கடலூர் மாவட்டத் தில் கடந்த 7ம் தேதி வரையில் 60,168 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளுக்காக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட் டத்தில் குடிசை வீடுகள் கான்கிரீட்வீடு கட்டும் திட்டத்திற்கு கடந்த 29ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராம ஊராட்சி உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் மே 15ம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 29ம் தேதி முதல் 7ம் தேதி வரை 410 ஊராட்சிகளில் 60,168 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 42 ஊராட்சிகளில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூர் ஊராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் ஊராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் 12 ஊராட்சிகளில் 47,221 வீடுகள் கணக்கெடுப்பு கலெக்டர் சீத்தாராமன் தகவல்
கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 19 ஊராட்களில் 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட் டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு : கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்து வருகிறது. இதற்கான ஆய்வுக் கூட்டம் கடலூர் கலெக் டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் மற்றும் சப் கலெக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், தாசில் தார் கள், பி.டி.ஓ.,க்கள் உள்பட 80 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் சந்தேகங்கள், பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் துல்லியமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர் 'இத் திட்டம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் உள்ள 405 கிராமங்களில் நடக்கிறது. இதுவரை 47,221 வீடுகள் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. 19 கிராமங்களில் பணிகள் முழுமையாக நிறைவடைந் துள்ளது.மக்கள் விழிப்புடன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கணக்கெடுக்கும் பணிக்குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என பேசினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

கட்டுகள்
கடலூர்,
கடலூர் ஊராட்சி,
கடலூர் மாவட்ட வளர்ச்சி,
கடலூர் மாவட்டம்
சிப்காட்டில் கம்பெனிகளை ஆய்வு செய்ய முடிவு ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
கடலூர் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அறிக்கையை அரசுக்கு அனுப்ப மாவட்ட ஊராட்சி குழு முடிவு செய் துள்ளது. மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கடலூரில் நடந் தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரான் சிஸ்மேரி, ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அணைக் கரை பாலத்தை விரைந்து கட்டவும், காட்டுமன்னார்கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற உறுப்பினர் கந்தசாமி பேசினார். அவரை தொடர்ந்து பேசிய பிரபாகரன், சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகம் மினி பஸ் நிலையமாக மாறி வருவதை தடுக்க வேண்டும் என்றார். குண்டுஉப்பலவாடி பாலம் கட்ட 11 முறை டெண்டர் விட்டும் பணிகள் நடக்கவில்லை. பாலம் கட்ட உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கவுன்சிலர் ஜெயகாந்தன் பேசினார். சிதம்பரம் புறவழிச் சாலை பணியில் வடிகால் வாய்க்கால்கள் தூர்க்கப் பட்டுள்ளதால் மழை காலங்களில் மணலூர் மேற்கு பகுதியில் உள்ள விளை நிலங்கள் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஆக்கிரமிப்பை அகற்றி வடிகால் வாய்க்கால் கட்ட பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் கருப்பன் வலியுறுத்தினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மாவட்டத்தில் கோவில், பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும்.
சேத்தியாத்தோப்பு 16 கண் மதகு பாலம், வடக்குத்து பாலம், பறவனாற்றுப் பாலங்களை போர்க்கால அடிப்படையில் துப்பிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் போக் குவரத்து துறையினரை கண்டித்து மாவட்ட ஊராட்சி குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பாக எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள் குறித்த கவுன்சிலர்களின் புகார்களுக்கு மாசுகாட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்காததால், மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன கம்பெனிகளை ஆய்வு செய்து, அறிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க அரசிற்கு அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கடலூர் மாவட்டம்,
சிப்காட்
கடலூரில் தொடர்மழை காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் இடிந்து விழுந்தது
கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பழைமை வாய்ந்த கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் உள்ளது. இது 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கடலூர் நகரில் பழைமையும் பெருமையும் வாய்ந்த கட்டடங்களில் இதுவும் ஒன்று.
கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இக்கட்டடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. தற்போது இந்த அலுவலகத்தில் 60 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
வியாழக்கிழமை மாலை 6-30 மணி வரை ஊழியர்கள் இங்கு பணிபுரிந்தனர். அதற்குமேல் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இரவு 7 மணிக்கு அலுவலகத்தின் இரவுக் காவலர் அமாவாசை (55) மட்டும் முதல் மாடியில் பணியில் இருந்தார். இரவு 7-30 மணி அளவில் கட்டடத்தின் முன் பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் உயிர்ச்சேதம் இன்றித் தப்பியது. கட்டடத்தின் ஏனைய பகுதிகளும் இடிந்து விழும் நிலையில்தான் உள்ளன. எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தாற்காலிகமாக அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டது.
அலுவலகக் கட்டடம் இடிந்து சேதம் அடைந்தது குறித்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி பஞ்சமூர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விவரம் தெரிவித்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
கட்டுகள்
கடலூர் ஊராட்சி,
மழை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)