கோரிக்கை பதிவு

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் இன்று வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் டிசம்பர்-2009 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச்31-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.  
 வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359  மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.ஏ.-வரலாறு, சோசியாலஜி, எக்னாமிக்ஸ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், தமிழ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், பங்ஷனல் தமிழ், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் மற்றும் சிவிக் ஸ்டெடிஸ், ஹியுமன் ரைட்ஸ், சோசியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், பி.ஏ. மற்றும் பி.எஸ்சி. சைக்காலஜி  பி.எஸ்சி.- கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (டபுள் டிகிரி), ஆப்ரேஷன் ரிசர்ச் (டபுள் டிகிரி), அப்ளைடு கெமிஸ்டரி, எலக்டிரானிக் சயன்ஸ்,  இயற்பியல், தாவரவியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இனபர்மேஷன் டெக்னாலஜி, விஷுவல் கம்யூனிக்கேஷன்ஸ், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் டூரிசம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியுசிக்., பி.டான்ஸ்., பி.பி.எல்., பி.சி.ஏ., பி.டிட், பி.எட்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.ஃபில்- இயற்பியல், விலங்கியல், கடல்வாழ் உயிரியல் மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள், டிப்ளமா படிப்புகள். சான்றிதழ் படிப்புகள்.

கடலூர்&பாலூர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தாமதம்

கடலூரில் இருந்து பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் சாலையில் தினமும் பஸ், லாரி, கார், போன்ற வாகனங்கள் செல்கிறது. இதுதவிர இரு சக்கர வாகனங்களும் அதிகம் செல்கிறது. குறுகிய சாலையாக இருந்ததால், அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.
விபத்துகளை தடுக்கும்பொருட்டு சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கப்பட்டது. கீழ்அருங்குணம் பகுதியில், சாலையின் ஒரு பக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்காததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பேருந்துகளுக்கு வழி விட்டு செல்ல முற்படும் போது சாலையின் ஒரத்தில் உள்ள பள்ளம் தெரியாமல், பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதேபோல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துகளை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட பணி, முடிவடையாமல் இருப்பதால், விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே, சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லிக்குப்பத்தை அடுத்த கீழ்அருங்குணம் பகுதியில் சாலை அகலப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் நடந்து வருகிறது. சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிப்காட் தொழிற்பேட்டையில் ஆய்வு

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்த உள்ள ஐ.நா குழுவினரை சந்திக்க, விவசாயிகளுக்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் வேங்கடபதி, பொதுச்செயலாளர் வெங்கடேசன், அமைப்பு செயலாளர் கீழ் அனுவம்பட்டு ரவீந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி என்ற பெயரால் உருவாக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற் சாலைகளால் நமது உணவு, குடிநீர், சுவாசிக்கும் காற்று மூன்றும் நஞ்சாகிவிட்டது. சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் வேக மாக சிதைக்கப்பட்டு வருகின்றன. சிப்காட் தொழிற்சலைகளால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகி றது. உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள் ளது. இந்த நிலையில் எஞ்சியுள்ள விவசாய விளை நிலங்களை பாதுகாப்பது விவசாயிகளின் கடமை. இது குறித்து ஆய்வு நடத்த ஐ.நா சபையின் உணவு உரிமைக்கான சிறப்பு பிரதிநிதி ஆலிவர் ஷட்டர் தலைமையிலான குழு இன்று கடலூர் வரு கிறது. குழுவில் வழக்கறி ஞர், மருத்துவர், உணவுப்பொருட்கள் உற் பத்தி திறன் குறித்து ஆய்வு நடத்தும் பேராசிரியர்கள், விவசாயிகள் இடம் பெற்றுள்ளனர். பியான் அமைப் பின் தமிழ்நாடு தலைவர் குருசாமி குழுவை வழி நடத்துகிறார். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பினரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இக்குழுவினர் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளையும், அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடலோர பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்துகின்றனர்.தொடர்ந்து இன்று(31ம் தேதி) மாலை கடலூர் டவுன்ஹாலில் விவசாயிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிகிறார்கள். இந்த நிகழ்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனை வரும் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை பாது காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
விவசாயிகளுக்கு அழைப்பு

குடிநீரில் குளோரின் கலக்கும் நிலையம்

கடலூர் நகராட்சியால் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குடிநீருக்கு குளோரின் கலக்கும் நிலையம், 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்துதான் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதற்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீரை சுத்திகரித்து வழங்க அவ்வப்போது பிளீச்சிங்பவுடர் தொட்டியில் கலக்கப்படுகிறது. இதை எளிதாகவும் சரியான அளவிலும் செய்வதற்காக குடிநீரில் குளோரின் வாயு கலக்கும் இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. குளோரின் வாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து பொருத்தி, அதில் இருந்து குளோரின் வாயு, குடிநீர் பகிர்மானக் குழாயுடன் இணைக்கப்பட்டு உள்ளது.  இந்த இயந்திரம் தற்போது செயலற்று மூடிக்கிடக்கிறது. இதற்கான அறை மூடப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு சில நாள்களே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது நகராட்சி ஊழியர்கள் நேரடியாக பிளீச்சிங் பவுடரைக் கலக்கி வருகிறார்கள். இது குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பதில்லை. சில நேரங்களில் அதிக அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து விடுவதால் நகராட்சிக் குடிநீரைக் குடிப்பதற்கு சிரமமாக இருக்கும்.இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் சந்திரமனோகரனிடம் கேட்டதற்கு, குளோரின் வாயு செலுத்தும் இயந்திரம் இயங்கவில்லை. மும்பையைச் சேர்ந்த நிறுவனம்தான் அதைச் சீரமைக்க முடியும். அரசுக்கு எழுதி இருக்கிறோம். சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கையினால்தான் பிளீச்சிங் பவுடரைக் கலக்குகிறோம் என்றார்.

தொலைதூரக்கல்வி மைய பாடங்கள் வானொலியில் ஒலிபரப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் பல்வேறு துறை மாணவர்களுக்கான பாடங்கள் புதுச்சேரி,​​ சென்னை,​​ திருச்சிராப்பள்ளி,​​ கோயம்புத்தூர் ஆகிய அகில இந்திய வானொலி நிலையங்களில் முதல் அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது.இவ்வாண்டுக்கான பாடங்கள் மே 9-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது.​ மே 8,9 தேதிகளில் மட்டும் மாலை 5 மணிக்கே இப்பாடங்கள் ஒலிபரப்பாகும்.30 நிமிட கால அளவிலான தமிழ்,​​ ஆங்கிலம்,​​ சமூகவியல்,​​ பொருளாதாரம்,​​ வணிகம்,​​ மக்கள் தொகையியல்,​​ அரசியல் பொது நிர்வாகம்,​​ காவல் நிர்வாகத்துறை மாணவர்களுக்கான இப்பாடங்களின் ஒலிபரப்பை கேட்டு பயன்பெறுங்கள் என புதுச்சேரி வானொலி நிலைய இயக்குநர் கல்யாணி ராமச்சந்திரன் பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கடற்கரைப் பகுதிகளில் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு

கடற்கரைப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று,​​ தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.​ ​கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது.​ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​ மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.​ மீனவர்களுக்கு எதிராக அரசுகளால் இயற்றப்படும் சட்டங்களை கூட்டமைப்பு எதிர்க்கும்.​ கடற்கரை மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது.​ மீனவர்களை மலைவாழ் மக்களுடன் இணைத்து இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.​ மக்கள் தொகை அடிப்படையில் மத்திய,​​ மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளில் மீனவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.​ மத்திய அரசில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.​ மே 9-ம் தேதி கடலூரில் மாநில மாநாடு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு அனைத்து மீனவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.அப்பாராஜ் தலைமை வகித்தார்.​ ஆர்.கன்னியப்பன்,​​ சுப்புராயன்,​​ ஏழுமலை, பாலு ​ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ ஜேபியார் பேரவைத் தலைவர் கனகராஜ் வரவேற்றார்.​ ​அகில இந்திய மீனவர் சங்க துணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

எமனாக மாறி வரும் மணல் சாலைகள்

கடலூர் நகரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பராமரிப்பு இன்மையால், பெரும்பகுதி மணலால் மூடப்பட்டு மக்களுக்கு எமனாக மாறிவருகிறது.தேசிய நெடுஞ்சாலை 45ஏ கடலூர் நகராட்சி பகுதி வழியாக, 15 கி.மீ. தூரம் கடந்து செல்கிறது. பல கோடி செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தச் சாலை, முறையாகப் பராமரிப்பு இல்லாததால், பெரும்பகுதி மணல் படிந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது.தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்கள் பெட்டிக் கடைகள், ஹோட்டல்கள், திடீர் கோயில்கள், குளிர்பானக் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலையில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இச்சாலை நிர்மாணிக்கப்பட்ட பிறகு, வாகனப் போக்குவரத்து பன்மடங்கு பெருகிவிட்டது.அதற்கேற்ப விரிவுப்படுத்தும் பணியையோ, பராமரிப்புப் பணிகளையோ செய்யாததால், தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் மாறி வருகிறது.பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கான அகலம் போக மீதம் உள்ள பகுதி முழுவதும், ஒரு அடி உயரத்துக்கு மணல் படிந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் நடந்து செல்வோருக்கும் எமனாக மாறி இருக்கிறது.இந்த மணல் மேடுகளில் சிக்கி விழுந்து, அவர்கள் மீது பின்னால் வந்த வாகனம் மோதி மூவர் இறந்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை நடைபாதை முழுவதும் வணிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அலுவலர்களைக் கண்டு, ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் கவலைப்படவே இல்லை.  இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.அதற்கும் பலன் ஏதும் இல்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர், விழுப்புரம் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:கடந்த 19-ம் தேதி கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கண்துடைப்பு நாடகமாக நடந்தது. எந்த ஆக்கிரமிப்பையும்அகற்றவில்லை.எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது என்ற அளவுகூட அவர்களிடம் இல்லை. வெறுமனே விளம்பர போர்டுகளை மட்டுமே வைத்து அகற்றுமாறு கூறிச் சென்றனர். அதைக்கூட யாரும் அகற்றவில்லை. தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பராமரிப்பு இன்றி மண் மேடிட்டுக் கிடப்பது மக்கள் உயிருக்கு ஆபத்தாக உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.

விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதையில் அனைத்து ரயில்களையும் இயக்க கோரிக்கை

விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில், ஏற்கெனவே மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் வெள்ளிக்கிழமை தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு, ஏப்ரல் 15-ம் தேதி முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட இருப்பதாக அறிகிறோம்.இந்த மார்க்கத்தில் சென்னையில் இருந்து கடலூர் வழியாக, 12 ரயில்கள் இயக்கப் பட்டன. தற்போது, இப்பாதையில் இரு பாசஞ்சர் ரயில்களும் (விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே மட்டும்) மற்றும் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாரம் ஒரு முறை மட்டும் இயக்க, தென்னக ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக அறிகிறோம். இது கடலூர் மாவட்ட மக்களுக்கு பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாகும்.÷எனவே மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கும், கடலூரில் இருந்து கோவை மற்றும் வேலூருக் கும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் நிற்கும் என்ற அறிவிப்பு கண்டனத்துக்கு உரியது. சரித்திர முக்கியத்துவம் கருதி, கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தை மாதிரி ரயில் நிலையமாக மேம்படுத்த வேண்டும்.கணினி பதிவு மையம் காலை 8 மணி முதல் 14 மணி நேரம் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு லாரன்ஸ் சாலை முதல், கம்மியம்பேட்டை ரயில்வே கேட் வரை, ரயில்வே லைன் ஓரமாக அகல நடைபாதை அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்தக் கடன்களை யார் அடைப்பது..? நமது வாரிசுகளா..? ஆட்சியாளர்களின் வாரிசுகளா..?

தினம்தோறும் செய்தித்தாள்களைத் திறந்தால் மக்களுக்கு வழங்கியிருக்கும் திட்டங்களினால் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள்.. நிறைவாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியோடு காணப்படுகிறார்கள். என்றென்றைக்கும் நாங்கள்தான் முதல்வர்கள் என்கிற ரீதியில் ஆளும் கட்சியின் அடிப்பொடிகள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளோ எதை வைத்து ஆளும்கட்சியை எதிர்ப்பது என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவில் வைத்துதான் கொள்ளையடித்துப் பழக்கமான ஜெயலலிதாவுக்கு பிடிபடாமலேயே கொள்ளையடிக்கும் திறன் கொண்ட கலைஞர் கூட்டணியின் சாமர்த்தியம் போதவில்லை.

என்ன செய்தால் இந்த ஆட்சி ஒழியும் என்று ஜெயலலிதாவும், இன்னும் என்னென்னவற்றை வாரி வழங்கினால் நமது அடுத்த மூன்றாவது தலைமுறை வரையிலும் நான் ஆட்சிக் கட்டிலில் இருக்கலாம் என்று ஆளும் கட்சியும் மாறி மாறி செய்து வரும் திட்டத்தில் தங்கள் தலையில் துண்டு விழுந்திருப்பதை உணராமலேயே.. தாங்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே மக்கள் சந்தோஷமாக இலவச டிவியில் படம் பார்த்துக் கொண்டு இலவச கேஸ் ஸ்டவ்வில் இலவச அரிசியையும், சமையல் பொருட்களை வைத்து பொங்கி, ஆக்கி தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இலவசங்களை வாரி வழங்குகின்ற அரசர் தனது குடும்பத்தினர் இதுவரையில் நம்மிடமிருந்து சம்பாதித்த சொத்துக்களில் இருந்து கொடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை.. அனைத்துமே நம்மிடம் இருந்தே.. நம் பெயரில் வெளி ஆளிடம் கடனாகப் பெற்று.. நமக்காக வாங்கியதாகச் சொல்லி பாதியை நம்மிடமும், மீதியை அவரிடமும் தள்ளிவிட்டு போய்க் கொண்டேயிருக்கிறார்.

எப்படியும் நமது கழுத்துக்கு ஒரு நாள் கத்தி வரும்போதுதான் இந்த உண்மை நமக்குத் தெரியும்.. புரியும். அதனால் என்ன..? அப்போது அவர்கள் இருந்தால்தானே.. இருக்கின்றவரையில் அரசராக இருந்துவிட்டு போன பின்பு எதுவாக இருந்தால் அவர்களுக்கென்ன..? மாட்டப் போவது நாம்தானே.. நம் வாரிசுகள்தானே.. அவர்களது வாரிசுகள் இல்லையே..? அவர்கள்தான் இப்போது தமிழகத்திலேயே முதன்மையான பணக்காரர்களாகிவிட்டார்களே..!


இதுவரையில் ஆண்ட தமிழக அரசுகள் வாங்கிக் குவித்திருக்கும் கடன் தொகையை இங்கே பட்டியலிட்டிருக்கிறது ஒரு பத்திரிகையின் கட்டுரை. (தினமலர் என்று நினைக்கிறேன்) படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்..

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதனால், தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலில் ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதியளவு மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாகப் போகிறது. சாலை வரி, கல்வி வரி போன்ற சேவை வரிகள், சம்பளம் வாங்குவோரிடம் மாநகராட்சிகள் வசூலிக்கும் தொழில் வரி, இது தவிர ஆண்டுதோறும் வருமான வரி என, அனைத்து விதத்திலும் வரிகளைச் செலுத்தி, நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறிக் கொண்டுள்ளனர்.

மக்களின் இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அரசு, மேலும் மேலும் கடனை வாங்கி, அதைச் சரிகட்ட, இது போன்று புதுப்புது வழிகளில் வருவாய் தேடி வருகிறது.

கடந்த நான்காண்டு காலத்தில், தமிழக அரசு எந்த பொருளுக்கும் வரியை உயர்த்தாவிட்டாலும், "டாஸ்மாக்' வருமானம் மற்றும் உள்ளாட்சிகள் மூலம் வருவாய் உயர்வு போன்றவற்றால் சமாளித்து வருகிறது.

அதே சமயம், கடன் வாங்கும் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழக அரசுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முந்தைய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி, புதிய வரிகளை விதித்தார். இதனால், மக்கள் மீதான சுமை அதிகரித்தது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், தமிழக அரசின் கடன் 53 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தது.

இப்படி மாறி மாறி கடனை வாங்கினாலும், அதை நியாயப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் தவறவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவது அவசியம் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்றும் நியாயப்படுத்துகின்றனர்.

கடந்த 1988-89 வரை, கடன்கள் ஆண்டுக்கு 1,027 கோடி, 1,554 கோடி ரூபாய் என்ற அளவில்தான் வாங்கப்பட்டது. திருப்பிச் செலுத்தியது போக, மீத கடன் சுமை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அளவில் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த கடன் சுமைதான், மொத்தமாக இன்றைக்கு 73 ஆயிரம் கோடி ரூபாயாக தமிழகத்தின் மீது உள்ளது. ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி பொறுப்புடைமைச் சட்டப்படி, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் பெறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். காரணம், அதற்கு மேல் கடன் வாங்கினால், வட்டியை மட்டுமே கட்ட முடியும்; அசலை திருப்பிச் செலுத்த முடியாது.

தமிழகத்தை பொறுத்தவரை, 10 சதவீதத்துக்கு உள்ளாகவே கடன் வாங்குகிறோம் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு குறைவாகவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

பொதுக் கணக்கை மட்டும் பார்க்காமல் மற்றவற்றையும் சேர்த்தால், 3 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்பதுதான் உண்மை. முந்தைய ஆட்சிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு கூடுதலாக இருந்தது.

1999ல் 8,545.81 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட போதிலும், 5,438.15 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது.

கடந்த 2000ம் ஆண்டில், 11 ஆயிரத்து 596 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 7,719 கோடியே 99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது.

2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 65 ஆயிரத்து 627.63 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 34 ஆயிரத்து 844.71 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கடன் வாங்குவது குறைந்தும், திருப்பிச் செலுத்துவது அதிகரித்தும் வந்ததைக் காண முடிகிறது.

கடந்த 2006-ல் தி.மு.க., அரசு அமைந்த பின், 53,526.63 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, இதுவரை 19,155.84 கோடி ரூபாய்தான் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில் குறைவான அளவே கடன் வாங்கப்பட்டிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் தொகை மிகக் குறைவாக இருந்ததால், கடன் சுமை அதிகரித்துள்ளது.

பொதுக் கடனை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில்தான், திருப்பிச் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், கடன் சுமையைக் குறைக்க, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்து இருக்கலாம்.

ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக கடன் வாங்கி ஈடுகட்டுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு ஈடுகட்டப்பட்டு, அதிகரித்துள்ள கடன் சுமை ஒவ்வொன்றும் மக்கள் தலையில்தான் விழுந்துள்ளது.

கடன் தொகை அதிகமானது எப்படி?

1989-ம் ஆண்டில் கடன் 602.31 கோடி

1990-ல் 755.60 கோடி

1991-ல் 874.36 கோடி

1992-ல் 943.78 கோடி

1993-ல் 1,044.68 கோடி

1994-ல் 1,625.71 கோடி

1995-ல் 1,192.57 கோடி

என்று திருப்பி செலுத்திய பின், ஆண்டுதோறும் கடன் சுமை இருந்து வந்தது.

பின்னர் அமைந்த தி.மு.க., ஆட்சியில்,

1996-ல் 1,442.26 கோடி

1997-ல் 1,724.92 கோடி

1998-ல் 2,159.64 கோடி

1999-ல் 3,107.66 கோடி

2000-ம் ஆண்டில் 3,876.04 கோடி

என்று கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.

அதன் பின் வந்த அ.தி.மு.க., ஆட்சியில்

2001-ம் ஆண்டு 3,445.20 கோடி

2002-ல் 7,251.91 கோடி

2003-ல் 5,195.36 கோடி

2004-ல் 4,948.32 கோடி

2005-ல் 5,644.53 கோடி

என்று அதிகரித்தது.

தற்போதைய அரசு அமைந்த பின்

2006-ல் 2,456.91 கோடி

2007-ல் 4,643.03 கோடி

2008-ல் 9,482.21 கோடி

2009-ல் 9,928.71 கோடி

என்று திருப்பித் தராத கடன் சுமை அதிகரித்துள்ளது.

இது பற்றி தமிழகத்தின் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சமீபத்தில் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்த கருத்து முத்துக்கள் இவை..


"மாநிலத்தின் சமூக நலத் திட்டங்களால் ஒருபக்கம் செலவு அதிகரிக்கிறது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால், அரசு ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ. 11,093 கோடி வழங்க வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 5,156 கோடி தொடர் செலவு ஏற்படும்.

இந்த ஆண்டுக்கு மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, சுமார் ரூ. 7,500 கோடி கூடுதல் செலவும், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான ஒட்டுமொத்த செலவு ரூ. 30,647 கோடியாகவும் இருக்கும். இது மாநிலத்தின் மொத்த வருவாய் செலவில் 52 சதவீதம் ஆகும்.

2008-2009ம் ஆண்டில் உணவு மானியம் ரூ. 1,950 கோடியாக இருந்தது. இப்போது, இது ரூ. 2,800 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 2,080 கோடி செலவு ஏற்படும்.

கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் மாநில அரசின் கடன் ரூ. 74,456 கோடி. இது 2000-2001ம் நிதியாண்டில் ஆட்சியிலிருந்து திமுக விலகியபோது, ரூ. 28,685 கோடியாக இருந்தது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சியில் இருந்து விலகியபோது, அவர்கள் வைத்துச் சென்ற கடன் தொகை ரூ. 57,457 கோடி. அதற்கு அடுத்த ஆண்டு ரூ. 60,170 கோடி என கடன் தொகை உயர்ந்து கொண்டே வருகிறது. நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டு காலத்தில் நிதித் துறை செம்மையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மொத்த வருமானத்தில், 3 சதவீதம் அளவுக்கு நிதி பற்றாக்குறை பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வரையிலும் மூன்று சதவீதம் அளவிலேதான் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், வருங்காலத்தில் சற்று அதிகமாகலாம்.

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் நிதி நிலைமை சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் வருவாய் வளர்ச்சி சரிந்து வருகிறது. மறுபக்கத்தில் செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தின் சொந்த வரி வருவாயில், குறிப்பாக வணிக வரிகள் மற்றும் முத்திரைத்தாள் தீர்வைகளின் வளர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

மத்திய வரியில் இருந்து பெறப்பட்ட மாநில அரசின் பங்கு முதலில் எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிட ரூ. 986 கோடி குறைந்துள்ளது. மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு வழங்குகிற நிதிப் பகிர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வந்திருக்கிறது. மூன்றாவது திட்டக் குழு காலத்தில் அது 7.48 சதவீதமாக இருந்தது. 12வது திட்ட காலத்தில் அது 5.31 சதவீதமாக குறைந்துவிட்டது"

என்றார் பேராசிரியர் அன்பழகன்.

போதுமா...?

ஒரு பக்கம் நிதியுதவிகளாலும், இலவசத் திட்டங்களினாலும் மாநில அரசின் பட்ஜெட்டில் ஒட்டை விழுந்திருப்பதை நிதியமைச்சரே வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். ஆனால் இதை நிவர்த்தி செய்வது முடியாது என்பதையும் மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆட்சிப் பொறுப்பிற்கு மறுபடியும் வரத் துடிப்பதால் இப்படியெல்லாம் இலவசங்களை வாரி வழங்கினால்தான் மக்கள் ஓட்டளிப்பார்கள் என்பதால் இதிலிருந்து இவர்களால் தப்பிக்க முடியவில்லை.

ஆக.. இவர்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் கொள்ளையடிக்கத் துடிப்பதால்தான் இலவசத் திட்டங்கள் தொடர்கின்றன என்பதுதான் உண்மையே தவிர.. ஏதோ நிஜமாகவே ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல..

ஒரு கதை சொல்கிறேன்.. உங்களுடைய வீடாகவே இருக்கட்டும். வீடோ குடிசை வீடு என்று வைத்துக் கொள்ளுங்கள். சம்பளமோ மாதம் ஐந்தாயிரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் சம்பளத்திலேயே எல்.சி..டி. டிவி, பிரிட்ஜ், கட்டில், மெத்தை, என்று பலதரப்பட்ட பொருட்களையும் யாரிடமாவது கடன் பெற்றாவது வாங்குவீர்களா..?

இதுவெல்லாம் இருந்தால் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால் திருப்பிக் கட்ட வேண்டுமே என்று யோசிக்க மாட்டீர்களா..? கடன் வாங்காமல் குடும்பம் நடத்த முடியாது எனில், இதுவரையில் குடும்பம் நடத்தியவர்களையெல்லாம் என்னவென்று சொல்வது..?

காலம் மாறுகின்றபோது தேவைகளும் மாறுகிறதே என்று நீங்கள் சொன்னாலும் தேவைகளை நினைத்துப் பார்க்க வைக்கும் ஆசைகளைத் தூண்டிவிட்டது உங்களுடைய திறந்துவிடப்பட்ட பொருளாதாரம்தான் என்பதும், அந்த நிறுவப்பட்ட திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியால் அதிகம் வளர்ந்தது ஆதிக்கத்தில் இருந்தவர்கள் என்பதும்தான் உண்மை.

ஸோ.. இப்படியே போனால் நிலைமை என்ன..? எப்போது இந்தக் கடன்கள் தீரும்..? கடனை அடைக்க முடியாமல் போனால்.. போகாது.. மத்திய அரசு இருக்கிறது. அது கடனை அடைத்துவிடும். அந்த லூஸுகளுக்கும் இதே போல பல மடங்கு கடன் இருக்கிறதே.. அவர்கள் எப்படி அடைப்பார்கள்..? இல்லை.. இல்லை.. எப்பாடுபட்டாவது கூடுதலாக கரன்ஸி நோட்டுக்களை அடித்து வெளியி்ட்டு இதன் மூலமாவது கடனை அடைத்துவிடுவார்கள்..

கரன்ஸிகளை அதிகம் வெளியிட்டு கடனை அடைத்துவிடலாம் என்கிற அபார யோசனை அரசுகளுக்குத் தெரிந்திருந்தால் இவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள். வெறும் கரன்ஸி நோட்டுக்களை அச்சடித்து அதையே பயன்படுத்தியிருக்கலாமே.. எதற்காக கேவலமாக இன்னொருவரிடம் போய் கையேந்த வேண்டும்..?

அட போப்பா.. என்னவோ.. எவன் கடன் வாங்கினா என்ன..? எனக்கு டிவி வந்திருச்சு.. ஓசில கேஸ் வந்துச்சு.. ஓசில அரிசி, பருப்பெல்லாம் கிடைச்சுச்சு. நான் சாகுறப்பகூட ஓசில உதவித் தொகை என் குடும்பத்துக்கு கிடைச்சிரும்.. அப்புறம் நான் எதுக்கு இதைப் பத்தி யோசிக்கணும்.. அதான் நான் மண்ணோட மண்ணா ஆகியிருவனே..

இதைப் பத்தி யோசிக்க வேண்டியவன் நானில்லை.. எனக்கப்புறம் இங்க குடியிருக்கப் போறானுக பாரு.. நம்ம வாரிசுக அவங்க பாடு.. ஆட்சியாளர்கள் பாடு..! நான் இருக்கிறவரைக்கும் ஜாலியா, சந்தோஷமா, நிம்மதியா இருந்திருவேன்..!

என்ன ஒரு சுயநலம் நம் அனைவருக்குள்ளும்..!????

எப்போது கேட்க்கும் சிக்கு புக்கு சத்தம் - தமிழன் எக்ஸ்பிரஸ்

http://www.tamilanexpress.com/Pdf/2232010/8.pdf
http://www.tamilanexpress.com/Pdf/2232010/9.pdf

பல்கலை. மாணவர்கள் மூவர் சாவு: மாவட்ட வருவாய் அலுவலர் 2-ம் கட்ட பொது விசாரணை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமையில் 2-ம் கட்ட பொது விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர் கவுதம்குமார் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி விபத்தில் இறந்ததை அடுத்து பல்கலையில் பயிலும் வடமாநில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு பல்கலைக்கழக கட்டடங்கள், பல்கலை. வேன் மற்றும் ஆட்டோக்களை சேதப்படுத்தினர்.இச்சம்பவத்தின் போது போலீஸôர் மாணவர்களை விரட்டியடித்த போது 3 பொறியியல் புல மாணவர்கள் முத்தையாநகர் அருகே உள்ள பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தனர்.இச்சம்பவம் குறித்து தமிழக அரசு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் மார்ச் 5-ம் தேதி முதல் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தார்.சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் கட்ட பொது விசாரணை நடத்தினார். இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை 2-ம் கட்ட பொது விசாரணையை நடத்தினார்.அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் மற்றும் அருந்ததியினர் சங்கத்தினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது தமிழக ஜார்க்கண்ட் முக்தி மோட்சா தலைவர் எம்.ராமச்சந்திரன்a மற்றும் நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.அடுத்த கட்ட பொது விசாரணை மார்ச் 31-ம் தேதி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

அடிப்படை வசதி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூரில் 25 ஆண்டுகளாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்காததைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் திடீர்குப்பம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 110 குடும்பங்கள் வசிக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த நகரில் வசிப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சியால் வழங்கப் படவில்லை.இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை திடீர் குப்பம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, வாலிபர் சங்க கிளைச் செயலர் புகழேந்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் சுப்புராயன், வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புழுதி பறந்த நெல்லிக்குப்பம் ரோட்டில்தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
கடலூர் நகராட்சி பகுதியில் 40.40 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிக்காக கடலூர் நகரின் முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையான நெல்லிக்குப்பம் ரோட்டில் சாவடி முதல் பொதுப்பணித்துறை அலுவலகம் வரை பள்ளம் தோண்டப்பட்டது.பைப்புகள் புதைத்த பின்னர் பள்ளத்தில் மணலை கொட்டி மூடாமல், தோண்டி எடுத்த மண்ணை கொட்டி மூடியதால் மழைக் காலங்களில் சாலைகள் சேறும் சகதியுமாகி வயல் வெளிபோல் காட்சி அளித்தது. லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.இதனைக் கண்டித்தும், சாலையை சீரமைக்கக் கோரி பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தின. அதனைத் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் பொது நல அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்படும் என கலெக்டர் உறுதியாளித்தார்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் கடலூர்-நெல்லிக்குப்பம் ரோடு, வண்டிப்பாளையம் ரோடு மற்றும் போடிசெட்டி தெரு, சஞ்சீவி நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்தரை கிலோ மீட்டார் தூர சாலையை சீரமைக்க 1.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.அதனையொட்டி தற்போது நெல்லிக்குப்பம் சாலை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. அதில் பாதாள சாக்கடை திட்ட குழாய் புதைத்த இடத்தில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து அகற்றிவிட்டு அதன் மீது ஜல்லி கொட்டி சாலை அமைக்கப்பட உள்ளது.இதேபோன்று வண்டிப்பாளையம் சாலை விரிவுப்படுத்தி சீரமைக்கும் பொருட்டு சாலையின் மேற்கு பகுதியில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது

கடலூர் எஸ். பி. க்கு குறி - தமிழன் எக்ஸ்பிரஸ்

http://www.tamilanexpress.com/Pdf/2232010/30.pdf

http://www.tamilanexpress.com/Pdf/2232010/31.pdf

200 மீட்டர் சாலை அமைக்கவில்லை

கடலூர் அருகே மீனவ கிராமமான சித்திரைப்பேட்டையிலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடலோரப்பாதை உள்ளது. தற்போது இந்த பாதை தைக்கால்தோணித்துறையில் இருந்து தொடங்கி சொத்திக்குப்பம், ராஜாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, தம்மணாம்பேட்டை, நாயக்கர்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டைநகர், அய்யம்பேட்டை, மானியார்பேட்டை, அன்னப்பன்பேட்டை,ரெட்டியார்பேட்டை, மடவாய்பள்ளம், குமாரப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுக்குப்பம், இந்திராநகர், புதுப்பேட்டை, சின்னூர் வடக்கு மற்றும் தெற்கு சலங்கைகாரத் தெரு ஆரியநாட்டு சலங்குகார தெரு வழியாக பரங்கிப்பேட்டை வரை செல்கிறது.
தற்போது இந்த பாதை யில் சித்திரப்பேட்டையில் இருந்து தம்மணாம்பேட்டை வரையில் உள்ள ஒன்றரை கி.மீ தூர சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட 200 மீட்டருக்கு சாலை முற்றிலும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தம்மணாம்பேட்டையில் இருந்து சித்திரைப்பேட்டை வரையிலான கிராம மக்கள் சுமார் 15 கி.மீ வரை சுற்றி வரும் அவல நிலை உள்ளது.
குறிப்பிட்ட அந்த 200 மீட்டருக்கு சாலை அமைப் பது தொடர்பாக தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன் தலைமையில் செயலாளர் முருகன், சித்திரைப்பேட்டை தலைவர் புஷ்பலிங்கம், துணைத் தலைவர் சுப்புராயன், செயலாளர் அன்பு, பொருளாளர் முரளி, தம்மணாம்பேட்டை தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ஹரி, பொருளாளர் ஆறுமுகம் மற்றும் இரு கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமனிடம் மனு அளித்தனர்.
குறிப்பிட்ட 200 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படாததால் பொதுமக் கள், மாணவர்கள், பணிக்குச் செல்வோர் 15 முதல் 20 கி.மீ தூரம் சுற்றிச் செல்லவேண்டியிருக்கிறது.
இதனால் கடலூர் சிதம்பரம் சாலையில் போக்கு வரத்து நெருக்கடியும் விபத்துகளும் ஏற்படுகிறது. கடலோரச் சாலை எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் உள்ளது. குறிப்பிட்ட 200 மீட்டர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். அந்த நிறுவனத்திடம் பேசி 200 மீட்டருக்கு சாலை அமைத்து தந்து கடலோர கிராம மக்களின் அவல நிலையை போக்க வேண்டும், என மனுவில் கூறியுள்ளனர்.
15 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய நிலை. சாலை அமைத்து தர
ஆட்சியரிடம் மீனவர்கள் மனு

அரசு பணிகளில் தமிழை முதன்மைப்படுத்த வேண்டும்

கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை மூலம் ஆட்சி மொழிப் பயிலரங்கம் கடலூர் ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட உதவி இயக்குநர் ஆருண்ரசீத் வரவேற்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் பயிலரங்கை தொடங்கி வைத்து பேசும்போது, உலகத் திலேயே தொன்மையும், பெருமையும் வாய்ந்தது தமிழ்மொழி. நாம் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமை யாக கருதுகிறோம். நம் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் மகிழ்ச்சி அடை கிறோம். முதலில் நம் மொழியை நாம் மதிக்க வேண்டும். தமிழ்மொழியில் எழுதவும், பேசவும் வேண் டும். அடுத்த தலைமுறைக் கும் தமிழின் அருமையை நாம் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் மொழிக்கு முதலிடமும், முக்கியத்துவமும் தர வேண்டும். அலுவலக பணிகளை தமிழில் செய்ய வேண்டும், என்றார். தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் ராஜேந்திரன் பேசும்போது, தமிழ் பேசும் மக்களின் வரி பணத்தில் அரசு அலுவலர்கள் சம்பளம் பெறுகிறோம். நாம் செய்யும் பணிகள் மக்களுக்கு புரி கின்ற வகையில் இருக்க வேண்டும். அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத் திட வேண்டும். அரசு பணிகளை தமிழ்மொழியில் மேற்கொள்ள வேண்டும். நம் தாய்மொழியை ஆட்சி பணிகளில் முதன்மை படுத்திட வேண்டும், என்றார். அரசு அலுவலர்களுக்கு மொழி பயிற்சியை பெரியார் அரசுக்கல்லூரி உதவி பேராசிரியர் அர்த்த நாரி அளித்தார். ஆட்சி மொழி ஆய்வும், குறைகளும் பற்றி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் புலவர் ஆறுமுகம், குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் குறித்து முனைவர் ராஜேந்திரனும் அளித்தனர்.
இன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில் ஆட்சியர் சீத்தாராமன் தலைமை உரையாற்றுகிறார்.

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் யாருக்கும் பயனின்றி முடங்கிப்போன நிலங்கள்

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பல தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.​ இதனால் விவசாயிகளிடம் ​ இருந்து கட்டாயமாக சொற்ப விலையில் கையகப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் யாருக்கும் பயனின்றி முடங்கிக் கிடக்கின்றன.​ ​ இதனால் அரசுக்கும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு வர வேண்டிய பணமும் வரவில்லை.​ வேறு நபர்களும் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கடலூர் அருகே 1985-ல் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.​ முதல் கட்டமாக 518 ஏக்கர் நிலமும்,​​ 2-ம் கட்டமாக 500 ஏக்கர் நிலமும் கையகப் படுத்தப்பட்டு,​​ தொழிற்சாலைகளுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டன.​ நில வளமும்,​​ நீர் வளமும் கொண்ட இப்பகுதி,​​ பிரதானமாக ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு என மத்திய அரசு அறிவித்ததால்,​​ பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள்தான் இங்கு தொடங்கப்பட்டு வருகின்றன.சிப்காட் தொழிற்பேட்டை நிலங்கள் அரசால் கையகப்படுத்தும் முன் முந்திரி,​​ மணிலா,​​ சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் வளர்க்கப்பட்டு இருந்தன.​ இந்த நிலங்களுக்காக ​ விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம்.​ விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரூ.80 ஆயிரம் வரை பெற்றனர்.எந்த நோக்கத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலை தற்போது உருவாகி உள்ளது.​ இந்த நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு குத்தகைக்கு முதலில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் என வழங்கப்பட்டது.​ அது படிப்படியாக உயர்ந்து,​​ தற்போது ஏக்கர் ரூ.20 லட்சம் என குத்தகைக்கு வழங்கப்படுகிறது.சிப்காட் தொழிற்பேட்டையில் தற்போது ரூ.200 கோடி மூலதனத்துக்கு மேல் முதலீடு செய்து இருக்கும் 4 தொழிற்சாலைகள் உள்பட,​​ 34 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.​ 6 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.​ ​ரூ.200 கோடி மூலதனத்தில்,​​ 60 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ஜே.கே.​ ஃபார்மா,​​ 60 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 18 தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.மூடிக்கிடக்கும் தொழிற்சாலையை அரசு ஏலம் விட்டாலன்றி,​​ யாரும் அதை வாங்க முடியாது.​ அவ்வாறு ஏலம் விடுவதற்கும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பல ஆண்டுகள் ஆகிறதாம்.​ ஏலத்தில் எடுத்த பிறகும்,​​ பல்வேறு துறைகளில் உள்ள நிலுவைத் தொகைகளைச் செலுத்தி மீண்டும் தொழில் தொடங்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதாகக் கூறப்படுகிறது.இந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக,​​ தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 320 ஏக்கர் நிலங்கள்,​​ ஆலைகள் மூடப்பட்டதால்,​​ எந்த பயனுமின்றிக் முடங்கிக் கிடக்கின்றன.​ இந்த நிலங்களால் அவற்றை விற்பனை செய்த விவசாயிகளுக்கும் பயனில்லை.​ வாங்கிய தொழிற்சாலைகளுக்கு,​​ அரசுக்கும் பயனில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.​ நிதி நிறுவனங்களில் இருந்து வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் மக்கள் பணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.​ ​இது குறித்து சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்தர்குமார் கூறியது:​ மூடிக்கிடக்கும் ஆலைகளின் நிலங்களை வேறு நபர்களுக்கு மாற்றுவதில் மிகவும் சிக்கலான நடைமுறைகள் உள்ளன.​ அரசோ,​​ வங்கிகளோ ஏலம் விட்டால் மட்டுமே மற்றவர்கள் அந்த தொழிற்சாலையை வாங்க முடியும்.​ பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நிலங்களுக்கு,​​ மீண்டும் இப்போதைய சந்தை மதிப்பில்,​​ வித்தியாசத் தொகையை வழங்க வேண்டியது இருக்கிறது.​ ஏலம் விடும் ஆலைகளைப் பல நேரங்களில் இடைத்தரகர்கள் வாங்குகிறார்கள்.​ மூடிக்கிடக்கும் ஆலையை வாங்க வேண்டுமானால் பல வகைளில் பணம் செலவிட்டாக வேண்டியது இருக்கிறது.​ மூடப்பட்ட ஆலைகளின் நிர்வாகமே வேறு நபருக்கு நேரடியாக விற்கவும்,​​ வாங்கும் நபர் அதற்கான நிலுவைத் தொகை அனைத்தையும் ஏற்கும் வகையிலும் விதிகள் இருந்தால்,​​ இங்கு மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளே இருக்காது என்றார் இந்தர்குமார்.இது குறித்து சிப்காட் நிர்வாக அலுவலர் செல்வம் கூறியது:​ மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளை,​​ மற்றவர்கள் வாங்குவதற்கான நடைமுறைகள் எளிதாகவே உள்ளன.​ ஆனால்,​​ அவைகள் செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகள்,​​ கடன்கள் கோடிக்கணக்கில் உள்ளன.​ நிலத்துக்கான வித்தியாச விலை வழங்கத்தான் வேண்டும்.​ ​ அண்மையில் 3 தொழிற்சாலைகள் ஏலம் மூலம் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.​ வங்கிகளும் ஏலம் விடுகின்றன என்றார் செல்வம்.

பி.டி. கத்​த​ரிக்கு தடை கோரி ஆர்ப்​பாட்​டம்

தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்​கம் சார்​பில் கட​லூ​ரில் செவ்​வாய்க்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​பி.டி. கத்​த​ரிக்​கா​யைத் தடை​செய்ய வலி​யு​றுத்​தி​யும்,​​ உர மானி​யத்தை குறைத்​த​தற்கு மத்​திய அர​சுக்​குக் கண்​ட​னம் தெரி​வித்​தும் இந்த ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​தி​ருப்​ பாப்பு​லி​யூர் உழ​வர் சந்தை அரு​கில நடந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு விவ​சா​யி​கள் சங்க கட​லூர் மாவட்​டத் தலை​வர் எம்.நாரா​ய​ணன் தலைமை தாங்​கி​னார்.​ மத்​திய செயற்​குழு உறுப்​பி​னர் கே.முக​மது அலி கண்​டன உரை நிகழ்த்​தி​னார்.​வி​வ​சா​யி​கள் சங்க மாவட்​டச் செய​லா​ளர் ஜி.ஆர்.ரவிச்​சந்​தி​ரன் மற்​றும் நிர்​வா​கி​கள் எஸ்.காம​ராஜ்,​​ என்.ஆர்.ராம​சாமி,​​ எஸ்.தட்​சி​ணா​மூர்த்தி,​​ ஏ.சந்​தி​ர​சே​க​ரன்,​​ ஆர்.லோக​நா​தன்,​​ எம்.மணி,​​ கே.தன​பால்,​​ ஆர்.இளம்​பா​ரதி,​​ பி.பால​மு​ரு​கன் உள்​ளிட்ட பலர் பேசி​னர்.​ கட​லூர் ஒன்​றி​யத் தலை​வர் சி.குமார் நன்றி கூறி​னார்.​

தீயணைப்பு நிலையத்திற்கு வரும் 'தொல்லை பேசி' அழைப்புகள்

கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வரும் 'தொல்லை பேசி' அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பொது மக்கள் அவசர உதவியை நாட வேண்டும் என்பதற்காக போலீஸ் கன்ட்ரோல் ரூம் 100, தீயணைப்புத்துறை 101, ஆம்புலன்ஸ் 108 போன்ற மூன்று இலக்க எண்கள் அனைத்தும் இலவச அழைப்புகளாகும். மொபைல் மற்றும் லேண்ட் லைன் தொலைபேசியில் இருந்து இந்த எண்களுக்கு காசு இல்லாமல் பேச முடியும். இலவச அழைப்பு என்பதால் சில விஷமிகள் இந்த தொலைபேசிகளோடு விளையாட ஆரம்பித்துவிடுகின்றனர். மொபைல் போனில் இருந்து இந்த அவசர எண்களுக்கு டயல் செய்துவிட்டு பேசாமல் இருப்பது, இணைப்பு கிடைத்தவுடன் மொபைல் போனை குழந்தைகளிடம் கொடுத்துவிடுவது, வேறு ஏதாவது எண் களை சொல்லி வெட்டிக் கதை பேசி நேரத்தை வீணடிப்பது அதிகரித்து வருகிறது. இன்னும் சிலர் முதலில் தீயணைப்புத்துறையினருக்கு அழைப்பு விடுப்  த்து, பின்னர் கான்பிரன்சில் 100க்கு டயல் செய்து இருவரையும் பேசவிடுவது.  அவ்வாறு 100ம் 101ம் மோதிக் கொள்வதை அமைதியாக இருந்து ரசிப்பது. இதுபோன்ற 'திருவிளையாடல்களை' சில விஷமிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். மொபைல் போன் 'சிம் கார்டுகள்' மலிவு விலையில் கிடைப்பதாலும், போலி முகவரி கொடுத்து    சிம்கார்டுகளை வாங்கி உபயோகிப்பவர்களும் இந்த சில்மிஷங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் 'தொலைபேசி'  பணி பார்க்கும் தீயணைப்பு துறையினர் அழைப்புகளை அலட்சியப்படுத்த முடியாமலும், சில்மிஷ பேர்வழிகளுடன் வாக்குவாதம் செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வருகின் றனர்.

சிப்காட்டில் கம்பெனிகளை ஆய்வு செய்ய முடிவு ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்

கடலூர் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அறிக்கையை அரசுக்கு அனுப்ப மாவட்ட ஊராட்சி குழு முடிவு செய் துள்ளது. மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கடலூரில் நடந் தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரான் சிஸ்மேரி, ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அணைக் கரை  பாலத்தை விரைந்து கட்டவும், காட்டுமன்னார்கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற உறுப்பினர் கந்தசாமி பேசினார். அவரை தொடர்ந்து பேசிய பிரபாகரன், சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகம் மினி பஸ் நிலையமாக மாறி வருவதை தடுக்க வேண்டும் என்றார். குண்டுஉப்பலவாடி பாலம் கட்ட 11 முறை டெண்டர் விட்டும் பணிகள் நடக்கவில்லை. பாலம் கட்ட உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கவுன்சிலர் ஜெயகாந்தன் பேசினார். சிதம்பரம் புறவழிச் சாலை பணியில் வடிகால் வாய்க்கால்கள் தூர்க்கப் பட்டுள்ளதால் மழை காலங்களில் மணலூர் மேற்கு பகுதியில் உள்ள விளை நிலங்கள் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஆக்கிரமிப்பை அகற்றி வடிகால் வாய்க்கால் கட்ட பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் கருப்பன் வலியுறுத்தினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மாவட்டத்தில் கோவில், பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும்.
சேத்தியாத்தோப்பு 16 கண் மதகு பாலம், வடக்குத்து பாலம், பறவனாற்றுப் பாலங்களை போர்க்கால அடிப்படையில்  துப்பிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் போக் குவரத்து துறையினரை கண்டித்து  மாவட்ட ஊராட்சி குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பாக எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள் குறித்த கவுன்சிலர்களின் புகார்களுக்கு மாசுகாட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்காததால், மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன கம்பெனிகளை ஆய்வு செய்து, அறிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க அரசிற்கு அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

திறமையான மாணவர்களே எங்களது நோக்கம் : பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் பேட்டி

திறமையான மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியின் புதிய நிர்வாக இயக்குனரான கெவின்கேர் நிறுவனர் ரங்கநாதன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியை தற்போது சி.கே.கல்வி நிறுவனத்தின்  நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளது. இக்கல்லூரியை மாநில அளவில் சிறந்த கல்லூரியாக உருவாக்கி,  ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுப்பொலிவுடன் நடத்தப்படும். இங்கு படித்து பட்டம் பெற்று வெளியே செல்லும் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் நிர்வாக திறன்படைத்தவர்களாக இருக்க வேண்டும். இதற்காக திறமைமிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் அளவிற்கு மாணவர்களை உருவாக்குவதே குறிக்கோளாகும்.
அடுத்தாண்டு புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்படும். இந்தியாவின் தலை சிறந்த கல்வியாளர்களை கொண்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வழிவகை செய்யப்படும். இந்நிறுவனத்திலிருந்து வெளியே செல்லும் மாணவர்கள் உடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் அளவிற்கு திறமையான மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார். உடன் நிர்வாக இயக்குனர் அசோக்குமார், சி.கே.கல்வி குழும இயக்குனர் சந்திரசேகரன், முன்னாள் நிர்வாக இயக்குநர் சேகர் உடனிருந்தனர்.

அரசு மருத்துவக் கல்லூரி துவக்க முதல்வருக்கு கவுன்சிலர் கோரிக்கை

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத் துவ கல்லூரி துவக்கக் கோரி முதல்வருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன் றிய கவுன்சிலர் மாரியப்பன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியும்,  இன்ஜினியரிங் கல்லூரிகளும் உள்ளன. இந்த மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி துவக் கப்பட்டது. அதேபோல் இந்த பகுதிமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் தொடர் திருட்டை தடுக்க தீவிர முயற்சி : குற்றவாளிகள் விபரம் சேகரிக்கிறோம்: எஸ்.பி.,

தொடர் திருட்டு மற்றம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை பல்வேறு கோணங்களில் தேடி வருவதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்த போது ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த அன் வர்பாஷா மனைவி ஷெரியா பேகம் மற்றும் அவரது மாமியார் மகபூப் பீவியும் சிதம்பரம் ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கியில் தலா ஒரு லட்சம் ரூபாயை மேனேஜர் அப்துல் ரகீமிடம் டெபாசிட் செய்து ஏமாற்றப் பட்ட வழக்கு பதிந்து நிலுவையில் இருந்தது.
விசாரணையில் வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்தது உண்மை என தக்க ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டு அதன் பேரில் பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப் பட்டது. மும்பையில் தலைமை கணக்கு அலுவலர் மண்டல் என்பவரை தொடர்பு கொண்டு பாதிக் கப்பட்டவர்களுக்கு  தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்தேன். அதன் பேரில் வங்கி மூலம் முறைப்படி 2 லட்சம் ரூபாயை திரும்ப பெற்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமறைவான வங்கி மேலாளர் அப்துல் ரகீமை தேடி வருகிறோம்.
மாவட்டத்தில் சமீப காலமாக  வீட்டை உடைத்து நடக்கும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை ஆங் காங்கே செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனைகள் மூலம் தீவிரமாக தேடி வருகிறோம். மேலும் கடலூர், புதுச் சேரி மற்றும் திருச்சி மத் திய சிறைகளில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் வெளியே வந்த கைதிகள் மற்றும் 10 ஆண்டாக குற் றங்களில் ஈடுபடுவோர் விபரம் சேகரித்து அதன் அடிப்படையிலும் குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
தினமும் நான் மற்றும் அனைத்து டி.எஸ்.பி., க்கள், இன்ஸ்பெக்டர்கள் இரவு ரோந்து பணி மேற் கொள்கிறோம். விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம். பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது வெளியே விளக்குகளை எரிய விட்டு செல்ல வேண்டும். மேலும் போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவித்துவிட்டு சென்றால் குறிப்பிட்ட அப்பகுதியை கண்காணிக்க வசதியாக இருக்கும். இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் கூறினார்.

அரசுக்கு சொந்தமான மரங்கள் வெட்டி சாய்ப்பு

கடலூர் அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டியது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் விசாரணை நடத்த கடலூர் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தில் சுமார் ஆயிரம்பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளை பராமரிக்க “பட்டி“ என்ற பொது இடம் அமைக்கப்பட்டது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் தென்னை, மாமரங்கள் வளர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த இடம் பராமரிப்பின்றி இருந்துள்ளது. இங்குள்ள மரங்களில் இருந்து பெறப்படும் தென்னை, மாங்காய் ஆண்டு குத்தகைக்கு விட ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அது சம்மந்தப்பட்ட துறையினரால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராமத்தை சேர்ந்த சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப் பட்டது.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட கிராம நிர்வாக அதிகாரி மற்றும் துறை அலுவலர்கள் வெட்டப்பட்ட மரங்களை வெட்டியவர்களிடம் இருந்து மீட்டனர்.
இது குறித்து கடலூர் தாசில்தார் தட்சணாமூர்த்தி கூறுகையில், “நடுத்திட்டு கிராமத்தில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட வரு வாய் அலுவலர் மகேஷ்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உயி ருள்ள மரங்கள் எத்தனை வெட்டப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பீடு எவ்வளவு என கணக்கீடு செய்யப்படுகிறது. இது தொடர்பாக அரசு இடத்தில் உள்ள மரங்களை வெட்டிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இது போன்று இக்கிராமத்தின் சுற்றுப்புற பகுதியில் பல ஏக்கர் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் கோரிக்கையாகும்.

கோவில் கட்டி சாலைகள் ஆக்கிரமிப்பு : சர்வே எடுக்க அரசு உத்தரவு

தமிழகத்தில் பொது மக்களுக்கு இடையூறாக சாலையோரம், அரசு புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்களை சர்வே செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை, நகராட்சி சாலையில் அரசு புறம்போக்கில் கோவில் கட்டி அதன் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருகிறது.  சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்களை  சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கோவில் கட்டடங்கள், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவற்றை சர்வே செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள கோவில்கள், அதன் புகைப்படங்கள், ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள விவரம் போன்றவற்றை அந்தந்த மாவட்டத்தில் உள்ள சர்வேயர்கள் சர்வே செய்து தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான கோவில்கள் சாலையில் ஆக்கிரமித்து கட்டப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் நாளை அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

பல்லவர் கால சிவன் கோவில் பண்ருட்டி அருகே கண்டுபிடிப்பு

பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தில் பல்லவர் கால சிவன்கோவில் மற்றும் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சிறுவத் தூரில் உள்ள தருணேந்து கேசரி உடனுறை நாகநாத ஈஸ்வரர் கோவில்  திருப்பணியின் போது, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி சிவஞானம் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் கல் வெட்டு ஆய்வாளர் பண் ருட்டி தமிழரசன் மற்றும் புதுப் பேட்டை கோவிந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது: பண்ருட்டி தாலுகாவில் திருவதிகை வீரட்டானேஸ் வரர் கோவில் மட்டுமே பல்லவர் கால கோவிலாக வரலாற்றில் இருந்தாலும், அருகில் உள்ள சிறுவத்தூரில் பல்லவர்கால கோவிலும், சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது வரலாற்றுக்கு புதிய செய்தியாகும். எனவே 1,700 ஆண்டுகளுக்கு முன்பே சிறுவத்தூர் ஏதோ ஒரு வகையில் சிறப்பிடத்தை பெற்றிருந்தது என கருதப்படுகிறது.
இவ்வூரை ஒட்டிய கெடில ஆற்றங்கரையில் சங்ககால செங்கற்களும், மண்பாண்டங்களும், விளக்கு வகைகளும் ஏற்கனவே எங்களது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. சிறுவத்தூர் நாகநாத ஈஸ்வரர் தென்புற திருச்சுற்றில் கி.பி.ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்க ஆவுடையார் மட்டில் பூமியில் புதைந்த நிலையில் உள் ளது. 390 செ.மீ., சுற்றளவும் 12 செ.மீ., அகலமும் கொண்ட இந்த ஆவுடையார் பல்லவர் காலத்தை சேர்ந்தது.
அதை சேர்ந்த சிவலிங் கமே இக்கோவிலின் கருவறையில் வைத்து வழிபட்டதாகும். விநாயகர், சண்டிகேசுவரர் எட்டுபட்டை கொண்ட சிவலிங்கம் ஆகிய அனைத்தும் பல்லவர் காலத்தில் வழிபட்டதாகும்.
அடுத்து ஆட்சிக்கு வந்த சோழர்கள் காலத்திலும் இக்கோவில் பராமரிக்கப் பட்டுள்ளது. இதற்கு சான்று களாக தென்முக கடவுள், பைரவர், சூரியன், உமையவள் சிலைகள் உள்ளன. சோழர்களுக்கு பின், இப்பகுதியை ஆண்ட விஜயமாநகர - நாயக்கர் காலங்களிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கி.பி., ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த விநாயகர் - சண்டிகேசுவரர் சிற்பங்கள் வேறெங்கும் காண்பதற்கரிய கலைப்படைப்பாகும். இதுபோன்ற 

இக்கோவிலின் தல விருட்சமான மருதமரமும், களரிவாகை எனப்படும் வெற்றிவாகை மரமும் இக்கோவிலின் பழமையை உணர்த்துகின்றன.
இக்கோவில் கருவறை வெளிப்புறம் சுற்றுசுவரில் இருந்த கல்வெட்டுகள்  100 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்த போது சிமென்ட் கலவையால் பூசி மறைக்கப்பட்டுவிட்டன. இதனால் இக்கோவிலின் வரலாறு ஆய்வுக்குரியது. இவ்வாறு பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.

நீர் ஆதார மராமத்து பணிகளை மே மாதத்தில் முடிக்க வேண்டும் : குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

வெள்ளத்தடுப்பு மற்றும் நீராதார மராமத்து  பணிகளை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செய்து முடித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் கடலூரில் நடந்தது.
கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் மற்றும் பல் வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் பேசுகையில், வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற் கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்மொழிவு அனுப்பிய ஆயிரம் கோடி ரூபாயிற்கு அரசு 540 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் துள்ளது. இதற்கான செயல் பாடுகள் எந்த நிலையில் உள்ளது என்பதை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். நீர் ஆதார பணிகள் மழை காலத்தில் செய்தால் முறைகேடு அதிகளவு நடக்கும். எனவே, நீராதார பணிகளுக்கு ஜனவரி மாதத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஏப்ரல்,மே மாதங்களில் பணிகளை முடித்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கார்மாங்குடி வெங்கடேசன் பேசுகையில், அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் 2008ம் ஆண்டு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்து தற்போது தர மறுக்கும் மானியத்தை மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும் என்றார். கொத்தட்டை ஆறுமுகம் பேசுகையில், பெண்ணாடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மந்தமாக நடக்கிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள மூன்று துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்றதற்கு, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி பிரச் னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார். மஞ்சக்கொள்ளை விஜயகுமார் பேசுகையில், தாமதமாக  தண்ணீர் விட்டதால் கடைமடை பகுதியில் 7 கிராமங்களில் 600 ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கின்றன. உடன் தண்ணீர் விட வேண்டும் என்றார். இதற்கு, தற்போது மராமத்து பணி நடக்கவுள்ளதால் தண்ணீர் விட வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரி கூறினார். குறுக்கிட்ட கலெக்டர், 600 ஏக்கர் பாதிக்கப்படுவது குறித்து பொதுப்பணித்துறையினர் பரிசீலித்து உடன் எனக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார். பசமுத்தான் ஓடை விவசாய சங்க ரவீந்திரன் பேசுகையில், வேளாண் பொறியியல் துறை சார்பில் நமது மாவட்டத்திற்கு 40 பவர் டிரில்லர் வழங்கப்பட் டுள் ளது. ஆனால் விழுப்புரத்திற்கு 80ம், நாகைக்கு 70ம் வழங்கப் பட்டுள்ளது. தேவை அதிகம் உள்ள கடலூர் மாவட்டத்திற்கு மிகவும் குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டினார். உடன் கலெக்டர், கூடுதல் இயந்திரம் வழங்க வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மணல் திருடினால்... கலெக்டர் எச்சரிக்கை :  வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவர்களை கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் விவசாய மின் மோட்டார் கேபிள் அடிக்கடி திருடு போகிறது. இதனை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, கார்மாங்குடி வெங்கடேசன் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த கலெக்டர், அனுமதி இல்லதா இடங்களில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதாக புகார் செய்கிறீர்கள். நடவடிக்கை எடுத்தால் குறை கூறுகிறீர்கள். விவசாயிகள் தங்களுக்கு மணல் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துணை தாசில்தாரிடம் அனுமதி பெற்று தேவைக்கு மட்டும் மணல் எடுத்துக் கொள்ளலாம். அனுமதி சீட்டு இன்றி மணல் ஏற்றி வருவேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதேபோன்று விவசாய மின் மோட்டார் கேபிள் திருடுவோர் 12 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர். விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்றார். 

ரேஷன் கடைகளில் முறைகேடு: விற்பனையாளர்கள் இருவருக்கு சிறை

ரேஷன் கடையில் முறைகேடு செய்த விற்பனையாளர் இருவருக்கு தலா ஒரு ஆண்டு சிறையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர் கடந்த 97ம் ஆண்டு மஞ்சக்குப்பம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். 98ம் ஆண்டு இவரை இடம் மாற்றம் செய்தபோது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 532 ரூபாய் பொருள் இருப்பு குறைவு கண்டுபிடிக்கப்பட்டது.அதேபோன்று மஞ்சக்குப்பம் ரேஷன் மெயின் கடை எண்.1ல் பணிபுரிந்த விற்பனையாளர் கணேசன் தனது பணிக்காலத்தில் 44 ஆயிரத்து 489 ரூபாய் பொருள் இருப்பு குறைவு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 
இதுகுறித்து வணிகவியல் குற்றப்புலனாய்வு போலீசார், இருவர் மீது கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரமேஷ், விற்பனையாளர்கள் விஜயகுமார் மற்றும் கணேசனுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி: மேலும் இரண்டு தனிப்படை அமைப்பு

மாவட்டத்தில் தொடர்ந்து கை வரிசை காட்டி வரும் கொள்ளையர்களை பிடிக்க மேலும் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம் பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இரவு ரோந்து பணியும், வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.

இருப் பினும் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் புகுந்து தம்பதியினர்களை தாக்கி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்.பி., தலைமையில் அவசரக் கூட்டம் நடந்தது. அதில் டி.எஸ். பி.,க்கள், சிறப்புபடை, ரவுடி ஒழிப்பு படை மற் றும் டி.எஸ்.பி.,க்களின் கிரைம் பார்ட்டிகள் கலந்து கொண்டனர். தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக் டர்கள் சிங்காரவேல் மற் றும் குமரேசன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து கொள்ளையர் களை விரைந்து பிடிக்கவும், இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் எஸ்.பி., உத்தரவிட்டார்.

கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

கல்லூரி ஆசிரியர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் (படம்) இருந்தனர்.கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர்கள் சங்கம் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரதம் நடந்தது.கடலூர், விருத்தாசலம், திண்டிவனம், விழுப்புரம் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த உண்ணாவிரதத்துக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்க கடலூர் வட்டத் தலைவர் கவாஸ்கர் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் செயலர் சாந்தி முன்னிலை வகித்தார். சங்கப் பொருளர் சம்பத் தொடங்கி வைத்தார்.உண்ணாவிரதத்தை பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் என்.பாலகிருஷ்ணன் முடித்து வைத்துப் பேசினார். பாஸ்கரன் நன்றி கூறினார்.

போலீசார் அலட்சியப் போக்கினால் கடலூர் பகுதியில் தொடர் கொள்ளை

கடலூர் பகுதியில் போலீசாரின் அலட்சியம் காரணமாக தொடர் கொள்ளை அதிகரித்து வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகமூடிக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் கொள்ளையர்கள் புதுப்புது யுத்திகளை கையாண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 5 கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த 14ம் தேதி பெரியப்பட்டில் ரோலிங் ஷட்டர் பூட்டுகளை ஜாக்கி மூலம் உடைத்து 9 கடைகளில் திருட்டு நடந் துள்ளன. மறுநாள் முட்லூரில் 6 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை போனது. இரண்டு நாள் முன்பு நல்லாத்தூரில் அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து தி.மு.க., பிரமுகர் வீட் டில் கொள்ளையர்கள் புகுந்து 5 லட்சம்  பாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு கடலூர் ரட்சகர் நகரில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டை கொள்ளையடிக்க முயன்றனர். அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே தப்பி சென்றவர்கள் அரை கி.மீ., தூரத்தில் உள்ள  கோண்டூர் சுப்புலட்சுமி நகரில் கணவரை தாக்கி மனைவி கழுத்தில் இருந்த தாலிசரடை பறித்துச்சென்றனர்.  போலீசாரின் அலட்சியம் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

அமாவாசையன்று  திருட்டு அதிகமாக இருக்கும் என்பதால் வழக்கமாக போலீசார் மிகவும் உஷார் படுத்தப் பட்டு இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படுவதுடன், இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்படும். ஆனால் கடலூர் புதுநகரில் ஒன்னரை கி.மீ., ரேடியசில் பகுதியைக் கூட போலீசார் கண்காணிக்காமல் கோட்டை விட்டுள்ளனர்.சாதாரணமாக புது நகர் எஸ்.ஐ., கள்  தொலைபேசிகள் எப்போதும் "பிசி' யாகவே இருக்கும்.  பொதுமக்கள், பத்திரிகை நிருபர்கள்  ஏதாவது தகவல் சொல்ல நினைத்து போன் செய்தால்  கூட உடனே "கட்' செய்து விடுவர். பொது மக்களிடமிருந்து தகவல் பெறவே விரும்பாதவர்கள், எங்கே இருந்து சேவை செய்யப்போகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சுட்டு பிடிக்க போலீஸ் எஸ்.பி., உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டை தடுக்க, கொள்ளையர்களைக் கண்டால் சுட்டு பிடிக்க த்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.பி., கூறினார். கடலூர் கோண்டூரில் அமைக்கப்பட் டுள்ள போலீஸ் செக்போஸ்டை நேற்று மாலை எஸ்.பி.,  அஷ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமீப காலமாக திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. மாவட் டத்தில் சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுள்ளதால், வேறு வழியில் சம்பாதிக்க இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க 6 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் இனி துப்பாக்கி, வான்செய்தி கருவிகளுடன் சப் இன்ஸ் பெக்டர்கள் செயல்படுவர்.

பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக் டர்கள் தங்கள் நிலைய  பகுதியில் பெண்கள் குழுக்களை அமைப்பர்.  அக்குழுவினரிடம் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் போன் எண்கள் கொடுக்கப்பட்டு அன்னியர்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.முதல் கட்டமாக இன்று முதல் கடலூர், பண்ருட்டி சப் டிவிஷன்களில் இரண்டு ஜீப், நான்கு மோட்டார் சைக்கிள் களில் போலீசார் துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கி யுடன் நகரின் உட்பகுதி மற்றும் 2 கி.மீ., சுற்றளவில் உட் பகுதிக்கு ரோந்து செல்வர்.  24 மணி நேரமும் செயல்படும் இவர்கள், கொள்ளையர்க ளை கண்டால் சுட்டுப் பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெய்வேலி, சிதம்பரம் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். டி.எஸ்.பி.,க்கள் அலுவலகம் எண்கள். கடலூர் 04142-284355, சிதம்பரம் 04144-222257, விருத்தாசலம் 04143-238401, நெய்வேலி 04142-242022, சேத்தியாத் தோப்பு 04144-244341, பண்ருட்டி 04142-242022, திட்டக்குடி 04143-255211, காவல் கட்டுப்பாட்டு அறை 04142-284341 மற்றும் மாவட்ட தனிப்பிரிவு 04142-284333 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.

தலைமை பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு

விழுப்புரம்&மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டப் பணிகளை தலைமை பாது காப்பு ஆணையர் இன்றும், நாளையும் இறுதி கட்ட ஆய்வு செய்கிறார்.
விழுப்புரம்&மயிலாடு துறை 122 கி.மீ அகல ரயில்பாதை திட்டம் ரூ.186 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2007 ஜனவரி மாத்தில் தொடங் கிய பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும் நிலையில் உள்ளது. சிக்னல்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ரயில்வே கேட் பகுதிகளை ஒட்டி சாலைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
ரயில்வே தொழிட்நுட்ப வல்லுநகர்கள், தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் பலமுறை இந்த ரயில் பாதையில் ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தினர். குறைகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி சான்று அளித்த உடன் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷ்ணன் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்புத் துறை அறிவுறுத்திய அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புத்துறை தலைமை ஆணையர் சுதிர்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் சுதிர்குமார் விழுப்புரம்&மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் ஆய்வு நடத்துகிறார். இதற்காக அவர் தனி ரயிலில் இன்று விழுப்புரத்தில் இருந்து சிதம்பரம் வரையிலும் அடுத்த நாள் 17 ஆம் தேதி சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை வரையிலும் ஆய்வு நடத்துகிறார். ஆய்வு பணிகளின் போது ரயில்பாலங்கள், சிக்னல் தொழில்நுட்பங்கள், ரயில் திருப்பங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி உடனடியாக சான்று அளித்தால் இந்த மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் விழுப்புரம்&மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்போக்குவரத்து தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆய்வு பணி நடப்பதால் ரயில் பாதையில் பொதுமக்கள் நடக்க வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் போக்குவரத்து துவங்கும்

நெல்லிக்குப்பத்தில் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லையில் கடலூர் பண்ருட்டி சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் நடக்கிறது. பஸ்நிலையத்தின் உள்ளே பஸ்கள் சென்றுவர சிரமமாக உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் முக்கிய சாலையில் சர்வேயர் மூலம் அளக்கும் பணி நடந்தது. ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்களே அகற்றி கொள்ள வேண்டுமென தண்டோரா போட்டனர். பெரும்பான்மையானவர் கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ஆக்ரமிப்புகளை 
அகற்றப்பட்டன.கட்டட ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பணியாற்றினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அண்ணாமலைப் பல்கலை வகுப்புகள் துவங்கின

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில்  விடுமுறைக்குப்பின்  நேற்று  வகுப்புகள் துவங்கின.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு  மாணவர் கவுதம்குமார் (20) கடந்த  28ம் தேதி மோட்டார் பைக்கில் சென்றபோது லாரி மோதி காய மடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதில் ஆத்திர மடைந்த வெளி மாநில மாணவர்கள், மார்ச் 1ம் தேதி  இரவு ரகளையில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவர்களை தடியடி நடத்தி விரட்டினர். பயந்து ஓடிய மாணவர்கள் முத்தையா நகர் பாலமான் வாய்க்காலில் குதித்து தப்பிக்க முயன்ற போது  சுமித்குமார் (22), முகமது சர்பரேஸ் ராப் (22), ஆஷிஷ் ரஞ்சன் குமார் (20)  ஆகியோர் சேற்றில் மூழ்கி இறந்தார். இதனால் 

பல்கலைக்கழகத்தில் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க மருத்துவம் தவிர மற்ற பிரிவு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டது.
இந்நிலையில் நேற்று 11ம் தேதி  எம்.ஏ., எம்.எஸ்சி,. அனைத்து பாடப் பிரிவுகள்,   பி. எட், எம்.எட், பி.மியுசிக், எம்.மியுசிக், பி.எஸ்சி., விவசாயம் மற்றும் தோட்டக்கலை,. டி.பார்ம், பி.பார்ம், எம்.எஸ்.சி,.  ஐ.டி.,  ச
ப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ், பி.இ., எம்.இ., ஆகிய  பாடப்பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு  வகுப்புகள் துவங்கியது.

சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

பாதாள சாக்கடை திட்டப்பணியில் பழுதடைந்த கடலூர்-நெல்லிக் குப்பம் சாலையில் சீரமைப்பு பணியை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.கடலூரில் நெல்லிக்குப் பம் ரோட்டில் பாதாள சாக்கடை 
திட்ட பணியால் பழுதடைந்த சாலை சீரமைப்பு பணியை கலெக் டர் சீத்தாராமன் நேற்று துவக்கி வைத்தார்.பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:பாதாள சாக்கடை திட்டப்பணியில் பழுதடைந்துள்ள போடிச்செட்டித் தெரு, சஞ்சீவிநாயுடு தெரு, தேரடி தெரு, வெள் ளக்கரை-குமளங்குளம் சாலை, கடலூர்-சித்தூர் சாலைகள் 1கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. சீரமைப்பு பணிகள் (இன்று) நேற்று முதல் துவக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் வரும் மே 31ம் தேதிக்குள் முடிவடையும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், கமிஷனர் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கடலூர் நகரில் தரமில்லாமல் போடப்பட்ட சாலை உள்வாங்கியது

கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் போடப்பட்ட தார் சாலைகள் தரமில்லாமல் உள் வாங்கியுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைப்பணிகள் கடந்த 21.1.2007ம் தொடங்கப் பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்யப்படும் பணிகள் 31.12.2008ம் தேதி முடித்து நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் மேலும் ஒன்னரை ஆண்டுகள் கூடுதலாகியும் பணிகள் இதுவரை முடிவடையவில்லை. இதற்கிடையே நகர சாலைகள் சின்னபின்னமாகி கிடந்ததால் கடலூர் மக்கள் பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. தற்போபாது குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடைத்திட்டம் முடிக் கப்பட்ட 170 சாலைகளை நகராட்சி வசம் ஒப்படைத்துள்ளது. அதில் ஒரு சில பகுதிகளில் சாலைகள் போடப் பட்டுள்ளன. ஆனால் தரமில்லாமல் போடப் பட் டுள்ளதால் ஆங்காங்கே சாலைகள் பெயர்ந்தும், பாதாள சாக்கடைத்திட் டத் திற்காக தோண்டப்பட்ட பள்ளத் தில் உள்வாங்கியும் உள்ளன.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சின்னப்பன் வரவேற்றார். சென்னை ஆடிட்டர் வெங்கட்டரமணி சிறப்புரையாற்றினார். சந்தானராஜ், டாக்டர் சூசை ஜான் ரொசாரியோ, ஸ்ரீதர், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு தலைவர் ரவி உள்ளிட்ட   500 பேர் கலந்து கொண் டனர்.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ரட்சகர், பேராசிரியர்கள் ரொசாரியோ, சின்னப்பன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கிருஷ்டி, சந்தானராஜ் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கவுரவிக்கப் பட்டனர்.

பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் செம்மொழி விழா

கடலூர் பெரியார் கலைக்  கல்லூரி தமிழ்த்  துறை சார்பில்  தமிழ்செம் மொழி  விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் ரங்கநாதன்  தலைமை தாங்கினார். தமிழ்த் துறை தலைவர்  டாக்டர்  கொற்கைவேந்தன் முன்னிலை வகித் தார்.சிறப்பு விருந்தினராக  அய்யப்பன் எம்.எல்.ஏ., செம்மொழி விழாவை  துவக்கி வைத்து பேசினார்.

செம்மொழி விழாவில்  நடந்த கவிதை போட்டி,  ஓவியம், பாட்டுப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற  கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.நகர மன்ற தலைவர் தங்கராசு, துணைத் தலைவர்  தாமரைச் செல்வம், பேராசிரியர் அர்த்தநாரி,  நகர் மன்ற உறுப்பினர் கோவலன்,கோவிந்தசாமி உட்பட  பலர் பங்கேற்றனர்.

ஐ.ஐ.எம்., தேர்வில் மாணவர் சாதனை

ஐ.ஐ.எம்., நுழைவுத் தேர்வில் கடலூர் மாணவர் 99.7 சதவீதம் மதிப் பெண் பெற்று சாதனை படைத் துள்ளார்.இந்திய மேலாண்மை கழகம் நடத்திய நுழைத் தேர்வு 2009 இன் முடிவுகள் வெளியாகியுள்ளது. 2.10 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில் கடலூர் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் 99.7 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத் துள்ளார். இவரது தந்தை இந்தியன் பாங்கிலும், தாய் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர்.  ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் படித்த இந்த மாணவரை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணியக்கூடாது!

வடநாட்டு மாணவர்களின் அடாவடிக்காக கல்லூரியை மூடி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப் பாழாக்கக்கூடாது” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது. காலவரம்பின்றி மூடப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகை எண்ணிக்கையில் வடநாட்டு மாணவர்களை சேர்த்து வருகிறது. இது பல்கலைக்கழகத்தின் இன சமநிலையை சீர்குலைத்து தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
வகுப்பறையில் வடநாட்டு மாணவர்கள் ஹிந்தியை வலியுறுத்துவதாலும், ஒருங்கிணைந்த முறையில் அடாவடியில் ஈடுபடுவதாலும் கல்லூரி ஆசிரியர்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களும் எரிச்சலடைந்துள்ளனர். இவர்களின் அத்துமீறிய செயலால் மூன்று இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை காரணமாகக் கொண்டு கல்லூரியை பல்கலை நிர்வாகம் காலவரையின்றி மூடியிருக்கிறது. இது தேவையற்றது.
வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணிந்து அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை பல்கலை நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும். வகுப்புகள் தொடர்ந்து நடத்த வேண்டும். ஒரு சில வடநாட்டு மாணவர்கள் அடாவடிக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பு பாழாக்கப்படுவது முறையற்றது.
வரும் கல்வியாண்டில் 85 விழுக்காடு இடம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது.
இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையினை முழுமையாக படிக்க..

பிச்சாவரம் - கொடியம்பாளையம் இடையே ரூ.10 கோடியில் சிறப்பு பாலம்


கடலூர் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இத்தீவுகளுக்கு தரைவழி பயணம் கானல் நீரா கவே இருந்து வந்தது. தற்போது இதற்கு தீர்வு ஏற்படும் வகையில், தீவுகளுக்கு செல்லும் வழியில் உள்ள கடல் பகுதியிலும், ஆற்றுப்பகுதியிலும் உயர் மட்ட பாலங் களை அரசு அமைத்து வருகிறது. கடலூர் அருகே சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை கிராமங்களுக்கு முதலில் தரைவழி போக்குவரத்திற்கு பாலம் கட்டப்பட்டது. நொச்சிக்காடு பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வரு கிறது. இதன் வரிசையில் பிச்சாவரம்&கொடியம் பாளையம் இடையே உப்பனாற்றில் பாலம் கட்டும் பணி முடிந்துள்ளது.
இதன் மூலம் கொடியம்பாளையம், பழையாறு, வடக்கு பிச்சாவரம், தாண்டவராயன் சோழன் குப்பம் உள்ளிட்ட தீவுகளுக்கு தரை வழி போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீவில் வசிக்கும் சுமார் 25 கிராம மக்கள் பயன் பெற வழி காணப்பட்டுள்ளது. 140 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தின் அகலம் 8.5 மீட்டர். 7 தூண்கள் பாலத்திற்கு பலம் சேர்க்க அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.10.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி தொடங்கப்பட்டு கடந்த 28ம் தேதி முடிக்கப்பட்டுள்ளது. சுனாமி அவசர திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்பாட்டு துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதன் முறையாக கோள வடிவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் முதல் பகுதியை விட மைய பகுதி உயர்ந்து காணப்படும். இதனால் விசைப்படகுகள், சிறிய கப்பல்கள் தடையின்றி பாலத்தின் வழியாக பய ணிக்க முடியும். ஆரம்பத் தில் 4 மீட்டர் உயரத்தில் உள்ள பாலத்தின் அளவு நடு வில் 5.5 மீட்டர் உயரத்தில் முடிகிறது. மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள் மற்றும் தீவுகளை தரை வழி போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இணைத்து ஏற் படுத்தப்பட்டுள்ள பாலங்களில் இந்த சிறப்பு பாலம் முதன் முறையாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்திற்கு 6ம் தேதி வரும் துணை முதல்வர் ஸ்டாலின், இப்பாலத்தை திறந்து வைக்கிறார்.

கடலூர் மாணவிக்கு ​ இரு வெள்ளிப் பதக்கங்கள்

சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில்,​​ கடலூர் மாணவி ஆர்.அஜித்தாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.கடலூர் ஏ.ஆர்.எல்.எம்.​ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6-வது படிக்கும் மாணவி அஜித்தா.​ உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் காமன்வெல்த் யோகா போட்டி,​​ பிப்ரவரி ​ முதல் வாரத்தில் சிங்கப்பூரில் நடந்தது.இதில் அஜித்தா கலந்து கொண்டார்.​ யோகாசனப் போட்டிகளில் அவர் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.​ இதற்காக மாணவி அஜித்தாவுக்கு பாராட்டு விழா கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்தது.​ மாணவி அஜித்தாவை பாராட்டி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலாளரும்,​​ ஜூனியர் சேம்பர் முன்னாள் மண்டலத் தலைவருமான ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.அஜித்தாவுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியை பிரேமா முருகேசன் பாராட்டப்பட்டார்.​ ​நிகழ்ச்சிக்கு ஜூனியர் சேம்பர் தலைவர் என்.மனோகர் தலைமை வகித்தார்.​ கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.அகில இந்திய ரயில் நிலைய அலுவலர்கள் சங்க இணைச் செயலர் எம்.ராஜன் ​(அஜித்தாவின் தந்தை),​​ தென் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.​ ஜூனியர் சேம்பர் செயலர் சிவகுமார் நன்றி கூறினார்.

சில்வர் பீச்சை சுத்தம் செய்த ​ கடலூர் திரைப்பட இயக்கத்தினர்

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சை,​​ கடலூர் திரைப்பட இயக்கத்தினர் புதன்கிழமை சுத்தம் செய்தனர்.கோடைகாலம் தொடங்கி விட்டதால் கடலூர் சில்வர் பீச்சுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.​ மேலும் கடந்த ஞாயிறுக்கிழமை மாசிமகம் திருவிழா சில்வர் பீச் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நடந்தது.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடினர்.​ இதனால் கடற்கரை முழுவதும் பாலித்தீன் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகள் நிறைந்து காணப்பட்டன.குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.​ இதைத் தொடர்ந்து கடலூர் திரைப்பட இயக்கத்தினர் புதன்கிழமை சில்வர் பீச்சில் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கினர்.இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் திரைப்பட இயக்கச் செயலர் சாமி கச்சிராயர் தலைமை வகித்தார்.​ இயக்குநர் தமிழாதரன்,​​ உதவி இயக்குநர் ​ தமிழ்ச் சான்றோன்,​​ ​ செயற்குழு உறுப்பினர்கள் ரஞ்சனி,​​ காத்தமுத்து தட்சிமாமூர்த்தி,​​ சிவா,​​ பிரசாத் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து அவர்கள் பேசுகையில்,​​ கடலூர் சில்வர் பீச்சுக்கு திரைப்படம் ஒன்றிற்கான கலந்துரையாடலுக்காக வந்தோம்.​ ஆனால் இங்கு குப்பைகள் நிறைந்து மிக மோசமாகக் காட்சி அளித்தது சில்வர் பீச்.எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த,​​ துப்புரவுப் பணியில் ஈடுபட்டோம் என்றும் தெரிவித்தனர்.

ரூ.200 கோடி செலவில் திட்டம் ​ திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவுகளை கடலூர் கடலில் கலக்க எதிர்ப்பு

ரூ.200 கோடி செலவில்,​​ திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளை கடலூர் கடலில் கலக்க முடிவு செய்து இருப்பதற்கு,​​ கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.​ ​​ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் புதன்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:​ ​​ மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் திருப்பூர் சாயப்பட்றைக் கழிவுகளை சுத்திகரிப்பதற்கு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.​ கழிவுநீரைச் சுத்திகரிக்க ரூ.200 கோடி ஒதுக்கியதற்கு ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறனுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.​ ​ ​ ஆனால் அந்தக் கழிவுகளை அகற்றும் இடமாகக் கடலூரைத் தேர்ந்து எடுத்ததற்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.​ ​​ கடலூரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஏற்கெனவே கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.​ புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் 20 பேரில் ஒருவர் கடலூரைச் சேர்ந்தவராக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.​​ ​ புளோரோஸிஸ் என்ற பல் மற்றும் எலும்பு வியாதி தமிழகத்தில்,​​ கடலூரில்தான் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.​ கடலூர் மக்கள் சுவாசிக்கும் காற்று மற்ற பகுதிகளைவிட 5 மடங்கு மாசுபட்டு இருக்கிறது.​ ​​ தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட நகரங்களில்,​​ தண்ணீர் காரத் தன்மையாக மாறியிருக்கும் அல்லது அமிலத் தன்மையாக மாறியிருக்கும்.​ ஆனால் கடலூரில் காரத் தன்மையும்,​​ அமிலத் தன்மையும் காணப்படுவது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.​ ​ ​​ ​ அதற்கு ரசாயன ஆலைகளே காரணம்.​ பல தொழிற்சாலைகள் தங்களது சுத்திகரிக்க முடியாத ரசாயனத் திரவக் கழிவுகளை நிலத்தில் ரகசியமாக ஆழ்குழாய்க கிணறுகள் அமைத்து,​​ பூமிக்குள் செலுத்துகின்றன.​​ ​ இந்த நிலையில் கடலூரில் மிகப்பெரும் ஜவுளிப் பூங்கா அமைய இருக்கிறது.​ திருப்பூர் மற்றும் கோவைப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் துணிகளைக் கடலூருக்குக் கொண்டு வந்து,​​ ரசாயனங்களைக் கொண்டு பதப்படுத்துதல்,​​ சாயம் தோய்த்தல் உள்ளிட்ட பணிகளை மட்டும் கடலூர் ஜவுளிப் பூங்காவல் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதைக் கண்டிக்கிறோம்.​​ ​ இப்பணிக்காகத் தான் மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.​ ​ இப்போதே கடலூரில் 30 கி.மீ.​ நீளத்துக்கு கடலில் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.​ சாயப் பட்டறைக் கழிவுகளையும் கடலில் கொட்டினால் விளைவுகள் மிகவும் மோசமாகும் என்றும் மனுவில் மருதவாணன் கேட்டுக் கொண்டு உள்ளார்.

கடலூர் வந்த கத்தாரின் 'நார்கஸ் சேலஞ்சர்' கப்பல்

பிப்.23 (டிஎன்எஸ்)  கத்தாரிலிருந்து, 'காஸ்' ஏற்றி புறப்பட்ட 'நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், கடலூர் வந்தது.

கடலூர் அடுத்த சிப்காட் வளாகத்தில் கெம்ப்ளாஸ்ட் கம்பெனி உள்ளது. இக்கம்பனிக்கு தேவையான மூலப்பொருள், 'வினைல் குளோரைடு மோனோமர்' 6,000 டன் காஸ், கத்தார் நாட்டிலிருந்து ஏற்றி புறப்பட்ட 'நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், நேற்று முன்தினம் (பிப்.21) கடலூர் வந்தடைந்தது.

இந்த கப்பல் மூலப்பொருட்களை இறக்கியபின், நேற்று காலை (பிப்.22)  கத்தார் நாட்டிற்கு பயணமானது.

பிப்.27ஆம் தேதி மேலும் ஒரு கப்பல் காஸ் ஏற்றிக் கொண்டு கடலூர் வருகிறது. (டிஎன்எஸ்)

கடலூரில் காட்டுத்தீ

கடலூரில் உள்ள தாவர மரபியல் பூங்காவில் இன்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கடலூர் பகுதியில் கடுமையான வெயில் அடித்து வருவதால் காய்ந்த புல்வெளிகள் உள்ள இடத்தில் தீப்பிடித்து அது காடு முழுவதும் பரவியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனினும், காட்டுத்தீ பிடித்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பதை வனத்துறையினர் வெளியிடவில்லை.
பல ஏக்கர் பரப்பளவில் உள்ள புல்வெளி பற்றி எரிவதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

இரு மாணவர்களை காணவில்லை : தீயணைப்பு வீரர்கள் தேடுதல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர் கள் இருவரை காணவில்லை என்ற தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் நேற்றிரவு பாலமான் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன் ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதம்குமார் (20) நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் அவர் அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சகமாணவர்கள் பல்கலை தேர்வுத்துறை அலுவலகம், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, அங்கு நின்றிருந்த வாகனங்களை உடைத்தனர். அவர்களை போலீசார் விரட்டினர்.அதில் மாணவர்கள் பலர் அருகில் உள்ள பாலமான் ஆற்றில் குதித்து தப்பினர். அவர்களில்  இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் சுமித்குமார் (22) இறந்தார். இந்த சம்பவங்களினால் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டியதில் ஆற்றில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என்ற தகவல் நேற்று மாலை பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு தீயணைப்பு படையினர் பாலமான் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதனால் பல்கலை பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்: துணைவேந்தர் விளக்கம்

"விபத்தில் காயமடைந்த மாணவருக்கு, அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது; அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்' என துணைவேந்தர் ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விபத்தில் காயமடைந்த கவுதம்குமாருக்கு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், உடல்நிலை மோசமானதால், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவு 12.15 மணிக்கு 400 மாணவர்கள், "மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பேச வேண்டும்' என, எனது பங்களா செக்யூரிட்டியிடம் கேட்டனர். "காலையில் பேசலாம்' என செக்யூரிட்டி கூறியதையடுத்து, சமாதானமாகி சென்று விட்டனர். மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரி சண்முகத்திடம், சிகிச்சை குறித்து சான்று பெற்று, காலையில் மாணவர்களை சந்தித்து பேசலாம் என முடிவெடுத்திருந்தோம். இதற்கிடையே நிர்வாக அலுவலகம் நோக்கி சென்ற மாணவர்கள், தேர்வுத் துறை அலுவலகம் மற்றும் மருத்துவமனை கட்டடத்தின் கண்ணாடிகளையும், வாகனங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை உடைத்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த போலீசார், மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மாணவர் ஒருவர் பாலமான் ஓடையில் விழுந்து இறந்து விட்டதாக, உடலை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார், விசாரித்து வருகின்றனர். விடுதியை தவிர்த்து வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான், வேண்டுமென்றே பிரச்னையை தூண்டி விடுகின்றனர். கடந்த ஆண்டும், இதே போன்று பிரச்னை செய்தனர்; அவர்கள் யார் என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதியில் அனைத்து மாணவர்களும் தங்குவதற்கு, போதுமான வசதி இல்லை. பெண்கள் அனைவருக்கும் இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், 60 சதவீத மாணவர்கள் மட்டுமே, தங்கக்கூடிய நிலை உள்ளது. புதிய விடுதி கட்டடம் கட்டப்படுவதால், அடுத்த ஆண்டு முதல், மாணவர்கள் அனைவரும் தங்க வைக்கப்படுவர். வெளியில் தங்கியுள்ள மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு பகுதியிலும் பகுதி அதிகாரி நியமிக்கப்பட உள்ளனர். மாணவர்கள் தங்கியுள்ள வீட்டு உரிமையாளர்கள் யார், வீடுகள், விடுதிகள் பற்றிய விவரங்கள், எங்கு செல்கின்றனர் என கண்காணிப்படும். இவ்வாறு ராமநாதன் கூறினார்.

ஆற்றில் விழுந்த மற்றொரு மாணவரும் சாவு

சிதம்பரத்தில்,​​ வடமாநில மாணவர் ஒருவர் விபத்தில் இறந்ததை அடுத்து அண்ணாமலை பல்கலை.​ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ​ மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.​ போலீஸôர் அவர்களை விரட்டியடித்த போது ​ ஆற்றில் விழுந்து மற்றொரு வடமாநில மாணவர் இறந்தார்.பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌதம்குமார் ​(20).​ இவர் சிதம்பரம் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள காம்ப்ளக்ஸில் தங்கி பி.இ.​ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்,​​ இதே மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ்குமாருடன் ​(20) ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றார்.​ சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் மின்கம்பத்தின் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.அப்போது பின்புறம் வந்த லாரி கௌதம்குமார் மீது ஏறியது.இதில் படுகாயமடைந்த கௌதம்குமார்,​​ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.மாணவர் இறந்த தகவலை அடுத்து வடமாநில மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,​​ தேர்வுத்துறை கட்டடம் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகள்,​​ கம்ப்யூட்டர்,​​ மின்விளக்குகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.மருத்துவமனைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் அங்குள்ள நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்து ஓடினர்.​ பின்னர் துணைவேந்தர் விடுதியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.அப்போது அங்கு வந்த போலீஸôர் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர்.​ அதில் தப்பி ஓடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சுமித்குமார் ​(22),​ பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தார்.இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் மேலும் பதற்றம் உருவானது.​ மாணவர்கள் அதிவேகத் தாக்குதலில் ஆட்டோ,​​ ஆம்புலன்ஸ்,​​ வேன்,​​ முதுநிலை மருத்துவ மாணவர்களின் கார்கள் சேதமடைந்தன.தகவல் அறிந்த டிஐஜி மாசானமுத்து,​​ கடலூர் மாவட்ட எஸ்.பி.​ அஸ்வின் கோட்னீஷ் மற்றும் அதிரடிப்படை போலீஸôர் பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் ரகளையில் ஈடுபட்ட 21 வடமாநில மாணவர்களை பிடித்து விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர்.பின்னர் ஐஜி துரைராஜ்,​​ டிஐஜிக்கள் மாசானமுத்து ​(விழுப்புரம்),​​ ராமசுப்பிரமணியம் ​(காஞ்சிபுரம்)​ ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைநகருக்கு வந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

ரசாயன ஆலைக்கழிவுகளால் தோல் நோய்?

கட​லூர் உப்​ப​னாற்றில் மீன்பிடித்த மீனவர் சண்முகம் தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.​ அவர் இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.கடலூர் உப்பனாற்றில் சிப்காட் தொழிற்சாலைகளின் மோசமான ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதாக,​​ பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் தொழிற்சாலைகள் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.​ சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை கடலில் கலப்பதாகத் தெரிவித்து வருகின்றன.​ மாசுக்கட்டுப்பாடு வாரியமும் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் உப்பனாற்றின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு உள்படுத்துவதும்,​​ அதன்பிறகு ஓசையின்றிப் போவதும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது.குற்றச்சாட்டுகள் மக்களிடம் இருந்து வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும்,​​ ஆய்வின் முடிவுகளையோ,​​ அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையோ மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளிப்படையாகத் தெரிவித்தது இல்லை.உப்பனாற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதற்கு ஆதாரமான நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது.​ கடலூரை அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வி.சண்முகம் ​(40).​ கடந்த பிப்ரவரி 26-ம் தேதி காலை 10 மணிக்கு,​​ சிப்காட் தொழிற்சாலைகளுக்குப் பின்புறம் உள்ள உப்பனாற்றில் சிறிய படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்.வலை உப்பனாறின் உள்ளே சிக்கிக் கொண்டது.​ அதை எடுப்பதற்காக உப்பனாற்று நீரில் கழுத்தளவுக்கு மூழ்கியபோது,​​ தோலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டது.​ வீடு திரும்பியதும் எரிச்சல் அதிகரித்தது.சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டன.​ எனவே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து,​​ ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.எனினும் அவருக்கு தொடர்ந்து அரிப்பும்,​​ உடல் நலம் பாதிப்பும் இருப்பதால்,​​ தோல்நோய் நிபுணரிடம் காண்பிக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.இது குறித்து புகார் மனு ஒன்றை சண்முகம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனிடம் அளித்தார்.​ உடலில் பல இடங்களில் வடுக்கள் இருப்பதையும் ​ காண்பித்தார்.கடலூர் உப்பனாற்றில் மீன்பிடிக்கும்போது அடிக்கடி,​​ இத்தகைய ​ நிலை ஏற்படுவதாகவும் சண்முகம் தெரிவித்தார்.​ மீனவர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பழநிவேல்,​​ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அருள்செல்வம்,​​ புகழேந்தி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

கடலூரில் கடும் மூடுபனி

கடலூரில் திங்கள்கிழமை காலை கடும் மூடுபனி காணப்பட்டது.​ ​கோடைகாலம் தொடங்கி விட்டது.​ எனினும் வழக்கத்துக்கு மாறாக பனிக் காலம் ​ மார்ச் மாதம் வரை நீடித்து வருகிறது.​ பகல் நேரத்தில் கடுமையான வெயிலும்,​​ பின் இரவில் பலத்த குளிரும் நிலவி வருகிறது.இந்நிலையில் திங்கள்கிழமை காலை வெகுநேரம் வரை பனி நீடித்தது.​ காலை 6 மணிக்கெல்லாம் சாலைகளில் 50 அடி தொலைவில் வரும் வாகனங்களைக் கூட பார்க்க முடியவில்லை.​ குளிரும் கடுமையாக இருந்தது.காலை 7-30 மணி வரை சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன.​ 7-30 மணிக்குப் பிறகே சூரியன் தனது முகத்தை மெல்லக் காண்பித்தது.​ அதைத் தொடர்ந்து பனி விலகத் தொடங்கியது