தமிழகத்தில் சாலை வரி செலுத்தாத புதுச்சேரி பதிவெண் கொண்ட கார் களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தை விட புதுச் சேரியில் வாகனங்கள் விலை குறைவாக இருப்பதால் தமிழக எல்லையோர கிராம மக்கள் இதை பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. நாற்பதாயிரம்ரூபாய் மதிப் புள்ள டூ விலர் வாங்குவோருக்கு 4000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. புதுச்சேரியின் எல்லையோரத்தில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்ட சில கிராம மக்கள் புதுச்சேரியில் கொடுக்கல் வாங்கல், பெண் எடுப்பது போன்ற வற்றில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அங்குள்ள வாகனங்களை தமிழக பகுதிகளில் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
மேலும் புதுச்சேரி எல்லையோர கிராம மக்கள் போலியான முகவரி கொடுத்து வாகனங் களை வாங்கி அதை தமிழக பகுதிகளில் ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் சாலை வரி செலுத்திவிட்டு தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட் டங்களில் ஓட்டி சாலையை தேய்ப்பது சரியானதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொ ருட்டு புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங் கள் தமிழக பகுதியில் ஓட்ட தனியாக சாலை வரி செலுத்த அறிவுறுத்தப் பட்டது.
உண்மையான முகவரியில் வாங்கப்பட்ட வாகனங்களாக இருந்தால் ஆர். சி.புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை புதுச்சேரியில் வாங்கி இருக்க வேண்டும். கடலூரில் ஓட்டுனர் உரிமம் பெற்று புதுச்சேரி வாகன பதிவெண் கொண்ட டூ வீலர்களை ஓட்டினால் அது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. அவ்வாறு விதிமுறை மீறி தமிழகத்தில் ஓட்டும் வாகனங் கள் சோதனை செய்யப் பட்டு உடனுக்குடன் சாலை வரி செலுத்துமாறு பணிக்கப்படுகின்றனர்.
அதைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் தினம் தினம் கடலூர்-புதுச்சேரி மாவட்ட எல்லையில் வாகன சோதனை செய்து வருகின்றனர். கடலூரில் மட்டும் இதுவரை 1000த் திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் சோதனை செய்து பிடித்துள்ளனர்.
சோதனை செய்யும் சில போலீசார் வழக்குபோடமல் இருக்க சாலைவரி கட்டணத்தில் பாதித்தொகையை கேட்கின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்தி வருகின்றனர். வாகனம் வாங்கும் தொகையில் 8 சதவீதம் சாலைவரியாக செலுத்த வேண்டும். இவையெல்லாம் டூ வீலர் கள் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் அதிகாரிகள் கார்களை சோதனை செய்து பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதை விட அரசுக்கு அதிக வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க கார்களை பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர். கடலூர் மாவட் டத்தில் இதுவரை 4 பழைய வாகனங்களை மட்டுமே பிடித்துள்ளனர். அரசுக்கு கார்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டக்கூடியதாக இருந்தும் அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என புரியாத புதிராக உள்ளது.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
போக்குவரத்துத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரி பதிவு எண் வாகனங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் ரூ.7 லட்சம் வசூல்
கடலூர் மாவட்டத்தில் 237 புதுச்சேரி மாநில பதிவு எண் வாகனங்கள் பிடிபட்டதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
போக்குவரத்துத்துறை,
போலீஸ்
கடலூர் நகருக்கு புறவழிச்சாலை அவசியம்! : குறுகிய தூரத்தை கடக்க 4 சிக்னல்கள்
கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தொலைநோக்கு பார்வையோடு புறவழிச் சாலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதாலும், ஒரே இடத்தில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் கூட்டம் லாரன்ஸ் ரோடில் குவிகின்றன. பஸ் நிலையம் பின்பகுதியில் ரயில்வே மேம்பாலம் திறந்துவிடப்பட்டாலும் மக்கள் பயன்பாடு குறைவாகவே உள்ளது. தற் போது எதிர்வரும் பொங் கல் பண்டிகையின்போது ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அதோ என இழுத் துக் கொண்டு வரும் சுரங்கப்பாதைப் பணியும் துவங்குவதற்கான சாத்தியகூறுகள் குறைவாக உள்ளன. அவ்வாறு ரயில் போக்குவரத்து துவங்கப்படுமாயின் ரயில்வே கேட் மூடி திறக்கும்போது "டிராபிக் ஜாம்' தவிர்க்க முடியாததாகிவிடும்.
ஒரு சில வியாபாரிகள் சுயநல நோக்கத்திற்காக எல்லா திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு லாரன்ஸ் ரோடில் மக்கள் கூட்டத்தை தக்கவைத்துக் கொண்டு வருகின்றனர். இதனால் பஸ் நிலையம் 2 ஆக பிரிக்கும் எண்ணம் கூட கைவிடப்பட்டது.
ஏற்கனவே லாரன்ஸ் ரோடில் வாகனங்கள் நிறுத்தவும், பிளாட்பாரத்தில் நடந்து செல்லவும் மக்கள் படாதபாடு படும் நிலையில் ரயில் வருகையால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனம் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து 1.5 கி.மீ., தூரத்தை கடக்க பிள்ளையார்கோவில், போஸ்ட் ஆபீஸ், உட்லண்ட்ஸ், அண்ணாபாலம் ஆகிய சிக் னலை கடக்க வேண்டியுள்ளது. "பீக் அவரில்' வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை உள்ளது.
கடலூர் சிப்காட்டில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கெம்ப்ளாஸ்ட், துவங்கப்படவுள்ள நாகர் ஜூனா, பவர்பிளான்ட் போன்ற கம்பெனிகள் விரைவில் கால்பதிக்கப்படவுள்ளன. ஐயாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய இக்கம்பெனிகளில் உற்பத்தி செய்யும் பொருட்களை சாலை வழியாகத்தான் கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்ல வேண்டும். அதற்கு தக்க சாலை வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
சாதாரணமாக சிறிய நகரங்களில் கூட புறவழிச்சாலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இக்காலகட்டத் தில் கடலூர் நகருக்கு புறவழிச் சாலை இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சிதம்பரம், சீர்காழி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் போன்ற நகரங்களில் புறவழிச்சாலைகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடலூர் நகருக்கு இதுவரை புறவழிச்சாலை திட்டத்தை துவங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
செம்மண்டலம் பகுதியில் பிரியும் சாலை கம்மியம்பேட்டை பாலம் கட்டப்பட்டும் சாலை பணிகள் நிறைவேற்றப்படாததால் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது. எனவே திருப்பாபுலியூர் ரயில்வே மேம்பாலம் எதிரெ உள்ள சாலையில் துவங்கி நத்தவெளி சாலை அருகே ஒரு புதிய புறவழிச்சாலை அமைக்க அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங் பேடி முயற்சி மேற்கொண் டார். அந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் கடலூர் நகருக்குள் வராமலேயே வாகனங்கள் கடலூரை கடக்க முடியும்.
அண்மையில் மேல்மருவத்தூர் பங்காருஅடிகளார் நடத்திய பிரம்மாண்ட பேரணியில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதில் பல மணிநேரம் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. எனவே கடலூர் நகருக்கு புறவழிச்சாலை திட்டப்பணியை விரைந்து நிறைவேற்றிட அதிகாரிகள் இப்போதே முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

புறவழிச்சாலை,
போக்குவரத்துத்துறை
தகுதி சான்று பெறாத 18 பள்ளி வாகனங்கள் : அதிகாரிகளின் சோதனையில் அம்பலம்
மாவட்டத்தில் 18 பள்ளி வாகனங்கள் தகுதி சான்றிதழ் பெறாமலே ஓட்டியிருப்பது அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.கடலூர் அடுத்த பெரியப்பட்டு மற்றும் வேதாரண்யத்தில் பள்ளி வாகனங்கள் விபத்திற்கு உள் ளான சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கப்படுகிறதா என சோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.அதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் போலீஸ், வருவாய் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக தற்போது பள்ளி வாகனங்களில் ஓட்டுனராய் பணியாற்றுபவர் 10 ஆண்டுகள் அனுபவமுள்ளவரா என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது.
இதுவரை மாவட் டத்தில் 977 பள்ளி வாகனங் கள் சோதனை செய்யப் பட்டன. இவற்றில் அதிக குழந்தைகள் ஏற்றி சென்ற வாகனங்கள் 113, ஓட்டுனர் உரிமமின்றி இயக்கப்பட்ட வாகனங்கள் 16, அனுமதியின்றி இயக்கிய வாகனங் கள் 16, தகுதி சான்று பெறாமல் இயக்கிய வாகனங்கள் 18 கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.
கட்டுகள்
பள்ளி வாகனங்கள்,
போக்குவரத்துத்துறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)