மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. மாவட்ட கிரிக்கெட் சங்கம், கடலூர் காஸ்மா பாலிட்டன் கிரிக்கெட் கிளப் மற்றும் மாவட்ட கிரிக்கெட் அகாடமி ஆகியவை சார்பில் 2009-10ம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. வெற்றி பெற்றும் அணிக்கு முதல் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய், நான்காம் பரிசாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு 250 ரூபாய் பரிசு, தொடர் நாயகனுக்கு 1,000 ரூபாய், தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. போட்டிகள் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக் கெட் அணியினர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு கூத்தரசன், செயலர், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், ஜட்ஜ் பங் களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 9442521780, 9500872434 மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
அண்ணா விளையாட்டு அரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா விளையாட்டு அரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆள்சேர்ப்பு முகாம் இன்று தொடங்கி 19-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, புதுவை மாவட்டங்களைச் தேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.சிப்பாய் நர்ஸிங் உதவியாளர், சிப்பாய் டெக்னீஷியன், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் கிளர்க், சிப்பாய் வர்த்தகப் பணி, ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. உதவி ரெக்ரூட்டிங் அலுவலர் கெடாவூர் தலைமையில் ஆள்கள் தேர்வுப் பணி நடக்கிறது.ஆட்சியர் பார்வையிட்டார்: ராணுவத்துக்கு ஆள்கள் சேர்க்கும் முகாம் ஏற்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை மாலை பார்வையிட்டார். அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடப்பதால், 19-ம் தேதி வரை விளையாட்டு அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டு இருக்கும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.இந்த முகாமுக்கு தேர்வுக்காக தினமும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் முதல் கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்த்தல், அடுத்து உடல்திறன் தேர்வும், மருத்துவத் தகுதித் தேர்வும் நடைபெறும்.இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, ஜூலை மாதத்தில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதி அடிப்படையில் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கட்டுகள்
அண்ணா விளையாட்டு அரங்கம்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்
குடியரசு தினவிழா : ரூ.24 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த குடியரசு தினவிழாவில் ரூ. 24.27 லட்சத்துக்கான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் வழங்கினார். கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவுக்கு வந்த மாவட்ட ஆட்சியரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வரவேற்றார். பின்னர் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் பார்வையிட்டார். வருவாய்த்துறை சார்பில் 51 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, விதவை மகள் திருமண உதவித் திட்டத்தில் 10 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்ட ரூ. 24.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். சிறப்பாகப் பணிபுரிந்த தலைமைக் காவலர்கள் 43 பேருக்கு பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெறத் தேர்வு செய்யப்பட்ட காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், மாவட்ட அளவில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கம்மாபுரம் சிறுமலர், பரங்கிப்பேட்டை அன்னை, கடலூர் மூகாம்பிகை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம், ஜன. 26: விருத்தாசலத்தில அரசு அலுவலகங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சாந்தி தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியர் குமுதம் தலைமை ஏற்று தேசியக் கொடியினை ஏற்றினார். சாந்தி ஜெயின் சிறப்புப் பள்ளியில் நடந்த விழாவில் அரிமா சஙகத் தலைவர் அருணாச்சலம் தேசியக் கொடியை ஏற்றினார். எடச்சித்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் ஊராட்சித் தலைவர் தமிழரசி கொடியேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் உத்திராபதி தலைமை ஏற்றார். இதில் கலைஞர் கண்ணொளித் திட்டத்தின் கீழ், கண் குறைபாடுடைய மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் புரட்சிமணி கொடியேற்றினார். விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில நடைபெற்ற விழாவில் நகர்மன்றத் தலைவர் முருகன் தலைமையேற்று கொடியேற்றினார். கார்மாங்குடி ஊராட்சி அலுவலகம் மற்றும் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி கொடியேற்றினார்.
பண்ருட்டி
பண்ருட்டி,ஜன.26: பண்ருட்டியில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் 61-வது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை மிக சிறப்பாகக் கொண்டாப்பட்டது. ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சக்தி ஐடிஐயில் தாளாளர் ஆர்.சந்திரசேகர் தேசியக் கொடியை ஏற்றினார். மேற்கண்ட விழாவில் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் எம்.நடராஜன், சக்தி ஐடிஐ தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான அ.ப.சிவராமன், எஸ்.வி.ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.வைரக்கண்ணு, முன்னாள் கவுன்சிலர் டி.ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றினார். திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியில் பாலாஜி துணிக்கடை உரிமையாளர் கே.வி.ஆர்.ஜெயபால் தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளி அறக்கட்டளையின் மேலாண் இயக்குநர் கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ்.சுப்ரமணியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் விபத்தில் ஊனமுற்ற 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஆர்.சரவணனின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ரூ.12,500 ரொக்கமாக வழங்கப்பட்டது. ஸ்ரீ முத்தையர் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் நடைபெற்ற விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆன்டனிராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.தண்டபாணி தேசிய கொடியை ஏற்றினார். இதில் பாரத ஸ்டேட் வங்கி பண்ருட்டி கிளை மேலாளர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பண்ருட்டி நகராட்சியில் ஆணையர் கே.உமாமகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றினார்.

கடலூர் நகராட்சி
கடலூரில் மாரத்தான் ஓட்டம்
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து இதனை ஏற்பாடு செய்து இருந்தன. மாரத்தான் ஓட்டப்பந்தயம் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கியது. போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரங்கராஜன், மாவட்ட இளைஞர் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் ஜெயந்தி ரவிச்சந்திரன், அருமைச்செல்வம், டாக்டர் வி.கே.கணபதி, கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் வரவேற்றார். போட்டியில் வீரர் வீராங்கனைகள் 405 பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான 15 கி.மீ. மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்டு, திருவந்திபுரம் வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. பெண்களுக்கான 10 கி.மீ. மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, கே.என்.பேட்டை வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. பள்ளி மாணவ மாணவியருக்கான 5 கி.மீ. ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, சில்வர் பீச் வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. போட்டிகளில் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள்: ஆண்கள்: வெங்கடேசன் (விருத்தாசலம்), செந்தமிழ்செல்வன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), சாமிநாதன் (காராமணிக்குப்பம்). பெண்கள்: அன்புச்செல்வி (கடலூர் பெரியார் கல்லூரி), மாதவி (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்), பாரதி திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி). பள்ளி மாணவர்கள்: தமிழரசு (விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி), கார்த்திக் (என்.எல்.சி. பள்ளி) துரை (நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி). மாணவிகள்: குணா (திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி), ஸ்ரீதேவி (நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி), மோனிஷா (கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி). ஆண்கள், பெண்களுக்கான முதல் 3 பரிசுத் தொகை முறையே ரூ. 5 ஆயிரம், 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம். மாணவ மாணவியருக்கான முதல் 3 பரிசுத் தொகை முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ.1000. 4 முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் உண்டு. குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
கட்டுகள்
அண்ணா விளையாட்டு அரங்கம்,
கடலூர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)