கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பரவி வரும் பேனர் கலாசாரம் : பொதுமக்கள், வியாபாரிகள் கடும் பாதிப்பு

கடலூர் மாவட் டத்தில் பரவியுள்ள டிஜிட் டல் பேனர் கலாசாரத்தினால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்."பருப்பு இல்லாமல் கல்யாணமா' என்பார்கள். ஆனால் இன்று டிஜிட்டல் பேனர் இல்லாமல் விழாவா என்கிற நிலை மக்கள் மத்தியில் வியாபித்துள்ளது. அரசு விழா, அரசியல் விழா, அமைச்சர் கள் விழா, கோவில் திருவிழா, மஞ்சள் நீராட்டு, காதணி விழா, பிறந்த நாள், காலமானார், நினைவஞ்சலி போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரதான சாலைகளில் டிஜி ட்டல் பேனர் வைக்கும் கலாசாரம் பரவியுள்ளது.தன்னுடைய உருவ படத்தை பேனர்களில் போட்டு பல நாட்கள் மக்கள் பார்வைக்கு வைப் பதற்காக ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவர் பங்கேற்கும் விழாவை பயன்படுத்திக் கொண்டு சிலர் "மெகா சைசில்' 60, 70 அடி நீளத்திற்கு மேல் பேனர் வைக்கின்றனர். குறிப்பாக மஞ்சக்குப்பம், புதுச்சேரி - கடலூர் எல்லை, நியூசினிமா போன்ற குறுகலான இடங் களில் பேனர்கள் வைப்பதால் வாகனங்கள் வருவதை கவனிக்க முடியாமல் அதிக விபத்து ஏற்படுகிறது.அத்துடன் சாலையில் உள்ள கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிப்பதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. சாலை என்பது டிஜிட்டல் பேனர் வைப்பதற்கான இடம் என ஆகிவிட்டது. இதனை வைப்பதற்கு போலீசில் முறையாக அனுமதி வாங்குவதும் கிடையாது.அனுமதியின்றி வைக் கப்படும் பேனர்களை போலீசார் கண்டு கொள்வதும் கிடையாது. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 30 நாட் களுக்கு முன்பே பேனர் வைப்பதும், நிகழ்ச்சி முடிந்து 30 நாட்கள் வரை கூட அப்புறப்படுத்தாமல் இருப்பதும் கடலூர் மாவட்டத்தில் சகஜமாகி விட்டது.இந்த பேனர் தயாரிப்பு ஷீட்டுகள் கூரை மீது போடுவதற்கு பயன்படுத்தப்படுவதால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் கிழித்துச் சென்று விடுகின்றனர். இதனால் பேனர் வைத்தவர்கள் தங்களின் எதிரணியினர் தான் வேண்டுமென்றே கிழித்து விட்டதாக கூறி ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த போலீஸ் துறை விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், கடலூர் மாவட் டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் மோசமாக பரவி வருகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்கள்  பாதிக்கப்படுகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் பாகுபாடின்றி பேனர் களை அகற்றுமாறு எஸ்.பி., யிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனைத்தொடர்ந்தும் பேனர் வைப்பதை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தலைவர்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக கட்சித் தொண்டர் களால் வைக்கப்படும் பேனர்கள் பொது மக்களின் முகம் சுளிப்பிற்குள் ளாகி சம்மந்தப்பட்ட தலைவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டு மக்கள் செல்வாக்கை இழக்கும் நிலைதான் ஏற்படும்.
கலெக்டர் கடும் எச்சரிக்கை...:இந்நிலையில் கலெக்டர், டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்க  முன் அனுமதியை 7 நாட்களுக்கு முன்பே  பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன் வைத்து முடிந்ததும் இரண்டு நாட்களில் அவர்கள் செலவிலேயே அகற்ற வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விளம்பர பலகை அமைத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வைத்து சட்டவரம்பை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனுமதியற்ற விளம்பர பேனர்கள் மற்றும் சாரங்கள் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் போலீஸ் துறையே அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான செலவினத் தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்வதோடு, வழக்கும் தொடரப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக