கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
மர்ம நோயால் பன்றிகள் இறப்பு கடலூரில் தொற்று நோய் அபாயம்
கடலூரில் மர்ம நோய் காரணமாக இறந்த 50க்கு மேற்பட்ட பன்றிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி கெடிலம் ஆற்றங்கரையில் வீசுவதால் தொற்று நோய் பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.கடலூர் புதுப்பாளையம் மற்றும் முதுநகர் பகுதிகளில் 500க்கு மேற்பட்ட பன்றிகளை வளர்க்கின்றனர். கடந்த சில தினங்களாக கடலூர் புதுப்பளையம் பகுதியில் மர்ம நோய் காரணமாக தினமும் ஐந்திற்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தன. அவற்றை அதன் உரிமையாளர்கள் கெடிலம் ஆற்றங்கரையில் குழிதோண்டி புதைத்தனர். ஆனால் தொடர்ந்து அதிகளவில் இறந்ததால் கடந்த சில நாட்களாக இறக்கும் பன்றிகளை சாக்கில் கட்டி கெடிலம் ஆற்றங்கரையில் வீசி விடுகின்றனர்.இவ்வாறு 50க்கும் மேற்பட்ட பன்றிகளை கடலூர் புதுப்பாளையம் கெடிலம் ஆற்றின் கரையில் ஆங்காங்கே வீசியுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. தகவல் அறிந்த கடலூர் கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் குழு புதுப்பாளையம் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பன்றி வளர்ப்பவர்கள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்காததால் நோய் குறித்து ஆய்வு செய்ய ரத்த மாதிரி எடுக்க முடியாத நிலை உள்ளது.தொடர்ந்து பன்றிகளை மர்ம நோய் தாக்கி இறப்பதாலும், அவைகளை திறந்த வெளியில் வீசுவதாலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக