கோரிக்கை பதிவு

நாகை, கடலூரில் 3 மீன்பிடி துறைமுகங்கள்

நாகப்பட்டிணம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உலக வங்கி உதவியுடன் சுமார் 77 கோடி செலவில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன.உலக வங்கியின் இ.டி.ஆர்.பி. என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் நாகப்பட்டிணம் மீன்பிடிதுறைமுகம் ரூ.35 கோடியே 65 லட்சம் செலவிலும், அந்த மாவட்டத்தில் உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகம் ரூ.27 கோடியே 56 லட்சம் செலவிலும் புதிய மீன்பிடி துறைமுகங்களாக புதுப்பிக்கப்பட உள்ளன.

இதேபோல் கடலூர் மாவட்டம் போர்ட்டனோவா அன்னக்கோவில் என்ற இடத்தில் ரூ.131/2 கோடி செலவில் மீன்பிடி தளம் அமைக்கப்படுகிறது.

இந்த மீன்பிடி துறைமுகங்களில் மீனவர்கள் படகுகளை நிறுத்திக்கொள்ளவும், மீன்களை விற்பனை செய்வதற்கும், சுனாமி போன்ற அவசர காலங்களில் படகுகளை நிறுத்தவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.
உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த புதிய மீன்பிடி துறைமுகங்கள் திட்டத்திற்கு முதலமைச்சர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலாளர் கி.தனவேல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக