திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காததால் பயணிகள் கவலையடைந்துள்ளனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் இயக்கப்பட்ட சோழன் விரைவு ரயில் தற்போது மீண்டும் இயக் கப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூரில் ரயில் நிலையம் வழியாக பகல் 12.30 மணிக்கு கடக்கும் இந்த ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகளுக்கு ஏமாற் றத்தை அளித்துள்ளது. ஆனால் முதுநகர் ஜங்ஷனில் மட்டும் நின்று செல்கின்றன.கடலூர் புதுநகரில் இருந்து தான் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்வது வழக்கம். இங்கிருந்து முதுநகருக்கு 40 ரூபாய் கொடுத்து ஆட்டோ பிடித்து செல்வதால் கூடுதல் கட்டணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் ரயில் பயணம் செய்ய விரும்புவதில்லை.
அதேப்போல ராமேஸ் வரம் - புவனேஸ்வர் (எண் 8495), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 4260), ராமேஸ்வரம் - புவனேஸ் வர்(எண் 4259), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 8496) ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத் தும் விழுப்புரம் ஜங்ஷனுக்கு பிறகு மயிலாடுதுறையில் மட்டுமே நின்று செல்கின்றன.
திருப்பாதிரிப்புலியூரை கடந்து செல்லும் ரயில்கள் மாவட்ட தலைநகரில் நிற்காமல் செல்வதால் கடலூர் பயணிகள் செல்ல முடியாமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் ரயில்வே துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாயை இழந்து வருகிறது. எனவே கடலூரை கடந்து செல்லும் ரயில்கள் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே இலாகா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
ரயில் போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரயில் போக்குவரத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில்
பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கும் வசதி பெட்டிகள் அதிகமாக உள்ளது. ஆனால் இரண் டாம் வகுப்புக்கு உட்காரும் வசதிக்கு முன்பதிவு இல்லாததால் பயணிகள் அவதி அடைகின்றனர்.
சென்னை & திருச்சி இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக சோழன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினசரி காலை சென்னை எழும்பூரில் 8.20க்கு புறப்படும் இந்த ரயில், மாலை 4.35க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்சியில் காலை 9.10க்கு புறப்படும் ரயில் மாலை 5.45க்கு சென் னையை வந்தடைகிறது.
ஆனால் இதன் முன்பதி வால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்புக்கான உட்கார்ந்து செல்லும் சீட்டுகளுக்கு முன்பதிவு இல்லை. அதற்கு மாறாக 10 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கே முன்பதிவு (பர்த்கோச்) உள்ளது. பொது வாக பகல் நேர ரயில்களில் பெரும்பாலான பயணிகள் தூங்க மாட்டார்கள். ஆனால் இந்த ரயிலில் 10 பெட்டிகள் தூங்கும் வசதியாக இருப்பதால் இந்த பெட்டிகளுக்கான முன்பதிவு, மற்றும் பய ணத்தை யாரும் விரும்பவில்லை.
அதற்கு மாறாக பயணி கள் அதிகம் விரும்பும் இரண்டாம் வகுப்பு உட் காரும் வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட பெட்டிகளை அதிக அளவில் இணைத்தால் பயணிகளுக்கு உதவியாக இருப்பதோடு, ரயில்வே நிர்வாகத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பயணிகள் அவதி
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
கடலூர்,
ரயில் போக்குவரத்து
மாணவர்களுக்கு வசதியாக ரயில்களை இயக்கக் கோரிக்கை
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வசதியாக பாசஞ்சர் ரயில்களின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று, ரயில்வே இலாகாவுக்குத் தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ரயில்வே பொது மேலாளருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்,
கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
நிற்காமல் செல்வது பயணிகளை பெரிதும் பாதிக்கிறது. துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் சென்று எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பிடிப்பது மக்களுக்குச்
சாத்தியமாக இல்லை. இதனால் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின்
வருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.÷50 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து எக்ஸ்பிஸ் ரயில்களும் நிற்கும் ரயில் நிலையமாக இருந்து
வந்துள்ளது திருப்பாப்புலியூர். திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில்,
திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றுவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும், தினமும் சென்னை செல்லும் பயணிகளுக்கும், திருப்பாப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காதது பெருத்த ஏமாற்றமாக உள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு வசதியாக, விழுப்புரம் மயிலாடுதுறை இடையே முன்பு காலையில் 2 ரயில்களும் மாலையில் 2 ரயில்களும்
இயக்கப்பட்டன. தற்போது காலை, மாலை தலா ஒரு ரயில் மட்டுமே
இயக்கப்படுவது மாணவர்களுக்கும் அலவலகம் செல்வோருக்கும்
போதுமானதாக இல்லை. ரயில்களின் இயக்க நேரங்களும் ஏற்றதாக இல்லை. எனவே கூடுதலாக இரு பாசஞ்சர் ரயில்களை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்றும் சிவகுமார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்,
ரயில் போக்குவரத்து
ரயில்வே சுரங்கப்பாதை கோரி கடலூர் பொதுநல அமைப்புகள் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம்
கடலூர் லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடலூர் பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கை. ரயில்வே மேம்பாலத் திட்டத்துடன், சுரங்கப்பாதை திட்டமும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டும் திட்டம் நிறைவேறவில்லை. வரும் 15-ம் தேதி முதல் விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்ககப்படுகிறது. எனவே ரயில்கள் இயங்கத் தொடங்கியதும் லாரன்ஸ் சாலையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும். அதனால் சுரங்கப்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கடலூர் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ரயில்வே துறையில் இருந்து முறையான தகவல்கள் வெளியாகாததால் ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன், 6-4-2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கடலூர் பொது நல அமைப்புகள் அறிவித்து இருந்தன. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பஸ்கள் மற்றும் கார்களில் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று காலை 6 மணிக்கு கடலூரில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்கிறார்கள் என்று பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் ஆகியோர் தெரிவித்தனர்.
கட்டுகள்
கடலூர்,
சுரங்கப்பாதை,
பொதுநல அமைப்புகள்,
ரயில் போக்குவரத்து
விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதையில் அனைத்து ரயில்களையும் இயக்க கோரிக்கை
விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில், ஏற்கெனவே மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் வெள்ளிக்கிழமை தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு, ஏப்ரல் 15-ம் தேதி முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட இருப்பதாக அறிகிறோம்.இந்த மார்க்கத்தில் சென்னையில் இருந்து கடலூர் வழியாக, 12 ரயில்கள் இயக்கப் பட்டன. தற்போது, இப்பாதையில் இரு பாசஞ்சர் ரயில்களும் (விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே மட்டும்) மற்றும் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாரம் ஒரு முறை மட்டும் இயக்க, தென்னக ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக அறிகிறோம். இது கடலூர் மாவட்ட மக்களுக்கு பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாகும்.÷எனவே மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கும், கடலூரில் இருந்து கோவை மற்றும் வேலூருக் கும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் நிற்கும் என்ற அறிவிப்பு கண்டனத்துக்கு உரியது. சரித்திர முக்கியத்துவம் கருதி, கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தை மாதிரி ரயில் நிலையமாக மேம்படுத்த வேண்டும்.கணினி பதிவு மையம் காலை 8 மணி முதல் 14 மணி நேரம் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு லாரன்ஸ் சாலை முதல், கம்மியம்பேட்டை ரயில்வே கேட் வரை, ரயில்வே லைன் ஓரமாக அகல நடைபாதை அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
ரயில் போக்குவரத்து
தலைமை பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு
விழுப்புரம்&மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டப் பணிகளை தலைமை பாது காப்பு ஆணையர் இன்றும், நாளையும் இறுதி கட்ட ஆய்வு செய்கிறார்.
விழுப்புரம்&மயிலாடு துறை 122 கி.மீ அகல ரயில்பாதை திட்டம் ரூ.186 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2007 ஜனவரி மாத்தில் தொடங் கிய பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும் நிலையில் உள்ளது. சிக்னல்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ரயில்வே கேட் பகுதிகளை ஒட்டி சாலைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
ரயில்வே தொழிட்நுட்ப வல்லுநகர்கள், தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் பலமுறை இந்த ரயில் பாதையில் ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தினர். குறைகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி சான்று அளித்த உடன் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷ்ணன் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்புத் துறை அறிவுறுத்திய அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புத்துறை தலைமை ஆணையர் சுதிர்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் சுதிர்குமார் விழுப்புரம்&மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் ஆய்வு நடத்துகிறார். இதற்காக அவர் தனி ரயிலில் இன்று விழுப்புரத்தில் இருந்து சிதம்பரம் வரையிலும் அடுத்த நாள் 17 ஆம் தேதி சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை வரையிலும் ஆய்வு நடத்துகிறார். ஆய்வு பணிகளின் போது ரயில்பாலங்கள், சிக்னல் தொழில்நுட்பங்கள், ரயில் திருப்பங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி உடனடியாக சான்று அளித்தால் இந்த மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் விழுப்புரம்&மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்போக்குவரத்து தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆய்வு பணி நடப்பதால் ரயில் பாதையில் பொதுமக்கள் நடக்க வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் போக்குவரத்து துவங்கும்
கட்டுகள்
கடலூர்,
ரயில் போக்குவரத்து
அகல பாதையில் முடிக்கப்பட்ட பணிகளில் 90 சதவீதம் திருப்தி: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு பேட்டி
அகல ரயில்பாதையில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளில் 90 சதவீதம் திருப்தியாக உள்ளது என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு கூறினார்.
மயிலாடுதுறை-விழுப்புரம் இடையிலான 122 கி.மீ., அகல ரயில்பாதைப்பணி முடியும் தருவாயில் உள்ளது. இதனை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு இரண்டு நாள் ஆய்வு பணி மேற் கொண்டார். இறுதி நாளான நேற்று காலை கிள்ளை ரயில் நிலையத்தில் ஆய்வை துவக்கினார். அவருடன் தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் டிராலியில் ஆலப்பாக்கம், கேப்பர் குவாரி வழியாக பிற்பகல் கடலூர் முதுநகர் வந்தடைந்தனர்.
அப்போது தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:இன்று காலை கிள்ளையில் துவங்கி வரும் வழியில் ஆர்.வி.என்.எல்., செய்து வரும் பணிகளான ரயில் பாதை, பிளாட்பாரங்கள், கட்டட பணிகள், கிராசிங் பாயின்ட்கள், சிக்னல்கள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டோம். முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டுமானால் நாளொன்றுக்கு 25 கி.மீ., தான் போக முடியும். அப்படிப் பார்த்தால் 5 நாட்கள் பிடிக்கும். தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் மாற்றி அமைக்க வேண்டிய பணிகளை இந்த ஆய்விலேயே கூறினால் எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு இந்த முதற்கட்ட ஆய்வு பயனுள்ளதாக இருக்கும். மார்ச் மாத இறுதிக்குள் பணிகள் முழுவதும் முடிக்க வேண்டும். இந்த மார்க்கத்தில் 32 பெரிய பாலங்களும், 290 சிறிய பாலங்களும் உள்ளன. முக்கியமாக பாலங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
பாலங்கள் நிறைய இருந்ததால் கட்டிமுடிக்க காலதாமதாதம் ஏற்பட்டது. இந்த மார்க்கத் தில் 30 ஆயிரம் இரும்பு பிட்டிங் குகள் திருடுபோயுள்ளன. வேறெங்கும் இதுபோல நடந்ததில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் பணிகள் தாமதமாகியுள்ளன. எப்படியும் வரும் மார்ச் இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு தான் ரயில் ஓட்டப்படும். தற்போது சரக்கு ரயில் ஓட்டுவதற்கு போதுமான வசதிகள் உள்ளன. தேவைப்படும்போது சரக்கு ரயிலை இயக்குவதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு ராமநாதன் கூறினார். பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்.நாயுடு கூறும் போது, இது ஒரு முதற்கட்ட ஆய்வுதான். இது வரை ஆய்வு செய்ததில் முடிக்கப்பட்ட பணிகளில் 90 சதவீதம் திருப்தியாக உள்ளது. பணிகள் முழுவதும் முடிந்த பின்னர் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றார்.

விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில் பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
விழுப்புரத்துக்கும், மயிலாடுதுறைக்கும் இடையே 122 கி.மீ. தொலைவுக்கு ரூ.400 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜி.எஸ். நாயர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.இப்பணிகள் தொடங்கியதையொட்டி, இப்பாதையில் 2006-ம் ஆண்டு ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பணிகள் நிறைவடைந்து, கடந்த மாதம் 5-ம் தேதி முதல் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, கடந்த 10-ம் தேதி தென்னக ரயில்வே மேலாளர் தீபக் கிரீசன் சோதனை ரயில் மூலம் இப் பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மார்ச் மாதம் இறுதியில் பணிகள் முழுமையாக முடிவுறும். அதன் பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்தவுடன் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜி.எஸ். நாயர் வெள்ளிக்கிழமை தனி டிராலி மூலம் மயிலாடுதுறையிலிருந்து ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், சிதம்பரம் வரையிலான பாதையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். ரயில்பாதை, பாலங்கள், கட்டடங்கள், சிக்னல்கள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் உறுதித்தன்மை குறித்து 30 நிமிடங்கள் ஆய்வு நடத்தினார்.ஆய்வின்போது ஆணையருடன் திருச்சி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன், மேலாளர் (இயக்குதல்) முருகுதாஸ், உதவிகோட்ட மேலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
கட்டுகள்
கடலூர்,
ரயில் போக்குவரத்து
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா விடுத்துள்ள அறிக்கை:
விழுப்புரம்&மயிலாடுதுறை இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கி 4 வருடங்களாகிறது. இன்னும் முடிந்தபாடில்லை. ரயில்வே அதிகாரிகள் மாதந்தோறும் ஒவ் வொரு தகவலை கூறி வருகின்றனர். இதனால் ஏழை, எளிய மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல அவதிப்படுகின்றனர். தனியார் ஆம்னி பேரூந்துகளின் அதிக கட்டணத்தால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் திருச்சி முதல் சென்னை வரை 336 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அகல பாதையாக மாற்றும் பணி 13 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கிலோ மீட்டர் அகல பாதையை 4 வருடம் வரை கால தாமதமானதற்கு காரணம் என்ன.
பிப்ரவரி 10ம் தேதி ரயில்வே பொதுமேலாளர் தீபக்கிர்ஷன், பணிகளை ஆய்வு செய்து விட்டு, மார்ச் இறுதியில் பயணிகள் ரயில் ஓடும் என கூறியுள்ளார். சிதம்பரம் ரயில் நிலைய கட் டிடப் பணி 2004ம் ஆண்டு துவங்கி இன்று வரை நிறைவு பெறாமல் உள்ளது.
எனவே, ரயில்வே அதிகாரிகள் அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடித்து மார்ச் இறுதிக்குள் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மா.கம்யூ., கோரிக்கை
கட்டுகள்
கடலூர்,
ரயில் போக்குவரத்து
கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமானப்பணி விரைவில் துவக்கம்
கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள ரயில்வேகேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை ரயில்வே மேம்பாலத்திற்கு செலவிடப்பட்டதால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தடைபட்டு வந்தது. தற்போது விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அகல ரயில்பாதைப்பணி முடிவடைந்து ஒரு சில மாதங்களில் ரயில் விடப்படவுள்ளது. இதனால் முன்பு இருந்ததைவிட அதிக எண்ணிக்கையில் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறை மார்க்கத்தில் வரவுள்ளது. அதனால் ரயில்வே கேட் அடிக்கடி திறந்து மூட வேண்டிய நிலை உள்ளதால் லாரன்ஸ் ரோட்டில் நிரந்தரமாக போக்குவரத்து ஸ்தம்பிக்கும். எனவே லாரன்ஸ் ரோட்டில் உடனடியாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு நலச்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின. தற்போது இந்த சுரங்கப்பாதை பணிக்காக அரசு 5.6 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. அதனால் சுரங்கப் பாதை அமைப்பதற்கான டெண்டர் விடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரயில்வேதுறை மூலம் செய்யப்படும் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ரயில்வே துறையும் பாலம் கட்டுமானப்பணி வரைபடத்தை தென்னக ரயில்வே தலைமை பொறியாளருக்கு (பாலங்கள் மற்றும் வரைபடம்) அனுப்பி வைத்துள்ளது. ரயில்வே பணி முடிந்தவுடன் தொடர்ந்து நெடுஞ்சாலை பணிகள் துவங்கப்படவுள்ளது. லாரன்ஸ் ரோட்டில் ராட்சத குடிநீர் குழாய்கள், கேபிள்கள் செல்வதால் அதை அகற்றி மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டுகள்
கடலூர்,
சுரங்கப்பாதை,
ரயில் போக்குவரத்து
விழுப்புரம்- மயிலாடுதுறை சரக்கு ரயில் 3 முறை இயக்கம்
விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் நேற்று ஒரே நாளில் மூன்று முறை சரக்கு ரயில் இயக்கப்பட்டது. விழுப்புரம்-மயிலாடுதுறை 122 கிலோ மீட்டர் தூரம் மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல பாதையாக மாற் றும் பணி கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. ரயில்பாதை பணி முடிவடைந்ததை தொடர்ந்து இலகு ரக இன்ஜின் சோதனை ஓட்டம் நடத் தப்பட்டது.
கடந்த 5ம் தேதி இரண்டு சரக்கு ரயிலும், 7 மற்றும் 17ம் தேதிகளில் தலா ஒரு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. நேற்று ஐந்தாவது முறையாக மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. மயிலாடுதுறையில் காலை 7.30 மணிக்கு 45 காலி வேகன்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காலை 9.58 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனை கடந்து விழுப்புரம் சென்றது. பின் விழுப்புரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட சரக்கு ரயில் மாலை 3.20 மணிக்கு கடலூரை கடந்து கும்பகோணம் சென்றது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வருவதற்காக தஞ்சாவூருக்கு மற்றொரு சரக்கு ரயில் இயக்கப்பட்டது.

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல பாதையில் மூன்றாண்டுக்கு பின் சரக்கு ரயில் வெள்ளோட்டம்
விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்து நேற்று வெள்ளோட் டம் விடப்பட்டது.
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றும் பணி, கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. முதல் கட்டமாக சீர்காழி - மயிலாடுதுறை இடையே 22 கி.மீ., தூரம் பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு ஜன., 28ம் தேதி முதல், சரக்கு ரயில்கள் இயங்கி வருகிறது. இரண்டாம் கட்டமாக 48 கி.மீ., கடலூர் - விழுப்புரம் பாதை பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி, கடலூர் - விழுப்புரம் ரயில்வே பாதையில், இலகு ரக இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.மூன்றாம் கட்டமாக கடலூர் - சிதம்பரம் வரையிலான பாதை, பணிகள் முடிக்கப்பட்டது. இதையடுத்து, விழுப்புரத்திலிருந்து - மயிலாடுதுறைக்கு நேற்று காலை 7.40 மணிக்கு 3,632 டன் அரிசி ஏற்றிய, 41 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்றும், அதே போல் காலை 7.35 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு 3,630 டன் சர்க்கரை ஏற்றிய 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலும் வெள்ளோட்டமாகப் புறப்பட்டன.
இரண்டு ரயில்களும் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் செல்லவும், குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் 20 முதல் 30 கி.மீ., வேகத்திலும், செல்ல டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ழுப்புரத்திலிருந்து புறப்பட்ட சரக்குரயில் மதியம் 2 மணிக்கு மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட ரயில் 1.45 மணிக்கும் விழுப்புரத்தையும் சென்றடைந்தன.ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்.நாயுடு சோதனை செய்து, "பயணிகள் ரயில்கள் இயக்கப்படலாம்' என தரச்சான்று அளித்தவுடன், ரயில்கள் இயங்கும். இன்னும் முழுமை பெறாமல் உள்ள பணிகள் முடிவடைந்து, சோதனை செய்து தரச்சான்று வழங்க மூன்று முதல் ஐந்து மாதங்கள் ஆகும் என தெரிகிறது.
தாமதத்தை மறைக்க வெள்ளோட்டம் :சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டாலும், பணிகள் முழுமையாக முடித்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இதனால் அனைத்து இடங்களிலும் "பாயின்ட்'களை, ஊழியர்களே இயக்கினர். "கேட்'கள் முழுமையாக மூட முடியாமல், ஸ்டேஷனில் பணிபுரிபவர்கள் கேட் அருகே வந்து, சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, ரயிலை அனுப்பி வைத்தனர். பணி துவங்கி மூன்றாண்டுகளுக்கு மேல் ஆவதால், காலதாமதத்தை மறைக்க, அவசர அவசரமாக சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது.சிக்னல்கள் வேலை செய்யாத பட்சத்திலும், எந்த நேரத்தில் ரயில் வரும் என தெரியாத நிலையில், ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்கும் போதிலும் விபத்துகள் நேர வாய்ப்புகள் உள்ளது.
பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில், "லூப் லைன்' பணிகளே நிறைவடையாத நிலையில் உள்ளது.ஆர்.வி.என்.எல்., நிறுவனம் பணிகளை முழுமையாக முடித்து, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்த பிறகே, பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் விரைவில் சுரங்க பாதை பணிகள் தொடங்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல்
கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களை தொடர்ந்து ரூ.14 கோடி செலவில் சூரப்பன் சாவடியில் மேம்பாலமும் கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து ரூ.14 கோடி மதிப்பீட்டில் கடலூர் சூரப்பன் சாவடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் லாரன்ஸ் ரோட்டில் சுரங்ப்பாதை அமைக்கும் பணி நிதி ஒதுக்கீடு செய்தும் நடைபெறவில்லை. சுரங்கப்பாதை அமைக்க கோரி பல்வேறு பொதுநல இயக்கங்கள் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கத்தினரும் சுரங்கப் பாதை அமைக்க கோரி போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த நிலையில் கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மருதவாணனுக்கு கடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 5-10-2000 அன்று ரூ.14 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்த வகையில் லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதைக்கு ரூ.1 கோடி அனுமதி அளிக்கப்பட்டது. இது குறைவான மதிப்பீட்டில் இருப்பதால் சுரங்கப்பாதை திட்டம் ரூ.5.37 கோடியில் தயாரிக்கப்பட்டு மற்றும் மின் கம்பிகள் குடிநீர் குழாய்கள் விளக்கு வசதி உள்ளிட்டவற்றிற்கு ரூ.1.83 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.7.20 கோடி திட்டத்திற்கு நிதித்துறை அனுமதி அளித்துள்ளது.
லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதை வடி வமைப்பு என்பது தலைமை பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) இறுதிப்படுத்தப்படுகிறது. இறுதியில் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்ட உடன் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் லாரன்ஸ் சாலையில் உடனடியாக தொடங்கப்படும். லாரன்ஸ் சாலையில் ரயில் போக்குவரத்து ஆரம்பித்தாலும் இந்த சுரங்கப்பாதை வடி வமைப்பின்படி இப்பணிகள் தொடங்கும்.
இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டுகள்
சுரங்கப்பாதை,
ரயில் போக்குவரத்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)