ஏனோ அமைச்சருக்குப் பிடிக்காமல்போனதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவருக்கும் ஸீட் கிடைக்காது என்ற பேச்சு மாவட்டம் முழுக்க அடிபடுகிறது. இறங்கி விசாரித்தால், மடை திறந்த வெள்ளமாகக் கொட்டுகிறார்கள்.
''ஆரம்பத்தில் இருந்தே அமைச்சருக்கும், அந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கும்
எம்.எல்.ஏ-க்களுக்கு இந்த தடவை ஸீட் கொடுக்க மாட்டார். தவிர, தொகுதி மறு சீரமைப்பில்... சபா.ராஜேந்திரனோட நெல்லிக் குப்பம் தொகுதி காணாமல்போயிடுச்சு. அதனால், அவர் பண்ருட்டி அல்லது நெய்வேலிக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கார். ஆனா, அவர் எந்தத் தொகுதியைக் கேட்டாலும், அதை கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிவிட அமைச்சர் முடிவு பண்ணிட்டார். பண்ருட்டி ஒன்றியத்தில் சபாவுக்கு கட்சி செல்வாக்கு அதிகம். அதனால், அ.தி.மு.க. தொழிற்சங்கப் பிரமுகர் ஒருவரின் மகனை தி.மு.க-வுக்கு அமைச்சர் இழுத்துட்டார். இப்போ, பண்ருட்டி ஒன்றியமே அவருடைய கையில் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உண்டாக்கிட்டாங்க.
அதேபோல, கடலூர் தொகுதியில் அய்யப்பனுக்கு ஸீட் கொடுக்காத எம்.ஆர்.கே., அங்கே இளைஞர் அணியைச் சேர்ந்த பழக்கடை ராஜாவையும், ஏ.ஜி.ராஜேந் திரனின் மகன் சுந்தரையும் முன்னிலைப்படுத்த ஆரம்பிச்சுட்டார்!'' என்கிறார்கள் எம்.ஆர்.கே-யின் மூவ் தெரிந்த தி.மு.க-வினர்.
''கடந்த முறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மத்திய சாலை மேம்பாட்டு நிதியான

கடலூர் மாவட்டப் பொறுப்பாளரான உடன்பிறப்பு ஒருவர், ''தனக்குப் பிடிக்காத ஆட் களோட பெயரைப் போட்டு பத்திரிகை அடிச்சா, அமைச்சர் அந்த நிகழ்ச்சிக்கு வர மாட்டார். சமீபத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம் தன் தங்கச்சியோட கல்யாணப் பத்திரிகையில் அமைச்சர் பொன்முடியின் படத்தைப் போட்டதால், அந்தக் கல்யாணத்தையே எம்.ஆர்.கே. புறக் கணிச்சார். கட்சி நிகழ்ச்சிகளை முன்கூட்டி சொல்லாமல் பிடிக்காத ஆட்களைத் தவிக்கவிடுவதும் எம்.ஆர்.கே-வுக்கு வழக்கம். பிடிக்காத நிர்வாகிகள் இருக்கும் ஏரியாவுக்கு, அரசு நலத் திட்ட உதவிகளும் சரிவரக் கிடைக்காது!'' என்றார் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தோடு.
சொந்தக் கட்சிக்காரர்களிடம் இந்த அளவுக்கு முரண்டு காட்டும் அமைச்சர், பா.ம.க-விடம் மட்டும் பாசமழை பொழிவாராம். நெய்வேலி தொகுதியில் முன்னாள் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளரான குணசேகரன் நடத்திய ஒரு விழாவை எம்.ஆர்.கே. புறக்கணித்ததின் பின்னணியையும் 'பா.ம.க. பாசத்'தோடு முடிச்சிடுகிறார்கள் தொகுதி உடன்பிறப்புகள்.
இது குறித்துப் பேசும் எம்.ஆர்.கே-யின் ஆதரவாளர்கள், ''சபா.ராஜேந்திர னையும் அய்யப்பனையும், அமைச்சர் மரியாதையோடுதான் நடத்துகிறார். கட்சி விழாக்களிலும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சிப் பாகுபாடு பார்க்காமல் மக்கள் நலனுக்காக நிதி ஒதுக்குவதைக்கூட அவர்கள் குற்றமாக்குவதில்
இதற்கிடையில் எம்.ஆர்.கே-யை யும் இரு எம்.எல்.ஏ-க்களையும் நேரில் அழைத்து ஸ்டாலின் சமாதானப் பஞ்சாயத்துப் பேசியதாகவும் ஒரு தகவல்!
- கரு.முத்து |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக