்வி மாவட் டங்களில் கடலூர் மாவட்டம் 29வது இடத்தில் இருந்து வந்தது. பிற மாவட்டங்களைப் போல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து முன்னேற வேண்டும் என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். 2008-2009ம் கல்வியாண்டில் அப்போது இருந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி "டல் ஸ்டூடண்ட்'களை (மெல்ல கற்கும்) கண்டறிந்து அவர் களுக்காக தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்கான வினா - விடை கையேட்டை தயாரித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பாடப் பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம் உள் ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் கையேடு தயாரித்து கடந்த ஆண்டு நவம் பர் மாதம் 24ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வமும், அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவும் வெளியிட்டனர். அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி மாணவர்களுக்கு வழங்கி அதனை கற்பித் திட ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப் பட்டது.
இது கடலூர் மாவட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், திருவாரூர் உள் ளிட்ட தேர்ச்சியில் பின் தங்கிய மாவட்ட கல்வி அதிகாரிகளும் பின்பற்றினர்.
இந்த புதிய முயற்சியின் பலனாக 29வது இடத்தில் இருந்த கடலூர் மாவட் டம் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சியில்., 26வது இடமும், பிளஸ் 2வில் 24ம் இடத்திற்கும் முன்னேறியது. கடைசி இடத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம் முறையே 23 மற்றும் 25வது இடத்தை பிடித்தது.
ஆனால் இந்த ஆண்டு "டல் ஸ்டூடண்ட்'டுகளுக் கான குறைந்தபட்ச மதிப் பெண் பெறுவதற்கான கையேடு கடலூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் வழங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் இங்கு வழங்காதது ஏன் என தெரியவில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வு நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதி தேர்வு துவங்க உள்ள நிலையில் இதன் பிறகு வழங்கினாலும் அந்த கையேட்டை வைத்து மாணவர்கள் படித்து தேர்ச்சி பெற முடியுமா என்பது சந்தேகமே.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மார்ச் 23ம் தேதி தேர்வு துவங்குகிறது. அவர்களுக்கேனும் "வினா-விடை' கையேட்டை வழங்கிட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபற்றி தலைமையாசிரியர்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கான கையேடு நல்ல பலனை அளித்தது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அரையாண்டு தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு வழங்கியிருக்கலாம். ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தி அதற்கான பலன் உடனடியாக தெரிந்த போதிலும் அந்த திட்டத்தை தொடர்ந்து உரிய நேரத் தில் நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று புரியவில்லை. இதன் பிறகு கையேடு வழங்கினாலும் பலன் குறைவாகத்தான் இருக்கும்' என்கின்றனர்.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு 8ம் தேதி துவக்கம்! 25,592 பேர் தேர்வு எழுதுகின்றனர்
கடலூர் மாவட்டத் தில் 25,592 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதுகின் றனர். ஆரல், ஓரல் தேர்வுகள் வரும் 4 மற்றும் 5 தேதிகளில் நடக்கிறது. செய்முறைத் தேர்வு 8ம் தேதி முதல் துவங்குகிறது.பிளஸ் 2 பொது தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. செய்முறைத் தேர்வுகள் 4ம் தேதி துவங்குகிறது. 4 மற்றும் 5ம் தேதிகளில் ஆங்கிலம், தமிழ் பாடங்களுக்கான ஆரல், ஓரல் (கேட்டல் திறன், பேசுதல் திறன்) எனப்படும் அக மதிப் பீட்டு தேர்வுகள் நடக் கிறது.
இதனைத் தொடர்ந்து 8ம் தேதி முதல் 20ம் தேதிவரை அறிவியல் பாடங் களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், தொழில் கல்வி செய்முறைத் தேர்வுகள் நடக்கிறது.
இதற்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி கடந்த வாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளா கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தொடர்ந்து மாவட்ட கல் வித் துறை சார்பில் வினாத் தாள் அச்சடிப்பது, "பேட்ச்' பிரிப்பது உள்ளிட்ட பணிகள் முடிந்து மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மாவட்டத்தில் 12208 மாணவர்கள், 13,384 மாணவிகள் என மொத்தம் 25,592 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களைவிட 1,176 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.
இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 99 பள்ளிகளைச் சேர்ந்த 8293 மாணவர்களும், 9909 மாணவிகளும், விருத்தாச்சலம் கல்வி மாவட்டத்தில் 54 பள்ளிகளைச் சேர்ந்த 3915 மாணவர்களும், 3475 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
வரும் 8ம் தேதி துவங்கவுள்ள செய்முறைத் தேர் விற்கான ஆயத்தக் கூட்டம் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள் ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரிகள் கடலூர் கணேசமூர்த்தி, விருத்தாச்சலம் குருநாதன், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழிதேவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 153 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதில் பள்ளிகளில் நடத் தப்படும் செய்முறைத் தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக் கினர். அதில் செய்முறை தேர்வுகள் கால அட்டவணையில் உள்ள தேதிகளில் தவறாது நடத்த வேண்டும்.
மருத்துவ மற்றும் விபத்து காரணங்களால் குறித்த "பேட்ச்'ல் தேர்வு எழுத இயலாத மாணவர்கள் உரிய கால அட்டவணைக்குள் வேறொரு நாளில், வேறொரு "பேட்ச்'ல் செய் முறைத் தேர்வை நடத்தி குறிப் பிட்ட இறுதி நாட்களுக் குள் முடிக்க வேண்டும்.
தேர்வு நாளன்று ஆய்வகத்தில் அகத்தேர்வர், புறத் தேர்வர் அனுமதிக்கப் பட்ட ஆய்வக உதவியாளர் கள் மட்டுமே இருத்தல் வேண்டும். செய்முறைத் தேர்வு சார்பாக அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை முன்கூட் டியே வழங்க வேண்டும். செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர் தலைமை ஆசிரியர்களிடம் செய்முறை தேர்விற்கான கால அட்டவணை, மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் மற்றும் "பேட்ச்' பட்டியல் வழங்கப்பட்டன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)